THE PARABLE OF THE LOST SHEEP
1. உவமைகளில் உள்ள இறைத்திட்டம்
அன்புடையீர், வணக்கங்கள். 🙂
நம் தந்தையாம் கடவுளிடமிருந்தும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் உங்களுக்கு அருளும் அமைதியும் உரித்தாகுக!
நாம் அறிந்திருக்கிறபடி, உவமைகளில் பரலோக ராஜ்ஜியத்தை குறித்த இரகசியங்கள் உள்ளது.
லூக்கா 8:10
மேலும் உவமைகளில், தீர்க்கதரிசனங்களும் உண்டு.
வாசிப்போம்
மத்தேயு 13: 35
நான் உவமைகள் வாயிலாகப் பேசுவேன்: உலகத் தோற்றமுதல் மறைந்திருப்பவற்றை விளக்குவேன் என்று இறைவாக்கினர் உரைத்தது இவ்வாறு நிறைவேறியது.
சங்கீதம் 78: 2
நீதிமொழிகள் மூலம் நான் பேசுவேன்: முற்காலத்து மறைசெய்திகளை எடுத்துரைப்பேன்.

கொலோசேயர் 1: 25/26
நான் வழங்கும் இறைவார்த்தை ஊழிஊழியாக, தலைமுறை தலைமுறையாக மறைந்திருந்த இறைத்திட்டத்தைப் பற்றியது. அத்திட்டம் இப்பொழுது இறைமக்களுக்கு வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.
ஆம். நம் ஆண்டவர் பேசிய உவமைகளில் பரலோக ராஜ்ஜியத்தை குறித்த இரகசியங்கள் மட்டும் அல்லாமல்,நான் வழங்கும் இறைவார்த்தை ஊழிஊழியாக, தலைமுறை தலைமுறையாக மறைந்திருந்த இறைத்திட்டத்தைப் பற்றியது. அத்திட்டம் இப்பொழுது இறைமக்களுக்கு வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.
தீர்க்கதரிசனங்களும் உள்ளது என்பதை அறிகிறோம்.
இந்த பாடத்தில், நம் ஆண்டவர் கூறிய - லூக்கா 15: 1-7 இல் உள்ள காணாமல் போன ஆடு உவமையில் மறைந்துள்ள சத்தியத்தை இரண்டு கோணங்களில் அறிவோம்.
அவற்றில் எது இறைத் திட்டத்திற்கு ஒப்புமையோடு உள்ளது என்று தங்களது கருத்துக்களை பகிருங்கள்.
நன்றி 🙂
2. லூக்கா 15: 1-7, மத்தேயு 18: 12-14
1 வரி வசூலிப்பவர்கள், பாவிகள் யாவரும் இயேசு சொல்வதைக் கேட்க அவரிடம் நெருங்கிவந்தனர்.
2 பரிசேயரும், மறைநூல் அறிஞரும், “இவர் பாவிகளை வரவேற்று அவர்களோடு உணவருந்துகிறாரே” என்று முணுமுணுத்தனர்.
3 அப்போது அவர் அவர்களுக்கு இந்த உவமையைச் சொன்னார்:
4 “உங்களுள் ஒருவரிடம் இருக்கும் நூறு ஆடுகளுள் ஒன்று காணாமற் போனால் அவர் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் பாலை நிலத்தில் விட்டுவிட்டு, காணாமற் போனதைக் கண்டுபிடிக்கும் வரை தேடிச்செல்ல மாட்டாரா?
5 கண்டுபிடித்ததும், அவர் அதை மகிழ்ச்சியோடு தம் தோள்மேல் போட்டுக் கொள்வார்:
6 வீட்டுக்கு வந்து, நண்பர்களையும் அண்டை வீட்டாரையும் அழைத்து, “என்னோடு மகிழுங்கள்: ஏனெனில் காணாமற்போன என் ஆட்டைக் கண்டுபிடித்து விட்டேன்” என்பார்.
7 அதுபோலவே மனம் மாறத் தேவையில்லாத் தொண்ணூற்றொன்பது நேர்மையாளர்களைக் (நீதிமான்களை) குறித்து உண்டாகும் மகிழ்ச்சியை விட, மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்து பரலோகத்தில் மிகுதியான மகிழ்ச்சி உண்டாகும் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.

