THE LOST SILVER COIN
1. உவமைகளில் உள்ள இறைத்திட்டம்
அன்புடையீர், வணக்கங்கள். 🙂
நம் தந்தையாம் கடவுளிடமிருந்தும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் உங்களுக்கு அருளும் அமைதியும் உரித்தாகுக!
நாம் அறிந்திருக்கிறபடி, உவமைகளில் பரலோக ராஜ்ஜியத்தை குறித்த இரகசியங்கள் உள்ளது.
லூக்கா 8:10
மேலும் உவமைகளில், தீர்க்கதரிசனங்களும் உண்டு.
வாசிப்போம்
மத்தேயு 13: 35
நான் உவமைகள் வாயிலாகப் பேசுவேன்: உலகத் தோற்றமுதல் மறைந்திருப்பவற்றை விளக்குவேன் என்று இறைவாக்கினர் உரைத்தது இவ்வாறு நிறைவேறியது.
சங்கீதம் 78: 2
நீதிமொழிகள் மூலம் நான் பேசுவேன்: முற்காலத்து மறைசெய்திகளை எடுத்துரைப்பேன்.

கொலோசேயர் 1: 25/26
நான் வழங்கும் இறைவார்த்தை ஊழிஊழியாக, தலைமுறை தலைமுறையாக மறைந்திருந்த இறைத்திட்டத்தைப் பற்றியது. அத்திட்டம் இப்பொழுது இறைமக்களுக்கு வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.
ஆம். நம் ஆண்டவர் பேசிய உவமைகளில் பரலோக ராஜ்ஜியத்தை குறித்த இரகசியங்கள் மட்டும் அல்லாமல்,நான் வழங்கும் இறைவார்த்தை ஊழிஊழியாக, தலைமுறை தலைமுறையாக மறைந்திருந்த இறைத்திட்டத்தைப் பற்றியது. அத்திட்டம் இப்பொழுது இறைமக்களுக்கு வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.
தீர்க்கதரிசனங்களும் உள்ளது என்பதை அறிகிறோம்.
லூக்கா 15ஆம் அதிகாரத்தில், நம் ஆண்டவர் தொடர்ச்சியாக கூறிய 3 உவமைகளில்,
முதல் உவமை - காணாமல் போன ஆடு
உவமையின் விளக்கத்தை இரண்டு கோணங்களில் அறிந்து கொண்டோம்.
இந்த பாடத்தில், நம் ஆண்டவர் - அதே அதிகாரத்தில் இரண்டாவதாக கூறிய - லூக்கா 15: 8-10 இல் உள்ள காணாமல் போன வெள்ளிக் காசு உவமையில் மறைந்துள்ள சத்தியத்தை அறிவோம்.
2. லூக்கா 15: 8-10
8 பெண் ஒருவரிடம் இருந்த பத்துத் திராக்மா*க்களுள் ஒன்று காணாமற் போய்விட்டால் அவர் எண்ணெய் விளக்கை ஏற்றி வீட்டைப் பெருக்கி அதைக் கண்டுபிடிக்கும்வரை கவனமாகத் தேடுவதில்லையா?
9 கண்டுபிடித்ததும், அவர் தோழியரையும் அண்டை வீட்டாரையும் அழைத்து, ‘என்னோடு மகிழுங்கள், ஏனெனில், காணாமற் போன திராக்மாவைக் கண்டுபிடித்துவிட்டேன்’ என்பார்.
10 அவ்வாறே மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்துக் கடவுளின் தூதரிடையே மகிழ்ச்சி உண்டாகும் என உங்களுக்குச் சொல்கிறேன்.”
* ஒரு திராக்மா என்பது ஒரு தொழிலாளரின் ஒரு நாள் கூலிக்கு இணையான கிரேக்க வெள்ளி நாணயம்.
9 கண்டுபிடித்ததும், அவர் தோழியரையும் அண்டை வீட்டாரையும் அழைத்து, ‘என்னோடு மகிழுங்கள், ஏனெனில், காணாமற் போன திராக்மாவைக் கண்டுபிடித்துவிட்டேன்’ என்பார்.
10 அவ்வாறே மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்துக் கடவுளின் தூதரிடையே மகிழ்ச்சி உண்டாகும் என உங்களுக்குச் சொல்கிறேன்.”
