2-F. METHOD 6: DISCOVERING THE HIDDEN TRUTH IN THE SHADOWS | நிழல்களில் மறைந்துள்ள உண்மைகள்

UNDERSTANDING SCRIPTURE - THE SEVEN METHODS - 6 of 7 (DISCOVERING THE HIDDEN TRUTH IN THE SHADOWS)

UNDERSTANDING SCRIPTURE - THE SEVEN METHODS - 6 of 7 (DISCOVERING THE HIDDEN TRUTH IN THE SHADOWS)

1. நிழலில் உண்மைகள்
அன்புடையீர், வணக்கங்கள். 🙂
நம் தந்தையாம் கடவுளிடமிருந்தும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் உங்களுக்கு அருளும் அமைதியும் உரித்தாகுக!

நாம் முந்தைய பாடத்தில்,
நமது பைபிளில் உள்ள அடையாளங்களையும் எண்களில் மறைந்துள்ள இறைத்திட்டத்தை புரிந்து கொள்வதற்கு அடிப்படையான விடயங்களை அறிந்து கொண்டோம்.
இந்தப் பாடத்தில், கடவுள் தமது திட்டத்தை அழகாக நமக்கு வெளிப்படுத்த பயன்படுத்தி உள்ள "நிழல் - பொருள்" என்ற முறையை பற்றி சில விளக்கங்களுடன் அறிய போகிறோம்.
2. நிழல் பொருள் என்றால் என்ன?
வாசிப்போம்
உரோமையர் 15:4
முற்காலத்தில் எழுதப்பட்டவை அனைத்தும் நமக்கு அறிவுரையாகவே எழுதப்பட்டன.
1 கொரிந்தியர் 10:11
அவர்களுக்கு நிகழ்ந்த இவையனைத்தும் மற்றவர்களுக்கு எச்சரிக்கையாக அமைகின்றன. இறுதிக்காலத்தில் வாழும் நமக்கு இவை அறிவுரையாக எழுதப்பட்டுள்ளன.
கொலோசேயர் 2: 17
அவைகள் வருங்காரியங்களுக்கு நிழலாயிருக்கிறது. அவைகளின் பொருள் கிறிஸ்துவைப்பற்றினது.

இந்த வசனங்களின் பொருள் என்னவெனில்,

முன்பு - பழைய ஏற்பாடு காலத்தில் நடந்த சம்பவங்கள்,

இப்போது - புதிய ஏற்பாடு காலத்தில் நடந்த சம்பவங்களுக்கு நிழலாக நடந்தவை.

அவற்றின் பொருள், நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை பற்றினது.
இதை புரிந்து கொள்வதற்கு, பழைய ஏற்பாடு காலத்தில் நடந்த சில சம்பவங்களை, புதிய ஏற்பாட்டு காலத்தில் நடந்தவற்றோடு ஒப்பிட்டு இந்த பாடத்தில் அறிய போகிறோம்.
அதற்கு முன்,
இந்த நிழல் - பொருள் அமைப்பை விளக்கும் மற்ற பைபிள் வசனங்களை அறிந்து கொள்வோம்.
3A. நிழல் - பொருள் அமைப்பை விளக்கும் வசனங்கள்
ஆதாம்
ரோமர் 15:4
ஆதாம் முதல் மோசே வரையில் இருந்தவர்கள் ஆதாமைப்போல் கடவுளின் கட்டளையை மீறிப் பாவம் செய்யவில்லை எனினும் சாவு அவர்கள்மீதும் ஆட்சி செலுத்திற்று: இந்த ஆதாம் வரவிருந்தவருக்கு முன்னடையாளமாய் இருக்கிறார்.
இவ்வசனம், ஆதாம், வரவிருந்தவருக்கு = நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவுக்கு முன்னடையாளம் என்கிறது.
ஆசாரியர்கள்
எபிரேயர் 8: 5
இவர்கள் (ஆசாரியர்கள்) செய்யும் ஆராதனை பரலோகத்திலுள்ளவைகைளின் சாயலுக்கும் நிழலுக்கும் ஒத்திருக்கிறது;
இசுரயேலர்கள் அமைத்த ஆசரிப்புக் கூடாரமும், ஆசாரியர்கள் மற்றும் பலிகள் அனைத்தும் பரலோகத்தில் உள்ளவைகளுக்கு நிழல்.