3. உவமை கூறிய சூழ்நிலை
லூக்கா 15: 1,2 வசனங்களில் நாம் வாசித்தபடி, வரிவசூலிப்பவர்களும் பாவிகளும் நம் ஆண்டவரின் வாய்மொழிகளை கேட்க வந்தபோது,
தங்களை பரிசுத்தவான்கள் என்று எண்ணிக்கொள்ளும் பரிசேயரும் மறைநூல் அறிஞர்களும், குறை கண்டுபிடிக்கும் நோக்கோடு,
நம் ஆண்டவர் பாவிகள் என்று எண்ணப்படுபவர்களோடு பழகுகிறார் என்று தங்களுக்குள்ளே முணுமுணுத்ததை அறிந்து நம் ஆண்டவர்,
இந்த காணாமல் போன ஆடு உவமையை,
அந்த பரிசேயரிடமும் வேத பாரகரிடமும் கூறுகிறார்.
அதாவது, இந்த உவமை கூறியதன் நோக்கம்,
அவர் ஏன் பாவிகள் என்று எண்ணப்படுபவர்களோடு நெருங்கி பழகுகிறார் என்பதற்கான பதில்.
இந்த உவமையில், 100 ஆடுகளில் 1 காணாமல் போனது.
1/100
இதற்கு அடுத்து கூறிய, காணாமல் போன வெள்ளிக்காசு உவமையில், 10 வெள்ளிக்காசுகளில், 1 காணாமல் போனது.
1/10
லூக்கா 15: 8-10
அடுத்து கூறிய, இரண்டு மகன்கள் உவமையில், 2 மகன்களில் 1 மகன் தொலைந்து போய், மீண்டும் வந்ததை கவனிக்கிறோம்.
1/2
லூக்கா 15: 11-31
அதாவது, பரிசேயரின் கேள்விகளுக்கு, 3 வித கோணங்களில் அழுத்தமாக பதில் கூறியதை பார்க்கிறோம்.
4. உவமையில் உள்ள வினோதம்
இந்த உவமையில், 100 ஆடுகளை கொண்ட ஒரு மேய்ப்பர், தொலைந்து போன ஒரே ஒரு ஆட்டிற்காக, 99 ஆடுகளை அம்போ என்று விட்டு விட்டு, தொலைந்து போன ஆட்டை தேடி சென்றார் என்று அறிகிறோம்.
அப்படி என்றால், மற்ற ஆடுகளை காட்டிலும், இந்த தொலைந்து போன ஆடு, அந்த மேய்ப்பருக்கு ஒரு விசேஷமான ஆடாக இருந்திருக்க வேண்டும்.
அந்த ஆட்டை கண்டு பிடித்ததும், தன் நன்பர்களிடமும் அண்டை வீட்டாருடனும் தன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கிறார் என்று அறிகிறோம்.
இந்த உவமையை முடிக்கும் போது, 7ஆம் வசனத்தில், அந்த 99 ஆடுகளையும் மனம் திருந்த அவசியம் இல்லாத நீதிமான்கள் என்று ஒப்பிடுகிறார்.
ஆதாமின் சந்ததியில் உள்ள அனைவரும் பாவிகள் என்றிருக்க,
பிரசங்கி 7: 20
ஒரு பாவமும் செய்யாமல், நன்மையையே செய்யத்தக்க நீதிமான் பூமியிலில்லை.
ஒரு பாவமும் செய்யாமல், நன்மையையே செய்யத்தக்க நீதிமான் பூமியிலில்லை.
ரோமர் 1: 10
அந்தப்படியே: நீதிமான் ஒருவனாகிலும் இல்லை;
அந்தப்படியே: நீதிமான் ஒருவனாகிலும் இல்லை;
நம் ஆண்டவரின் முதல் பிரசங்கமே, மனம் திருந்துங்கள் என்றிருக்க,
மத்தேயு 3: 2, மத்தேயு 4: 17, மாற்கு 1: 15
இயேசு: மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கிக்கத் தொடங்கினார்.
இயேசு: மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கிக்கத் தொடங்கினார்.
யார் அந்த மனம் திருந்த அவசியம் இல்லாத 99 நீதிமான்கள்???
(நிச்சயாக அவர்கள் ஆதாமின் சந்ததியில் இருப்பதற்கு வாய்ப்பு இல்லை!!!)
பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாக்கும், அந்த காணாமல் போன ஆடு = பாவி யார்?
5. மனம் திருந்த அவசியம் இல்லாத 99 நீதிமான்கள்
கடவுள் இந்த பூமி மற்றும் அனைத்தையும் பரிபூரணமாக (100% Perfect) படைத்தார்.
பகலை ஆள சூரியனையும், இரவை ஆள சந்திரனையும் உண்டாக்கினார்.