3. உவமை கூறிய சூழ்நிலை
1 வரி வசூலிப்பவர்கள், பாவிகள் யாவரும் இயேசு சொல்வதைக் கேட்க அவரிடம் நெருங்கிவந்தனர்.
2 பரிசேயரும், மறைநூல் அறிஞரும், “இவர் பாவிகளை வரவேற்று அவர்களோடு உணவருந்துகிறாரே” என்று முணுமுணுத்தனர்.
3 அப்போது அவர் அவர்களுக்கு இந்த (3) உவமை(களை) கூறினார்:
லூக்கா 15: 1,2 வசனங்களில் நாம் வாசித்தபடி, வரிவசூலிப்பவர்களும் பாவிகளும் நம் ஆண்டவரின் வாய்மொழிகளை கேட்க வந்தபோது,2 பரிசேயரும், மறைநூல் அறிஞரும், “இவர் பாவிகளை வரவேற்று அவர்களோடு உணவருந்துகிறாரே” என்று முணுமுணுத்தனர்.
3 அப்போது அவர் அவர்களுக்கு இந்த (3) உவமை(களை) கூறினார்:
தங்களை பரிசுத்தவான்கள் என்று எண்ணிக்கொள்ளும் பரிசேயரும் மறைநூல் அறிஞர்களும், குறை கண்டுபிடிக்கும் நோக்கோடு,
நம் ஆண்டவர் பாவிகள் என்று எண்ணப்படுபவர்களோடு பழகுகிறார் என்று தங்களுக்குள்ளே முணுமுணுத்ததை அறிந்து நம் ஆண்டவர்,
- காணாமல் போன ஆடு உவமை, (லூக்கா 15: 1-7)
- காணாமல் போன வெள்ளிக் காசு உவமை
- காணாமற் போன மகன் (கெட்டக் குமாரன்) லூக்கா 15: 11-32
அடுத்து,
மற்றும்
அதாவது, இந்த உவமை கூறியதன் நோக்கம்,
அவர் ஏன் பாவிகள் என்று எண்ணப்படுபவர்களோடு நெருங்கி பழகுகிறார் என்பதற்கான பதில்.
இந்த பாடத்தில் - பரிசேயர், வேத பாரகருக்கு காணாமல் போன ஆடு உவமைக்கு அடுத்து கூறிய காணாமல் போன வெள்ளிக் காசு உவமையில் மறைந்துள்ள இறைத் திட்டத்தை அறிவோம்.
- இந்த உவமையில், கூறப்பட்ட பெண் யார்?
- அவரிடம் கொடுக்கப்பட்ட பத்து வெள்ளிக் காசுகள் என்ன?
- வெள்ளி என்பது எதை அடையாளப் படுத்தும்?
- யார் அவரிடம் கொடுத்தார்கள்?
- எதற்காக கொடுத்தார்கள்?
- தொலைந்து போன வெள்ளிக் காசு என்ன?
- அவளது தோழியர் மற்றும் அண்டை வீட்டார் யார்?
4. யூதர்களின் கலாச்சாரம்
நமது ஆண்டவர் யூத குடும்பத்தில் பிறந்ததால்,
அவர் கூறிய உவமைகளும் யூதர்களின் அன்றாட பழக்க வழக்கங்கள்,
நடைமுறையில் பின்பற்றிய பாரம்பரியங்களை தழுவியே இருந்தது.
இந்த 10 வெள்ளிக் காசுகள் உவமை - யூதர்களின் திருமணத்தில் கடைபிடிக்கப்படும் யூத கலாச்சாரத்தை தொடர்பு படுத்துகிறது.
எப்படி?
நம் இந்திய கலாச்சாரத்தை போலவே, யூதர்களின் கலாச்சாரத்தின்படியும், திருமணத்திற்கு முன்பு, நிச்சயதார்த்தம் என்னும் உறுதிப் படுத்தல் முறை கடைபிடிக்கப் படுகிறது.
அந்த நிகழ்ச்சியில், மணமகனின் குடும்பத்தாரின் அடையாளம் பதித்த 10 வெள்ளிக் காசுகள் மணப்பெண்ணுக்கு பரிசளிப்பது வழக்கம்.