இது பற்றி பாடங்களில் அறியலாம்.
திருச்சட்டம் = நியாயப்பிரமாணம்
எபிரேயர் 10: 1
திருச்சட்டம், வரப்போகிற நன்மைகளின் நிஜம் அல்ல, அவற்றின் நிழல்தான்.
கொலோசேயர் 2: 16,17
16 ஆகையால், போஜனத்தையும் பானத்தையும் குறித்தாவது, பண்டிகைநாளையும் மாதப்பிறப்பையும் ஓய்வுநாட்களையுங்குறித்தாவது, ஒருவனும் உங்களைக் குற்றப்படுத்தாதிருபύபானாக.
17 அவைகள் வருங்காரியங்களுக்கு நிழலாயிருக்கிறது; அவைகளின் பொருள் கிறிஸ்துவைப்பற்றினது.
கடவுள், மோசே மூலமாக 619 நியாயயப் பிரமாண திருச்சட்ட கட்டளைகளை தந்தார்.

அவை ஒவ்வொன்றின் பொருளும் கிறிஸ்துவை பற்றினது என்று இவ்வசனம் மூலம் அறிகிறோம்.
அதாவது, நிழலாக வனாந்தரத்தில் இசுரயேலர்கள் உண்ட
மன்னா = பொருள் கிறிஸ்துவை பற்றினது.
அவர்கள், நிழலாக ஆசரிப்புக் கூடாரத்தில் செலுத்திய
பலி = கிறிஸ்துவை பற்றினது.
அவர்கள், நிழலாக கொண்டாடிய
கூடார பண்டிகை = கிறிஸ்துவை பற்றினது.
வனாந்தரத்தில் பாறையை அடித்த போது வந்த
தண்ணீர் = கிறிஸ்துவை பற்றினது.
அவர்கள், நிழலாக உண்ட
பஸ்கா ஆடு = கிறிஸ்துவை பற்றினது.
வனாந்தரத்தில் நிறுத்தப்பட்ட
வெண்கல பாம்பு = பொருள் கிறிஸ்துவை பற்றினது.
3B. நிழல் - பொருள் அமைப்பை விளக்கும் வசனங்கள்
இசுரயேலர்கள்
1 கொரிந்தியர் 10: 5,6
5 அவர்களில் (இசுரயேலர்கள்) அதிகமானபேர் வனாந்தரத்திலே அழிக்கப்பட்டார்கள்.
6 அவர்கள் இச்சித்ததுபோல நாமும் பொல்லாங்கானவைகளை இச்சியாதபடிக்கு, இவைகள் நமக்குத் திருஷ்டாந்தங்களாயிருக்கிறது.
இசுரயேலர்கள், எகிப்தில் இருந்து கானானுக்கு போகும் தங்களது வனாந்தர பயணத்தில், முறுமுறுத்து மோசேயுடன் சண்டை போட்டார்கள்.
நாமும், இந்த உலகத்தில் இருந்து பரமகானானுக்கு போகும் இந்த விசுவாச பயணத்தில், வீழ்ந்து போகாதபடி அவர்களுக்கு நேர்ந்தவை நமக்கு படிப்பினையாக உள்ளது.
வெள்ளமும் திருமுழுக்குக்கும் (ஞானஸ்நானம்)
1 பேதுரு 3; 20,21
20 நோவா பேழையைச் செய்து கொண்டிருந்த நாள்களில், எட்டுப்பேர் மட்டும் அந்தப் பேழையில், தண்ணீர் வழியாகக் காப்பாற்றப்பட்டனர்.
21 அந்தத் தண்ணீரானது திருமுழுக்கிற்கு முன்னடையாளம்.
இந்த வசனம், நோவா காலத்தில் வந்த பெருவெள்ளத்தில் அவரது குடும்பம், பேழைக்குள் இருந்து காப்பாற்றப்பட்டது = ஞானஸ்நானத்திற்கு ஒப்புமை படுத்துகிறது.
மகா பரிசுத்த அறை = பரலோகம்
எபிரேயர் 9: 24
கிறிஸ்து, உண்மையான மகா பரிசுத்த அறைக்கு முன்னடையாளமாய் இருப்பதுமான,
மனிதரின் கையால் அமைக்கப்பட்ட இவ்வுலகத் மகா பரிசுத்த அறைக்குள் நுழையாமல்,
பரலோகத்திற்குள்ளேயே நுழைந்திருக்கிறார்.
அங்கே இப்போது நம் சார்பாகக் கடவுளின் திருமுன் நிற்கிறார்.
இவ்வசனம், ஆசரிப்புக் கூடாரத்தின்
மகா பரிசுத்த அறையை = பரலோகத்திற்கு
அடையாளப்படுத்துகிறது.
இந்த பாடத்தில், இனி உண்மையான பொருளாகிய கிறிஸ்துவுக்கு நிழலாக காட்டப்பட்டுள்ள சில
நிழல் பொருள்களை
அறிவோம். .
4A. பஸ்கா ஆடும், இயேசு கிறிஸ்துவும் - நிழல்