அவை உண்டாக்கப்பட்ட நாள் முதல், இன்று வரை - தங்களுடைய வேலையில் எந்த மாற்றமும் தடங்கலும் இல்லாமல் செய்து வருகின்றன என்பதை நாம் அறிவோம்.
கடலுக்கு எல்லைகளை குறித்து வைத்துள்ளார்.
அந்த மணல் எல்லையை தாண்டி, கடல் நீரும் வருவதில்லை. கடவுள் அனுமதிக்கும் சுனாமிகளை தவிர,
ஆமோஸ் 5: 8
அவரே கார்த்திகை, மிருகசீரிடம் ஆகிய விண்மீன்களை உண்டாக்கியவர்: காரிருளைக் காலைப்பொழுது ஆகச் செய்பவர்: பகற்பொழுதை இரவு வேளையாய் மாற்றுபவர்: கடல் நீரை அழைத்து நிலத்தின்மேல் பொழியச் செய்பவர்: அவரது பெயர் “ஆண்டவர்”.

நினிவேக்கு செல்லாமல் டிமிக்கி கொடுத்த யோனாவை விழுங்க ஒரு மீன்க்கு கட்டளையிட்டார் என்று வாசிக்கிறோம்.
கடவுளின் கட்டளையை அந்த மீனும் சரியாக செய்தது.
மோசேக்கு எதிராக கலகம் செய்த 250 பேரை, நிலம் பிளந்து விழுங்கியது என்று வாசிக்கிறோம். (எண்ணாகமம் 16: 31-33)
கடவுளின் இந்த படைப்புகள் அனைத்தும், கடவுள் இட்ட கட்டளையை தட்டாமல், எதிர்க்காமல் இன்று வரை செய்து வருவதை நாம் காண்கிறோம்.
ஆம். உவமையில் மனம் திருந்த அவசியம் இல்லாத நீதிமான்கள் என்று நம் ஆண்டவர் குறிப்பிட்டது, அவரது எல்லா படைப்புகளில் (100) அவரது பேச்சை தட்டாமல் செய்யும், சூரியன், சந்திரன், காற்று, கடல், உயிரினங்கள் தான்.
6. காணாமல் போன ஆடு யார்?
இந்த உவமையில், நம் ஆண்டவர் ஆட்டை பயன்படுத்தியதன் காரணம், ஆடு தன்னுடைய மேய்ப்பரின் சத்தத்திற்கு செவி கொடுக்கும் என்பதால் தான்.
ஆனால், கடவுளின் படைப்புகளில், அவரது கட்டளைக்கு கீழ்ப்படியாமல், கடவுளை விட்டு விலகி சென்றது, ஆதாமும் அவரது சந்ததியான மனுக்குலம் தான்.
அவ்வாறு தொலைந்து போன ஆடாகிய நம்மை மீட்க தான், நம் ஆண்டவர் பரத்தில் இருந்து இறங்கி வந்தார்.
வாசிப்போம்
யோவான் 10: 11
நானே நல்ல மேய்ப்பன்: நல்லமேய்ப்பன் ஆடுகளுக்குக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான்.
அவ்வாறு, நம் ஆண்டவர் - தொலைந்து போன ஆட்டை முதலில் தேடியது இஸ்ரயேல் நாட்டில் தான்.நானே நல்ல மேய்ப்பன்: நல்லமேய்ப்பன் ஆடுகளுக்குக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான்.
முதலில் அவர் கண்டு கொண்ட ஆடுகள் தான் - அவரது 12 சீடர்கள்.
அவர் தமது சீடர்களிடம் முதலில்,
மத்தேயு 10: 6
காணாமற் போன ஆடுகளாகிய இஸ்ரயேல் வீட்டாரிடத்திற்குப் போங்கள்.
என்று இஸ்ரயேல் மக்களிடம் அனுப்பினார்.காணாமற் போன ஆடுகளாகிய இஸ்ரயேல் வீட்டாரிடத்திற்குப் போங்கள்.
பின்பு அவர் உயிர்தெழுந்த பின்பு,
மாற்கு 16: 15
இயேசு அவர்களை நோக்கி, “உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்.
என்றார்.இயேசு அவர்களை நோக்கி, “உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்.
இன்றும் ஆடு தேடுதல் முடியவில்லை.
அவர் நம்மை தான் தேடி கொண்டிருக்கிறார்.
