FAITH COMES FROM HEARING. ROMANS 10:17




THE SILENT HEROES: OYSTERS | மௌன ராஜாக்கள்: முத்து சிப்பி

LESSONS FROM THE OYSTER

LESSONS FROM THE OYSTER

அன்புடையீர், வணக்கங்கள்



நமது பைபிளில், முத்து - மிகவும் விலை மதிப்புள்ளதாக அடையாளப் படுத்தபட்டுள்ளது.
உதாரணமாக,
மத்தேயு 13: 46
46. விலை உயர்ந்த ஒரு முத்தைக் கண்டவுடன் அவர் போய்த் தமக்குள் யாவற்றையும் விற்று அதை வாங்கிக்கொள்கிறார். விண்ணரசு அந்நிகழ்ச்சிக்கு ஒப்பாகும்.
இங்கு, முத்து = பரலோக அழைப்பை அடையாளப்படுத்தும்.
மத்தேயு 7:6
உங்கள் முத்துகளைப் பன்றிகள் முன் எறிய வேண்டாம்: எறிந்தால் அவை தங்கள் கால்களால் அவற்றை மிதித்து விடும்.
இங்கு, முத்து = இறை உண்மைகளை = சத்தியங்களை அடையாளப்படுத்தும்.

இவ்வாறு, பைபிளில் பல இடங்களில் உயர்வாக குறிப்பிடபட்டுள்ள முத்து எவ்வாறு உருவாகிறது என்று அறிவியல் ரீதியாகவும், இந்த இயற்கையின் அதிசயம் மூலம் நாம் அறியும் மாபெரும் பாடம் என்ன என்றும் அறிய போகிறோம்.
சிப்பியின் உடற்கட்டமைப்பு

பரவலாக, நாம் அணியும் ஆபரணங்கள் தங்கள், வெள்ளி போன்ற உலோகங்களாலும், ரத்தினங்களினாலும் செய்யப்படுபவை. ஆனால், முத்துக்கள் - உயிரோடு இருக்கும் ஒரு உயிரினத்தால் - அதாவது சிப்பிக்குள் இருக்கும் OYSTER என்று அழைக்கப்படும் சிப்பி பூச்சியால் உருவாக்கப்படுகிறது.
சிப்பி பூச்சி, சிப்பியுடன் நெகிழ் நாரினால் (elastic ligament) இணைக்கப்பட்டுள்ளது. இதுவே அந்த தோல்களைத் திறந்த நிலையிலே வைத்திருக்கிறது;
அதன் உணவு உள்ளே செல்வதற்கு மட்டும், சிறு துவாரங்கள் உண்டு.
இந்த OYSTER வளர வளர அதன் வெளியில் உள்ள ஒடும் (சிப்பி - SHELL) வளரும்.
அந்த ஒட்டில் உள்ள MANTLE எனப்படும் திசுக்கள் தான் கடல்நீரிலிருந்து தாதுப் பொருட்களை எடுத்துக்கொண்டு, அவற்றை சிப்பியின் வலுவான வெளிப்புற உறை உருவாகப் பயன்படும் நேக்கர் - NACRE எனப்படும் கால்சியம் கார்பனேட் (CALCIUM CARBONATE - CaCO₃) ஆக மாற்றுகின்றன.
வேதனையான வேதியியல்

வெளியில் இருந்து மண் துகள்கள் அல்லது வேறு சிறிய உயிரினங்கள், சிப்பியின் ஒடுகளுக்கு இடையே நுழைந்து MANTLE எனப்படும் அந்த திசுக்களில் படும் போது, அது சிப்பி பூச்சிக்கு எரிச்சலையும் வலியையும் உண்டாக்குகிறது.
அந்த வலியில் இருந்து தப்பிக்க, சிப்பியின் இயற்கை எதிர்வினை - அதன் மீது ஒரு பாதுகாப்பு உறை ஒன்று போடுவதற்காக, அதே நேக்கர் (Nacre) எனப்படும் கால்சியம் கார்பனேட் (Calcium Carbonate) மற்றும் கோன்சியோலின் (Conchiolin) என்ற புரதத்தையும் சேர்த்து அடுக்குகளாகச் சுரக்கிறது.
பல வருடங்கள் ஆக ஆக, இந்த அடுக்குகள் ஒன்று சேர்ந்து மெல்லிய சுற்றுச்சுவர்கள் (Concentric layers) உருவாக்கி, இறுதியில் ஒரு முத்து (PEARL) ஆக மாறுகிறது.
அதாவது, வெளியில் துன்பம் விளைவிக்க வந்த அந்த வெளிப்பொருள் மேல், பல அடுக்குகளாக சுரக்கப்பட்ட நேக்கர் (Nacre) தான் முத்து.
நம்மை முத்தாக மாற்றும் சோதனைகள்

ஒவ்வொரு முத்தும், வேதனையை அமைதியாக எதிர் கொண்டதன் அடையாளமாக இருக்கிறது.
இங்கு, நாம் நம்மை நிறுத்தி பார்ப்போம்
அந்த OYSTER யின் ஒடு போல, நாமும் கடவுளை அறிந்து, பயத்துடன் அவரை அண்டிக் கொள்ளும் போது, நமக்கு அவர் தமது பாதுகாப்பையும் அன்பையும் தருகிறார்.
சிப்பி பூச்சிக்கு எரிச்சலையும் வலியையும் தந்த வெளிப்பொருள்கள் போல, நமக்கும் பல சோதனைகள் அன்றாடம் வருகின்றது. வலியை தந்த வெளிப் பொருள்களை தள்ளி விட சிப்பி பூச்சிக்கு பலம் இல்லை. ஆனால், அது அதன் பொறுமையான முயற்சியினால், அதை எதிர் கொள்கிறது.
அது போல, நாமும் நமது சோதனைகளை நமது நற்குணங்களினால்
(அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நன்னயம், நம்பிக்கை,கனிவு, தன்னடக்கம் - கலாத்தியர் 5:22,23) எதிர் கொள்ளும் போது, அந்த நற்குணங்கள் நாளடைவில் நமது சோதனைகளை மூடி, நம்மை கடவுள் விரும்பும் விலையேற பெற்ற முத்தாக மாற்றுகிறது.
Each pearl is the result of pain patiently endured and defense turned into beauty.
சிலுவை சுமந்தோராய் சீடராகுவோம்

மௌனமாய், பொறுமையாய் இருந்து சாதிக்கும் OYSTERகளை போல, நமது கடவுளாம் பரம தந்தையிடம் அடைக்கலம் அடைந்துள்ள நாமும், நமது இந்த விசுவாச ஓட்டத்தை கடவுள் அருளும் தூய வல்லமையின் பெலத்தால் பொறுமையுடன் ஓடுவோம்.
நம்மை தேடி வரும் சோதனைகளை, நமது நற்குணங்களினால் படிப்படியாக வென்று, நமது கடவுளின் நகரத்தில் (திருவெளிப்பாடு 21:21) முத்தாக மாறி, அவருக்கு அலங்காரமாக இருப்போம்.
அனுதினமும் நமது சிலுவையை மகிழ்ச்சியுடன் சுமப்போம்.
வாசிப்போம்:
மத்தேயு 16:24
என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும்
நமது கடவுளாம் பரம தந்தைக்கும், இறை மகனாருக்கும் மாட்சி உண்டாவதாக.ஆமென்.


Comments

Post a Comment