எகிப்தில் அடிமைத்தனத்தில் இருந்த இஸ்ரயேல் மக்களை மீட்டெடுக்கும் முன்,
கடவுள் இஸ்ரயேல் மக்களை
பஸ்கா - கடந்து போகுதல்
அனுசரிக்க சொன்னார்.

பஸ்கா எப்படி அனுசரிக்க வேண்டும்?
வாசிப்போம்
நிழல்
யாத்திராகமம் 12: 1-3,5
கடவுள் மோசேயிடம்: இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பு முழுவதற்கும் நீங்கள் அறிவியுங்கள்:
உங்களுக்கு மாதங்களில் தலையாயது இம்மாதமே! ஆண்டில் உங்களுக்கு முதல் மாதமும் இதுவே!
அவர்கள் இம்மாதம் (ஆபிப் = நிசான்) பத்தாம்நாள் - 10,
குடும்பத்துக்கு ஓர் ஆடு, வீட்டிற்கு ஓர் ஆடு, ஒரு வயது, பழுததற்றதுமாக தேர்ந்தெடுத்துக் கொள்ளட்டும்.
6 இம்மாதம்
பதினான்காம் நாள் - 14
வரை அதை வைத்துப் பேணுங்கள்.அந்நாள் மாலை மங்கும் வேளையில் இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பின் அனைத்துச் சபையும் அதை வெட்ட வேண்டும்.

இவ்வாறாக, நிசான் 10ஆம் தேதி, தெரிந்து கொள்ளப்பட்ட பழுததற்ற ஒரு வயது ஆட்டுக் குட்டியை,

நிசான் 14 ஆம் தேதி வரைக்கும் வைத்திருந்து,
இஸ்ரயேல் மக்கள் ஒவ்வொருவரும் அவர்களது வீட்டில் சாயங்காலத்தில் (3 மணி) அடிக்க வேண்டும்.
(யாத்திராகமம் 12: 6)
இது நிழலாக நடந்த சம்பவம்.
4B. பஸ்கா ஆடும், இயேசு கிறிஸ்துவும் - பொருள் பொருள்:
வாசிப்போம்
யோவான் 12: 1,2
1 பஸ்கா பண்டிகைக்கு ஆறு - 6 நாட்களுக்கு முன்பு இயேசு பெத்தானியாவுக்கு வந்துசேர்ந்தார். அங்குதான் அவர் உயிரோடு எழுப்பிய லாசரு இருந்தான்.
2  அங்கே அவருக்குச் இரவு உணவு பரிமாறப்பட்டது.
3 அடுத்த நாள், பண்டிகைக்கு வந்திருந்த ஏராளமான மக்கள் இயேசு எருசலேமுக்கு வருகிறார் என்பதைக் கேள்விப்பட்டார்கள். அதனால், குருத்தோலைகளைப் பிடித்துக்கொண்டு அவரைப் பார்க்கப் போனார்கள்.
பஸ்கா பண்டிகைக்கு (நிசான் 14 க்கு) 6 நாட்களுக்கு முன்பு என்பது நிசான் 9 ஆம் தேதி.
பஸ்கா பண்டிகை - 1 நிசான் 14
2 நிசான் 13
3 நிசான் 12
4 நிசான் 11
5 நிசான் 10
6 நிசான் 9
நிசான் 9ஆம் தேதி பகலில் இயேசு பெத்தானியாவுக்கு வந்தார். அன்று மாலை (யூத கணக்கில் நிசான் 10 ஆரம்பமானது) லாசரு வீட்டில் அவருக்கு இரவு உணவு அளிக்கப்பட்டது. (யோவான் 12: 2)