7. மேய்ப்பர் தன் தோள் மேல் போட்டுக் கொள்ளும் ஆடு(கள்)
ஆட்டை கண்டு பிடித்தவுடன், மேய்ப்பன் தனது தோளில் அந்த ஆட்டை மகிழ்ச்சியுடன் போட்டுக் கொண்டார்.
அது போல, நம் ஆண்டவரின் காணாமல் போன ஆடுகளாகிய தமது திருச்சபை எண்ணிக்கை நிறைவடைந்தவுடன் (144000), நம்மை அவரது தோள்களில் போட்டுக் கொள்வார்.
இது, இப்போதிருக்கும் இந்த சுவிசேஷ காலம் நிறைவடைந்து, ஆயிரம் ஆண்டு அரசாட்சியில் நடப்பது.
தோள் என்பது எதை குறிக்கும்?
வாசிப்போம்
ஏசாயா 9: 6
ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார்: ஓர் ஆண்மகவு நமக்குத் தரப்பட்டுள்ளார்: ஆட்சிப்பொறுப்பு அவர் தோள்மேல் இருக்கும்:
ஆம். தோள் என்பது ஆட்சிப் பொறுப்பு = அதிகாரத்தை குறிக்கும்.ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார்: ஓர் ஆண்மகவு நமக்குத் தரப்பட்டுள்ளார்: ஆட்சிப்பொறுப்பு அவர் தோள்மேல் இருக்கும்:
அதாவது, நம் ஆண்டவர் நம்மை தோள் மேல் போட்டுக் கொள்வது என்பது, நமக்கு அவரது அரசாட்சியில் ஆட்சிப்பொறுப்பை தருவதை குறிக்கும்.
8. நானே நல்ல மேய்ப்பன்
வாசிப்போம்
யோவான் 10: 14-16
14 நானே நல்ல மேய்ப்பன்; பிதா என்னை அறிந்திருக்கிறதுபோலவும், நான் பிதாவை அறிந்திருக்கிறதுபோலவும்,
15 நான் என்னுடையவைகளை அறிந்தும் என்னுடையவைகளால் அறியப்பட்டுமிருக்கிறேன்;
ஆடுகளுக்காக என் ஜீவனையும் கொடுக்கிறேன்.
இங்கு என்னுடையவைகள் என்பது = திருச்சபை = 144000 யை குறிக்கும்.14 நானே நல்ல மேய்ப்பன்; பிதா என்னை அறிந்திருக்கிறதுபோலவும், நான் பிதாவை அறிந்திருக்கிறதுபோலவும்,
15 நான் என்னுடையவைகளை அறிந்தும் என்னுடையவைகளால் அறியப்பட்டுமிருக்கிறேன்;
ஆடுகளுக்காக என் ஜீவனையும் கொடுக்கிறேன்.
மேலும் வாசிக்கும் போது,
16 இந்தத் தொழுவத்திலுள்ளவைகளல்லாமல் வேறே ஆடுகளும் எனக்கு உண்டு; அவைகளையும் நான் கொண்டுவரவேண்டும், அவைகள் என் சத்தத்துக்குச் செவிகொடுக்கும். அப்பொழுது ஒரே மந்தையும் ஒரே மேய்ப்பனுமாகும்.
இங்கு கூறப்படும் வேறே ஆடுகள் என்பது உலக மக்கள் அனைவரையும் குறிக்கிறது.உலக மக்கள் அனைவரும் உயிர்த்தெழுந்து, நம் ஆண்டவரின் சத்தத்திற்கு செவி சாய்க்கும் காலம் தான்,
கிறித்துவின் ஆயிரம் வருட அரசாட்சி = பரலோக ராஜ்ஜியம்.
அந்த காலத்தில், அனைவரும் ஒரே மந்தையாகும் = அதாவது மற்ற 99 உடன் தொலைந்து போன ஆடாகிய மனுக்குலமும் இணைந்து, ஒரே ஆட்டு மந்தையாக இருக்கும்.
9. நண்பர்களும் அண்டை வீட்டாரும்
காணாமல் போன ஆட்டை, மேய்ப்பன் தன் தோள் மேல் போட்டுக் கொண்டு, மகிழ்ச்சியுடன் நண்பர்கள் மற்றும் அண்டை வீட்டாரிடம், என்னோடு மகிழுங்கள் என்று கூறுவது
144000 = திருச்சபை நிறைவை மற்ற 99 படைப்புகளும் சேர்ந்து மகிழ்ச்சி கொள்வதை குறிக்கிறது.