அந்த 10 வெள்ளிக் காசுகளை, அந்த மணப்பெண் விலையேறப் பெற்ற பொக்கிஷமாக கருதி,
திருமண நாள் வரை அவற்றை தினமும் பார்த்து, பராமரித்து, பாதுகாப்பாள்.
அதை பார்க்கும் போதெல்லாம், கணவனின் நினைவும், திருமண ஒப்பந்தத்தையும் நினைவில் கொள்வாள்.
திருமண நாளில் போது, அந்த பத்து வெள்ளிக்காசுகளையும், ஒரு அழகான வெள்ளி சங்கிலியில் இணைத்து ஒரு ஆபரணமாக தன்னுடைய நெற்றியில் அணிந்து தன்னுடைய நம்பகத் தன்மையை வெளிப்படுத்த வேண்டும்.
5. வெள்ளிக் காசின் முக்கியத்துவம்
ஒருவேளை, அந்த காசுகளில் ஏதேனும் ஒரு காசு தொலைந்து போனாலும்,
அது ஒரு பெரிய தவறாக கருதப்பட்டு, திருமணம் நடக்குமா அல்லது நின்னு போயிடுமா என்பதை தீர்மானிக்க கூடியதாக இருக்கும்.
அதாவது, ஒரு வெள்ளிக் காசு தொலைந்து போனாலும், அது 10 வெள்ளிக் காசுகளும் தொலைந்து போல கருதப்பட்டு மணப்பெண்ணுடைய எதிர்காலமும் கேள்விக்குரியதாக மாறிவிடும்.
அப்படி என்றால், கொடுக்கப்பட்ட அந்த ஒவ்வொரு வெள்ளிக் காசும் எவ்வளவு முக்கியம் வாய்ந்தது என்பதை நாம் புரிந்து கொள்ள முடிகிறது.
6. மணப்பெண்ணும் - திருச்சபையும்
பைபிளில், வெள்ளி என்பது சத்தியத்தை அடையாளப்படுத்தும்.
சங்கீதம் 12: 6
கர்த்தருடைய சொற்கள் மண்குகையில் ஏழுதரம் உருக்கி புடமிடப்பட்ட வெள்ளிக்கொப்பான சுத்த சொற்களாயிருக்கிறது.
கர்த்தருடைய சொற்கள் மண்குகையில் ஏழுதரம் உருக்கி புடமிடப்பட்ட வெள்ளிக்கொப்பான சுத்த சொற்களாயிருக்கிறது.
எப்படி 10 வெள்ளிக் காசுகள் அந்த திருமணம் ஆகப் போகும் பெண்ணுக்கு கொடுக்கப்பட்டதோ,
அதுபோல, இந்த உலகத்தின் முடிவில் கிறிஸ்துவோடு இணையப்போகும் அவரது மணவாட்டிக்கு சத்தியம் தரப்பட்டுள்ளது.
அந்த மணப்பெண் = திருச்சபை = 144000ஆக அழைக்கப்பட்ட நாம் தான்.
வாசிப்போம்
திருவெளிப்பாடு 19: 7
நாம் சந்தோஷப்பட்டுக் களிகூர்ந்து அவருக்குத் துதிசெலுத்தக்கடவோம். ஆட்டுக்குட்டியானவருடைய கலியாணம் வந்தது, அவருடைய மனைவி தன்னை ஆயத்தம்பண்ணினாள்.
நாம் சந்தோஷப்பட்டுக் களிகூர்ந்து அவருக்குத் துதிசெலுத்தக்கடவோம். ஆட்டுக்குட்டியானவருடைய கலியாணம் வந்தது, அவருடைய மனைவி தன்னை ஆயத்தம்பண்ணினாள்.
அந்த பெண், தனது திருமண நாளில் - தனது நெற்றியில் அந்த வெள்ளிக் காசுகளை அணிந்திருந்தது,
கிறிஸ்துவின் மணவாட்டியாக அழைக்கப்பட்ட, நமது சிந்தையில், அவரது சத்தியம் இருக்க வேண்டும் என்பதை அடையாளப்படுத்துகிறது.
எப்படி கொடுக்கப்பட்ட வெள்ளிக் காசை ஒன்றை தொலைத்தாலும் திருமணம் நடக்காதோ,
அதுபோல நம்மிடம் கொடுக்கப்பட்ட சத்தியத்தை நாம் தொலைத்தாலும், கிறிஸ்துவின் மணவாட்டியாக மாற முடியாது.