யூதர்களுக்கு நாள் என்பது மாலை 6 மணிக்கு துவங்குவதால், இங்கு சாயங்காலம்(மாலை) என்பது நிசான் 10 ஆம் தேதி.

[யூதர்களின் நாட்காட்டியில் பயன்படுத்திய ஜாமங்கள் மற்றும் மணிவேளைகள் பற்றி நாம் அடுத்த பாடத்தில் (காலங்களில் அவர் திட்டங்கள் ) விரிவாக அறிய போகிறோம்.]
அடுத்த நாள், (நிசான் 10 பகலில்) நம் ஆண்டவர், ஜெருசலேம் நகருக்குள் நுழைந்த போது, மக்கள் குருத்தோலைகளை பிடித்துக் கொண்டு ஆரவாரித்தார்கள்.
பின், நான்கு நாட்களுக்கு பிறகு, நிசான் 14 ஆம் தேதி - நம் ஆண்டவர் சிலுவையில் அடிக்கப்பட்டார்.
நிசான்
9 பகல்
இயேசு
பெத்தானியாவுக்கு
சென்றார்.
(யோவான் 12:1)
மாலை
6
மணிக்கு
மேல்
நிசான்
10
நிசான்
10
இயேசு லாசரு
வீட்டில் இரவு
உணவு
உண்டார்
நிசான்
10
காலை
இயேசு
ஜெருசலேம்
நுழைந்தார்
நிசான்
11
ஜெருசலேம்
நிசான்
12
ஜெருசலேம்
நிசான்
13
ஜெருசலேம்
நிசான்
14
சிலுவையில்
அடிக்கப்பட்டார்
ஆக, நிசான் 10ஆம் தேதி, பஸ்கா ஆடு வீடுகளில் அடிக்கப்படுவதற்கு தேர்ந்தெடுக்கபட்டது போல,

நம் ஆண்டவர் நிசான் 10 ஆம் தேதி, சிலுவையில் அறையப்படுவதற்கு ஜெருசலேம் சென்றார்.
நிசான் 14ஆம் தேதி, ஆடு அடிக்கப்பட்டதை போல,

அதே நிசான் 14ஆம் தேதி, நம் ஆண்டவர் சிலுவையில் அறையப்பட்டு உயிர் நீத்தார்.
நாள் பஸ்கா ஆடு இயேசு கிறிஸ்து
நிசான்
10
பஸ்கா
ஆடு
வீடுகளில்
தேர்ந்தெடுக்
கப்பட்டது
இயேசு
எருசலேமுக்குள்
நுழைந்தார்
4 நாட்களுக்கு பின்பு
நிசான்
14
ஆடு
அடிக்கப்பட்டது
இயேசு
சிலுவையில்
அறையப்பட்டார்
வாசிப்போம்
1 கொரிந்தியர் 5: 7
நம் பாஸ்கா ஆடாகிய கிறிஸ்து பலியிடப்பட்டிருக்கிறார்.

5A. இரண்டு ஆடுகள் - நிழல்

பழைய ஏற்பாட்டில், கடவுள் இஸ்ரயேலருக்கு தினசரி எரிக்கப்பட வேண்டிய பலிகளை சமர்ப்பிக்க கட்டளையிட்டார். —ஒன்று காலை மற்றும் மற்றொன்று மாலை நேரத்தில்.