வாசிப்போம்
ரோமர் 8: 19
இம்மாட்சியுடன் கடவுளின் மக்கள் வெளிப்படுவதைக் காண்பதற்காகப் படைப்பே பேராவலோடு காத்திருக்கிறது.
🙂
இம்மாட்சியுடன் கடவுளின் மக்கள் வெளிப்படுவதைக் காண்பதற்காகப் படைப்பே பேராவலோடு காத்திருக்கிறது.
10. உவமையில் பரிசேயர் பெற்ற பதில் என்ன?
தங்களை நீதிமான்கள் என்று எண்ணிக் கொண்டும், பிறரை பாவிகள் என்று தீர்த்து கொண்டு இருக்கும் பரிசேயர் மற்றும் வேத பாரகர்கள், இந்த உவமை மூலம் தாங்களும் மீட்பர் தேவைப்படும் காணாமல் போன ஆடுகள் என்பதை அறிந்து கொண்டார்கள்.
அதாவது, ஆதாமின் சந்ததியில் வரும் மனிதர்களில் - இவர் சின்ன பாவி, இவர் பெரிய பாவி என்று வேறுபாடு கிடையாது.
அனைவருமே பாவிகள் தான்.
11. மற்றொரு கோணம்
கானானிய பெண் ஒருவர், தன் மகளின் சுகத்திற்காக நம் ஆண்டவரிடம் வந்தபோது, நம் ஆண்டவர்
மத்தேயு 15: 24
இயேசு: காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரயேல் வீட்டாரிடத்திற்கு அனுப்பப்பட்டேனேயன்றி, மற்றப்படியல்ல என்றார்.
இங்கு ஒட்டு மொத்த இஸ்ரயேலை காணாமல் போன ஆடுகள் என்று நம் ஆண்டவர் குறிப்பிடுவதை பார்க்கிறோம்.இயேசு: காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரயேல் வீட்டாரிடத்திற்கு அனுப்பப்பட்டேனேயன்றி, மற்றப்படியல்ல என்றார்.
பைபிளில்,
என்பதை நாம் பாடத்தில் அறிந்து கொண்டோம்.
நீதிமான்கள் - 99
இந்த கோணத்தில் இந்த உவமையை நாம் அறிய விளையும் போது, 99 ஆடுகள் என்பது தங்களை பாவிகள் என்று ஒத்துக் கொள்ள மனதில்லாமல், நியாயப் பிரமாணத்தை கடை பிடிப்பதன் மூலம் தங்களை நீதிமான்களாக காட்டிக் கொள்ளும் பரிசேயர் வேதபாரகர் குணத்தை உடையவர்களை அடையாளப்படுத்துகிறது.
இன்றும் கூட, நாங்கள் பரிசுத்தவான்கள், இரட்சிக்கப்பட்டவர்கள், அபிஷேகம் பெற்றவர்கள், தற்காலிக நீதிமான்கள் என்று தங்களை உயர்வாக எண்ணிக் கொள்பவர்களை காண்கிறோம்.
ரோமர் 3: 10
நீதிமான் ஒருவனாகிலும் இல்லை;
என்ற வசனத்தை நன்கு அறிந்தும், அது தங்களை பற்றி அல்ல என்று எண்ணுபவர்கள்.
இவர்கள் பெரும்பான்மையாக (99) இருக்கின்றனர்.நீதிமான் ஒருவனாகிலும் இல்லை;
காணாமல் போன ஆடு - 1
இந்த கோணத்தில், காணாமல் போன ஆடு என்பது, தாங்கள் பாவி என்பதை உணர்ந்து (தொலைந்து போனதை உணர்ந்து),
எங்களுக்கு ஒரு மீட்பர் வந்தால் மட்டுமே விடுதலை கிடைக்கும் என்று மனதுருகி அனுதினமும் தன்னை தான் வெறுத்து, சிலுவையை சுமந்து, தாங்கள் காப்பாற்றப்பட, தங்களது மேய்ப்பரின் வருகைக்காக வாஞ்சையுடன் காத்திருக்கும் சிறுமந்தையை (1/100) குறிக்கும்.
12. தங்களையே மேய்க்கிற இஸ்ரயேலின் மேய்ப்பர்களே!
வர போகும் ஆயிரம் வருட இறையாட்சியில், நம் ஆண்டவர் அற்ப பணத்திற்காகவும் தசமபாகத்திற்காகவும் மக்களை சுயாதீனமாக சிந்தித்து சத்தியத்தை அறிய விடாமல், அறியாமையில் அடிமைப்படுத்தி வைத்திருக்கும் இன்றைய டுபாக்கூர் மேய்ப்பர், ஆயர்களிடம் இருந்து தம் மக்களை விடுவிப்பார்.