வெள்ளிக் காசை தொலைத்த அந்த பெண்,
தொலைந்த வெள்ளிக் காசை தேடுவதற்கு தன்
- வீட்டை பெருக்கி,
- விளக்கை ஏற்றி
அதுபோல,நாமும் நம்மிடம் கொடுக்கப்பட்ட சத்தியம் ஏதேனும் தொலைந்து போனால்,
நாமும் நம்
- வீடாகிய உள்ளத்தை சுத்தமாக்கி, நமக்கு ஒளி தரும்
- விளக்காக இருக்கும், இறைவார்த்தைகளை நம் உள்ளத்தை ஏற்றி,
இது திருச்சபையாக அழைக்கப்பட்டிருக்கும் நம்மை மணப்பெண்ணாக பொருந்தி அறியப்படும் சத்தியம்.
இப்போது, இந்த உவமையை நம் ஆண்டவர் கூறிய இசுரயேலருக்கு பொருத்தி பார்ப்போம்.
7. இசுரயேலர்களிடம் இருந்த 9 வெள்ளிக் காசுகள்
இந்த 15 ஆம் அதிகாரத்தில், முதலில் கூறிய காணாமல் போன ஆடு உவமையில், காணாமல் போன ஆட்டை - ஆதாமும் - மொத்த ஆதாமின் சந்ததிக்கு ஒப்பீடு செய்யப்பட்டது.
இந்த உவமையில், குறிப்பாக இஸ்ரயேல் மக்களை ஒப்பீடு செய்து கூறியுள்ளார்.
எப்படி உவமையில் திருமணம் நிச்சயிக்கபட்ட பெண்ணுக்கு, 10 வெள்ளிக் காசுகள் கொடுக்கப்பட்டதோ,
அதைபோன்று இஸ்ரயேல் மக்களிடமும் வெள்ளிக் காசுகள் போன்று 10 விலையேற பெற்ற விடயங்கள் கொடுக்கப்பட்டிருந்தது.
அதில் ஒன்றை தொலைத்து விட்டனர்; மீதி 9 அவர்களிடம் இருந்தது.
அந்த 9 வெள்ளிக் காசுகள் என்னென்ன?
வாசிப்போம்
ரோமர் 9: 4,5
அவர்கள்
1 இஸ்ரயேலரே;
2 புத்திரசுவிகாரமும்,
3 மகிமையும்,
4 உடன்படிக்கைகளும்,
5 நியாயப்பிரமாணமும்,
6 தேவாராதனையும்,
7 வாக்குத்தத்தங்களும் அவர்களுடையவைகளே;
8 பிதாக்கள் அவர்களுடையவர்களே;
9 மாம்சத்தின்படி கிறிஸ்துவும் அவர்களில் பிறந்தாரே.

இசுரயேலரே
ஆம். பிறப்பிலேயே அவர்கள் தெரிந்து கொள்ளப்பட்ட மக்களாக இருந்தனர்.
உபாகமம் 7: 6
உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் தூய மக்களினம் நீங்கள். மண்ணிலுள்ள எல்லா மக்களினங்களிலும் உங்களையே தம் சொந்த மக்களாக கடவுளாகிய ஆண்டவர் தேர்ந்து கொண்டார்.
உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் தூய மக்களினம் நீங்கள். மண்ணிலுள்ள எல்லா மக்களினங்களிலும் உங்களையே தம் சொந்த மக்களாக கடவுளாகிய ஆண்டவர் தேர்ந்து கொண்டார்.
ஆமோஸ் 3: 2
உலகத்தில் உள்ள எல்லா மக்களினங்களுக்குள்ளும் உங்களைத்தான் நான் சிறப்பாக அறிந்துகோண்டேன்;
உலகத்தில் உள்ள எல்லா மக்களினங்களுக்குள்ளும் உங்களைத்தான் நான் சிறப்பாக அறிந்துகோண்டேன்;
புத்திரசுவிகாரம் இஸ்ரயேல் மக்கள் கடவுளை அப்பா என்று அழைக்கும் பாக்கியத்தை பெற்றிருந்தனர்.