பழைய ஏற்பாட்டின் தினசரி பலிகளுக்கான கட்டளை
யாத்திராகமம் 29:38-41 :
38ஒரு வயது செம்மறிக்குட்டிகளை நாளுக்கு இரண்டு வீதம், எந்நாளும் நீ பலிபீடத்தில் பலியிடுவாய்.
39ஒரு செம்மறி ஆட்டுக் குட்டியைக் காலையிலும், இரண்டாவது செம்மறி ஆட்டுக்குட்டியை மாலை மங்கும் வேளையிலும் பலியிடு.
40இரண்டு படி அளவில் பத்தில் ஒரு அளவு மெல்லிய மாவை ஆட்டிப்பிழிந்த கால்கலயம் அளவு எண்ணெயில் கலந்து அதையும், நீர்மப்படையலாகக் கால்கலயம் அளவு திராட்சைப்படி இரசத்தையும் ஒரு செம்மறிக்குட்டியோடு படைப்பாய்.
41மாலைமங்கும் வேளையில் மற்றச் செம்மறிக் குட்டியைப் பலியிடுவாய். காலையில் செய்தது போலவே, உணவுக் காணிக்கைகளோடு நீர்மப்படையலையும் சேர்த்து ஆண்டவருக்கு இனிய நறுமணமாக நெருப்புப் பலியாக்குவாய்.

எண்ணாகமம் 28:3,4 :
3நீ அவர்களிடம் சொல்; நெருப்புப் பலியாக நீங்கள் ஆண்டவருக்குப் படைக்க வேண்டியது; அன்றாட எரிபலியாக எந்நாளும் செலுத்த ஒரு வயதுடைய பழுதற்ற இரண்டு ஆட்டுக்குட்டிகள்.
4இவற்றுள் ஒன்றைக் காலையிலும், மற்றதை மாலையிலும் பலியிட வேண்டும்.
இந்த காலையும் மாலையும் பலியின் நேரங்களை புரிந்து கொள்ள, யூதர்கள் பயன்படுத்திய கடிகார முறைமையை புரிந்து கொள்ள வேண்டும்.
5B. இரண்டு ஆடுகள் - பொருள்

யூதர்கள் பகல் நேரத்தை (சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனம் வரை) 12 சம அளவிலான மணிநேரங்களாக பிரித்தனர், மேலும் இரவை 4 காவல்களாக பிரித்தனர். நாளின் தொடக்கம் காலை 6 மணி (சூரிய உதயம்), முடிவு மாலை 6 மணி (சூரிய அஸ்தமனம்) ஆகும்.


யூதர் பகல் நேரம்
யூதர் மணிநேரம் நேரம் அதன் முக்கியத்துவம்
முதல் மணி காலை 6:00 சூரிய உதயம், யூத நாளின் ஆரம்பம்
இரண்டாம் மணி காலை 7:00 காலை நேர செயல்பாடுகள்
மூன்றாம் மணி காலை 9:00 காலை பலி / இயேசு சிலுவையில் அறையப்பட்டார்
நான்காம் மணி காலை 10:00 பொது கூடல்கள், போதனை
ஐந்தாம் மணி காலை 11:00 வேலை தொடரும்
ஆறாம் மணி மதியம் 12:00 இருள் பூண்டது
ஏழாம் மணி மதியம் 1:00 நாளின் மிகவும் வெப்பமான நேரம்
எட்டாம் மணி மதியம் 2:00 மாலை பலிக்குத் தயாராகுதல்
ஒன்பதாம் மணி மாலை 3:00 மாலை பலி / இயேசு மரணமடைந்தார்
பத்தாம் மணி மாலை 4:00 ஆலய பணிகள் முடிவடையும்
பதினொன்றாம் மணி மாலை 5:00 வேலை முடிந்து வீடு திரும்புதல்
பன்னிரண்டாம் மணி மாலை 6:00 சூரிய அஸ்தமனம் / யூத நாளின் முடிவு