வாசிப்போம்
ஏசேக்கியேல் 34: 2,10-16
2,10 கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்; இதோ, நான் தங்களையே மேய்க்கிற இஸ்ரயேலின் மேய்ப்பருக்கு விரோதமாக வந்து,
என் ஆடுகளை அவர்கள் கையிலே கேட்டு,
மேய்ப்பர் இனித் தங்களையே மேய்க்காதபடி மந்தையை மேய்க்கும் தொழிலைவிட்டு அவர்களை விலக்கி,
என் ஆடுகள் அவர்களுக்கு ஆகாரமாயிராதபடி,
அவைகளை அவர்கள் வாய்க்குத் தப்பப்பண்ணுவேன் என்று சொல்லு.
11 கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் நானே என் ஆடுகளை விசாரித்து, அவைகளைத் தேடிப்பார்ப்பேன்.
12 ஒரு மேய்ப்பன் சிதறுண்ட தன் ஆடுகளின் நடுவே இருக்கிற நாளில் தன் மந்தையைத் தேடிக்கொண்டிருக்கிறதுபோல,
நான் என் ஆடுகளைத் தேடி,
மப்பும் மந்தாரமுமான நாளிலே அவைகள் சிதறுண்டுபோன எல்லா இடங்களிலுமிருந்து அவைகளைத் தப்பி வரப்பண்ணி,
13 அவைகளை ஜனங்களிடத்திலிருந்து புறப்படவும் தேசங்களிலிருந்து சேரவும்பண்ணி, அவைகளுடைய சுயதேசத்திலே அவைகளைக் கொண்டுவந்து, இஸ்ரயேல் மலைகளின்மேலும் ஆறுகள் அண்டையிலும் தேசத்தின் சகல வாசஸ்தலங்களிலும் அவைகளை மேய்ப்பேன்.
14 அவைகளை நல்ல மேய்ச்சலிலே மேய்ப்பேன்; இஸ்ரவேலுடைய உயர்ந்த மலைகளில் அவைகளுடைய தொழுவம் இருக்கும்; அங்கே அவைகள் நல்ல தொழுவத்தில் படுத்துக்கொள்ளும்; இஸ்ரவேலின் மலைகளின்மேல் நல்ல மேய்ச்சலை மேயும்.
15 என் ஆடுகளை நான் மேய்த்து அவைகளை நான் மடக்குவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
16 நான் காணாமற்போனதைத்தேடி துரத்துண்டதைத் திரும்பக்கொண்டுவந்து, எலும்பு முறிந்ததைக் காயங்கட்டி, நசல்கொண்டதைத் திடப்படுத்துவேன்;
ஆமென்

13. நமக்கான பாடம்
இந்த சுவிஷேச அறுவடை காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாமும் கடவுளால் அழைக்கப்பட்டு, கிறிஸ்துவின் உடலாக மாற தெரிந்து கொள்ளப்பட்டிருக்கிறோம்.
ஒரு காலத்தில் சிதறுண்ட ஆடுகளை போல பல்வேறு நம்பிக்கைகளில் வாழ்ந்திருந்தாலும்,
இப்போது நம்முடைய மேய்ப்பராகிய ஆண்டவரின் சத்தத்திற்கு செவி கொடுத்து, வசனங்களில் உள்ள சத்தியத்தை அறிய நாம் நம்மை அர்ப்பணித்துள்ளோம்.
இந்த அழைப்பையும், தெரிந்து கொள்ளுதலையும் அவரது பாதுகாப்பில் முடிவு வரை பற்றி கொண்டு, இறையாட்சியில் நம் ஆண்டவரின் தோளின் மேல் பயணம் செய்ய வாஞ்சையுடன் காத்திருப்போம்.
இந்த உவமையின் தொடர்ச்சியாக, நம் ஆண்டவர் 10 வெள்ளிக் காசுகள் உவமையை கூறினார்.
அதன் மறைந்துள்ள இறையாட்சியின் ரகசியத்தை நாம் அடுத்த உவமை பாடத்தில் ஆராய்ந்து அறிவோம்.
சத்தியத்தை ஆராய்வதில் உடன் பயணிக்கும் தங்களுக்கு நம் கடவுளாம் பரமதந்தையும் நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் ஆசீர் அளிப்பார்களாக.
ஆமென்.🙂🙏

Comments
Post a Comment