கடவுளும் அவர்களை தம் சொந்த பிள்ளைகளை போல நடத்தினார்.
மகிமை
கடவுள் தனது மகிமையை உலகில் இஸ்ரயேல் மக்களிடம் தான் வெளிப்படையாக காட்டினார்.
அவர்களது வனாந்தர பயணத்தின் போது, கடவுளின் அருஞ்செயல்களை அவர்கள் நேரடியாக பார்த்தனர்.
அவர்கள் மூலமாக தான் நாம் கடவுளின் மகிமையை அறிந்து கொள்கிறோம்.
உடன்படிக்கை
முதலில் கடவுள் நோவா தாத்தா மூலம் வானவில் உடன்படிக்கை செய்தார்.
பின்பு, ஆபிரகாம் அவர்களோடு ஒரு உடன்படிக்கை செய்தார்.
ஆதியாகமம் 22: 17
நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன் சந்ததியை வானத்தின் நட்சத்திரங்களைப் போலவும், கடற்கரை மணலைப்போலவும் பெருகவே பெருகப் பண்ணுவேன்.
நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன் சந்ததியை வானத்தின் நட்சத்திரங்களைப் போலவும், கடற்கரை மணலைப்போலவும் பெருகவே பெருகப் பண்ணுவேன்.
நியாயப்பிரமாணம்
கடவுளின் நீதியை கூறும் 613 கட்டளைகள் அடங்கிய நியாயப் பிரமாணம் மோசே மூலமாக இஸ்ரயேல் மக்களிடமே கொடுக்கப்பட்டது.
தேவாராதனை
கடவுளை எப்படி வழிபட வேண்டும், எப்படி பலி செலுத்த வேண்டும், ஆசாரியர் எப்படி இருக்க வேண்டும் என்கிற அனைத்து செயல் முறைகளும் இஸ்ரயேல் மக்களிடமே கொடுக்கப்பட்டு பின்பற்றப்பட்டது.
வாக்குத்தத்தங்கள்
நாம் வாக்குத்தத்தங்களாக நமக்காக உரிமை கொண்டாடும் அனைத்தும், முதலில் இஸ்ரயேல் மக்களுக்கு கொடுக்கப்பட்டவை.
பிதாக்கள்
கடவுள் நேரடியாக உரையாடிய ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, தானியேல் ஏனைய தீர்க்கதரிசிகள் அனைவருமே இஸ்ரயேலர்களே.
கிறிஸ்து
இவை அனைத்திற்கும் மேலாக, நம் ஆண்டவரும் அவர்களிடையே பிறந்து, வளர்ந்தார்.
8. இசுரயேலர் தொலைத்த வெள்ளிக் காசு
இஸ்ரயேல் மக்களிடம் 9 வெள்ளிக் காசுகள் நிறைவாக இருந்தாலும், அவர்கள் ஒன்றை தொலைத்து விட்டதால், மற்றவையும் பயனற்றவை ஆனது.
இசுரயேலர் தொலைத்த வெள்ளிக் காசு என்ன?
வாசிப்போம்
ரோமர் 9: 6,7,30
6 இஸ்ரயேல் வம்சத்தார் எல்லாரும் இஸ்ரயேலரல்லவே.
7 அவர்கள் ஆபிரகாமின் சந்ததியாரானாலும் எல்லாரும் பிள்ளைகளல்லவே;
30 இப்படியிருக்க நாம் என்னசொல்லுவோம்? நீதியைத் தேடாத புறஜாதியார் நீதியை அடைந்தார்கள். அது விசுவாசத்தினாலாகும் நீதியே.
31 நீதிப்பிரமாணத்தைத் தேடின இஸ்ரயேலரோ நீதிப்பிரமாணத்தை அடையவில்லை.
32 என்னத்தினாலென்றால், அவர்கள் விசுவாசத்தினாலே அதைத் தேடாமல், நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே தேடினபடியால் அதை அடையவில்லை; இடறுதற்கான கல்லில் இடறினார்கள்.
ஆம். இஸ்ரயேல் மக்களிடம் இல்லாத வெள்ளிக் காசு = விசுவாசம்6 இஸ்ரயேல் வம்சத்தார் எல்லாரும் இஸ்ரயேலரல்லவே.