யூத இரவு காவல்கள்
காவல் நவீன நேரம் அதன் முக்கியத்துவம்
முதல் காவல் மாலை 6:00 - 9:00 மாலை தொடக்கம்
இரண்டாம் காவல் இரவு 9:00 - 12:00 நள்ளிரவு அணுகும் நேரம்
மூன்றாம் காவல் நள்ளிரவு 12:00 - 3:00 நள்ளிரவு நேரம்
நான்காம் காவல் அதிகாலை 3:00 - 6:00 சூரிய உதயத்திற்கு முன்
கடவுளாம் பரமதந்தையின் ஆட்டிக் குட்டியான நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து, பழைய ஏற்பாட்டின் பலிகளை நிறைவேற்றும் வகையில், காலை மற்றும் மாலை பலிகளாக தன்னை அர்ப்பணித்தார்.

அதாவது, பழைய ஏற்பாட்டில், தினந்தோறும்

காலை 9AM க்கு முதல் ஆடு

பலி செலுத்தப்பட்டது. பின்பு

3 PM க்கு இரண்டாவது ஆடு பலி

செலுத்தப்பட்டது.
அதே காலை 9AM நேரம் தான், AD 33 நிசான் 14(ஏப்ரல்3) இல், நம் ஆண்டவர் சிலுவையில் அறையப்பட்டார்.

பின்பு, அன்று மாலை 3PM க்கு சிலுவையில் உயிர் நீத்தார்.
இயேசு மூன்றாம் மணி வேளையில் (காலை 9:00) சிலுவையில் அறையப்பட்டார்.
மாற்கு 15:25 (EXB): “அது காலை ஒன்பது மணி (மூன்றாம் மணி), அவர்கள் இயேசுவை சிலுவையில் அறையச் செய்தனர்.”

இயேசு ஒன்பதாம் மணி வேளையில் (மாலை 3:00) மரணமடைந்தார்
மத்தேயு 27:45-50 (EXB): “நண்பகல் (ஆறாம் மணி) முதல் மூன்று மணி வரை (மாலை 3:00) நாடு முழுவதும் இருள் ஆனது...”

கடவுளின் ஞானம்

கடவுளின் திட்டம் அவரது அளவில்லா ஞானத்தை வெளிப்படுத்துகிறது. பழைய ஏற்பாட்டில் உள்ள பலிகளில் இருந்து கிறிஸ்துவின் சிலுவை பயணம் வரை, அனைத்தும் துல்லியமான நேரங்களில் நிறைவேறியதை நாம் காண்கிறோம். அல்லேலூயா.


வாசிப்போம்
கொலோசேயர் 2: 17
அவைகள் வருங்காரியங்களுக்கு நிழலாயிருக்கிறது; அவைகளின் பொருள் கிறிஸ்துவைப்பற்றினது.

6A. ஆபிரகாம் ஈசாக்கை பலி செலுத்துதல் - நிழல்

நிழல்
நாம் அறிந்த படி, ஆபிரகாம் அவர்கள் தனது ஒரே மகன் ஈசாக்கை (மனைவி சாராள் மூலமாக பிறந்தவர்), பலிகொடுக்க ஒப்புக் கொடுத்தார்.
வாசிப்போபம்
ஆதியாகமம் 22: 2, 9-13
2 கடவுள் ஆபிரகாமிடம்: “உன் மகனை, நீ அன்பு கூரும் உன் ஒரே மகனான ஈசாக்கை அழைத்துக் கொண்டு, மோரியா நிலப்பகுதிக்குச் செல்.அங்கு நான் உனக்குக் காட்டும் மலைகளில் ஒன்றின் மேல் எரி பலியாக அவனை நீ பலியிடவேண்டும்” என்றார்.
9 ஆபிரகாமுக்குக் கடவுள் குறிப்பிட்டுச் சொல்லிய இடத்தை அவர்கள் அடைந்தனர்.அங்கே ஆபிரகாம் ஒரு பலிபீடம் அமைத்து அதன்மேல் விறகுக் கட்டைகளை அடுக்கி வைத்தார்.பின் தம் மகன் ஈசாக்கைக் கட்டி, பீடத்தின் மீதிருந்த விறகுக் கட்டைகளின் மேல் கிடத்தினார்.
10 ஆபிரகாம் தம் மகனை வெட்டுமாறு தம் கையை நீட்டிக் கத்தியைக் கையிலெடுத்தார்.
11 அப்பொழுது ஆண்டவரின் தூதர் வானத்தினின்று”ஆபிரகாம்! ஆபிரகாம்” என்று கூப்பிட, அவர்”இதோ! அடியேன்” என்றார்.
12 அவர், “பையன்மேல் கை வைக்காதே: அவனுக்கு எதுவும் செய்யாதே: உன் ஒரே மகனையும் எனக்குப் பலியிட நீ தயங்கவில்லை என்பதிலிருந்து நீ கடவுளுக்கு அஞ்சுபவன் என்று இப்போது நான் அறிந்து கொண்டேன்” என்றார்.
13 அப்பொழுது ஆபிரகாம் தம் கண்களை உயர்த்திப் பார்த்தார்.இதோ, முட்செடிகளில் கொம்பு மாட்டிக்கொண்டு நின்ற ஓர் ஆட்டுக்கிடாயைக் கண்டார்.உடனே ஆபிரகாம் அங்குச் சென்று அந்தக் கிடாயைப் பிடித்துத் தம் மகனுக்குப் பதிலாக எரி பலியாக்கினார்.
கடவுளின் கட்டளைக்கு இணங்கி, ஆபிரகாம் தனது ஒரே மகனை மனதளவில் ஒப்புக்கொடுத்து, பின் ஒரு ஆட்டினால், தனது மகனை மீண்டும் பெற்று கொண்டார் என்று அறிகிறோம்.
6B. ஆபிரகாம் ஈசாக்கை பலி செலுத்துதல் - பொருள்
பொருள்
ஆபிரகாம் அவர்கள் எவ்வாறு தனது ஒரே மகனை பலியாக ஒப்புக்கொடுத்து, பின்பு ஆட்டுக்கிடா மூலம் மீண்டும் பெற்றுக்கொண்டாரோ,

அது போல, நம் கடவுளாம் பரமதந்தையும் தமது ஒரே மகனார் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை சிலுவையில் பலியாக ஒப்புக்கொடுத்தார்.
வாசிப்போம்
எபிரேயர் 11: 17-19
17 ஆபிரகாம் சோதிக்கப்பட்டபோது ஈசாக்கைப் பலியிடத் துணிந்தது நம்பிக்கையினால்தான்.
18 “ஈசாக்கின் மூலமே, உன் வழிமரபு விளங்கும்” என்ற வாக்குறுதியை அவர் பெற்றிருந்தபோதிலும், அவர் தம் ஒரே மகனைப் பலியிட முன் வந்தார்.
19 ஏனெனில், இறந்தோரைக் கடவுள் உயிரோடு எழுப்ப வல்லவர் என்பதை அவர் உணர்ந்திருந்தார். எனவே, அவர் தம் மகனை மீண்டும் பாவனையாக பெற்றுக் கொண்டார். பின்பு நடக்கவிருந்ததற்கு இது ஓர் அறிகுறி.
நாம் இங்கு வாசித்த படி, ஆபிரகாம் தனது மகன் ஈசாக்கை பலியாக ஒப்புக்கொடுத்தது, (நிழல்)

பின்பு, நம் கடவுளாம் பரமதந்தை, தம் மகன் இயேசு கிறிஸ்துவை சிலுவை பலியாக ஒப்புக் கொடுத்ததற்கு அடையாளமாக (பொருள்) உள்ளது.
7. ஈசாக்கின் கீழ்படிதல் - நிழலும் பொருளும்

நிழல்:
ஆபிரகாம் தனது மகனை பலியாக ஒப்புக் கொடுத்த போது, ஈசாக்கிற்கு எத்தனை வயது இருக்கும்?
பொதுவாக கிறிஸ்தவ மரபு படி, அவர் சிறுவனாக இருந்த போது நடந்த சம்பவமாக பார்க்க படுகிறது.

ஆனால், யூத ஆய்வாளர்களின் கூற்று படி, அவர் 30 - 35 வயதுடையாவராக இருந்திருக்க வேண்டும் என்கிறார்கள்.
எப்படி?
ஈசாக்கு பிறக்கும்போது, ஆபிரகாமுக்கு 100 வயது. சாராளுக்கு 90.
இந்த சம்பவங்களுக்கு பிறகு, 23 ஆம் அதிகாரத்தில் சாராள் அவரது 127 ஆவது வயதில் இயற்கை ஏய்துகிறார். அதாவது, ஈசாக்கின் வயது 37.
இதை வைத்து பார்க்கும் போது, ஈசாக்கு 30 - 35 வயதுடையாவராக இருந்திருக்க வேண்டும் என்று எண்ண தோன்றுகின்றது.

(அதாவது கிட்டதட்ட நம் ஆண்டவர் சிலுவையில் மரித்த போது இருந்த 33-1/2 வயது.)

அப்படி பார்த்தால், ஆபிரகாம் ஈசாக்கை வலுக்கட்டாயமாக படுக்க வைத்து, கட்டையை வைக்க வாய்ப்பில்லை. ஏனென்றால், ஆபிராமும் வயது முதிர்ந்தவர்.
ஈசாக்கும் எதிர்ப்பு செய்திருக்க வேண்டும். ஆனால் செய்யவில்லையே!
இந்த கண்ணோட்டத்தில் பார்க்கும் போது, ஈசாக்கு தனது தந்தையின் கட்டளைக்கு கீழ்படிந்து, தாமாக தம்மை பலி கொடுக்க ஒப்புக் கொடுத்தது புரிகிறது.
பொருள்:
நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவும், பரமபிதாவுக்கு முடிவு பரியந்தம் கீழ்படிந்து தம்மை பலியாக ஒப்புக் கொடுத்தார்.
வாசிப்போம்
பிலிப்பியர் 2:7,8
7 தம்மையே வெறுமையாக்கி அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானார். மனித உருவில் தோன்றி,
8 சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார்.

8. ஈசாக்கு தூக்கிய விறகு கட்டை - நிழலும் பொருளும்

நிழல்:
ஈசாக்கு தான் பலி கொடுக்கப்பட தேவையான விறகு கட்டைகளை தாமே அவரது முதுகில் சுமந்தார் என்று வாசிக்கிறோம்.
ஆதியாகமம் 22: 6
பின் ஆபிரகாம் எரி பலிக்கு வேண்டிய விறகுக் கட்டைகளை எடுத்துத் தம் மகன் ஈசாக்கின் மீது வைத்தார்.

பொருள்:
நம் ஆண்டவரும் தமது சிலுவையை அவரது தோழில் சுமந்து சென்று பலியானார்.
யோவான் 19: 17
இயேசு சிலுவையைத் தாமே சுமந்துகொண்டு “மண்டை ஓட்டு இடம்” என்னுமிடத்திற்குச் சென்றார். அதற்கு எபிரேய மொழியில் கொல்கொதா என்பது பெயர்.

இது போல, அநேக நிழல் - பொருள் அடையாளங்கள், கடவுளின் திட்டத்தை வெளிப்படுத்தும் விதமாக பைபிளில் உள்ளது.

அவற்றை ஒவ்வொன்றாக பின் வரும் பாடங்களில் அறியப் போகிறோம்.
நாம் அடுத்த பாடத்தில், காலங்களை கணக்கிடுவது பற்றியும், அவற்றில் மறைந்து உள்ள இறைத் திட்டத்தை அறிந்து கொள்வதை பற்றி அறிய போகிறோம்.
சத்தியத்தை அறிந்து கொள்ள உடன் பயணிக்கும் தங்களை நம் பரமதந்தையும், இறைமகனார் இயேசு கிறிஸ்துவும் ஆசீர் அளிப்பார்களாக.
ஆமென்.

Comments