7 அவர்கள் ஆபிரகாமின் சந்ததியாரானாலும் எல்லாரும் பிள்ளைகளல்லவே;
30 இப்படியிருக்க நாம் என்னசொல்லுவோம்? நீதியைத் தேடாத புறஜாதியார் நீதியை அடைந்தார்கள். அது விசுவாசத்தினாலாகும் நீதியே.
31 நீதிப்பிரமாணத்தைத் தேடின இஸ்ரயேலரோ நீதிப்பிரமாணத்தை அடையவில்லை.
32 என்னத்தினாலென்றால், அவர்கள் விசுவாசத்தினாலே அதைத் தேடாமல், நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே தேடினபடியால் அதை அடையவில்லை; இடறுதற்கான கல்லில் இடறினார்கள்.
ஆபிரகாம் காட்டிய இந்த விசுவாசத்தினால் தான் மற்ற அனைத்தும் ஆபிரகாம் மூலம் இஸ்ரயேல் மக்களுக்கு கொடுக்கப்பட்டது.
ஆனால், இந்த விசுவாசம் என்ற ஒன்றை இழந்து போனதால், மற்றவை - இசுரயேலர் என்ற பிறப்புரிமை, புத்திரசுவிகாரம், மகிமை, உடன்படிக்கை, நியாயப்பிரமாணம், தேவாராதனை, வாக்குத்தத்தம், பிதாக்கள், அவர்களிடத்தில் கிறிஸ்து பிறந்ததும் பயனற்றவை ஆயின.
ஆனால், அவர்கள் தவறிய விசுவாசத்தை புறஜாதியார் கொண்டிருந்ததால், மற்ற அனைத்தும் புறஜாதியாராகிய நம்மை அடைந்தது.
ரோமர் 9: 30
30 இப்படியிருக்க நாம் என்னசொல்லுவோம்? நீதியைத் தேடாத புறஜாதியார் நீதியை அடைந்தார்கள். அது விசுவாசத்தினாலாகும் நீதியே.
9. விசுவாசத்தினாலாகும் நீதி
முதலில் 9 வெள்ளிக் காசுகளும் இஸ்ரயேல் மக்களிடம் இருந்திருந்தாலும்,
புறஜாதியார் விசுவாசம் என்னும் ஒரு குணத்தினால், மற்ற 9 வெள்ளிக் காசுகளையும் தானாகவே இலவசமாக பெற்றார்கள்.
வாசிப்போம்
அப்போஸ்தலர் 13: 26,48
26 சகோதரரே, ஆபிரகாமின் சந்ததியில் பிறந்தவர்களே, தேவனுக்குப் பயந்துநடக்கிறவர்களே, இந்த இரட்சிப்பின் வசனம் உங்களுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது.
48 புறஜாதியார் அதைக் கேட்டுச் சந்தோஷப்பட்டு, கர்த்தருடைய வசனத்தை மகிமைப்படுத்தினார்கள். நித்திய ஜீவனுக்கு நியமிக்கப்பட்டவர்கள் எவர்களோ அவர்கள் விசுவாசித்தார்கள்.

யோவான் 8: 40
அதற்கு அவர்கள் (இசுரயேலர்): ஆபிரகாமே எங்கள் பிதா என்றார்கள். இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் ஆபிரகாமின் பிள்ளைகளாயிருந்தால் ஆபிரகாமின் கிரியைகளைச் செய்வீர்களே.
ஆபிரகாம் என்ன கிரியை செய்தார்?அதற்கு அவர்கள் (இசுரயேலர்): ஆபிரகாமே எங்கள் பிதா என்றார்கள். இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் ஆபிரகாமின் பிள்ளைகளாயிருந்தால் ஆபிரகாமின் கிரியைகளைச் செய்வீர்களே.
கலாத்தியர் 3: 6-9
6 ஆபிரகாமும் கடவுள் மேல் விசுவாசம் வைத்தார், அதனால் அவர் நீதிமானாகக் (உண்மையுள்ளவர்) கருதப்பட்டார்.”
7 விசுவாசத்தோடு வாழ்கிறவர்கள்தான் ஆபிரகாமின் பிள்ளைகள்+ என்பது நிச்சயமாகவே உங்களுக்குத் தெரியும்.
8 விசுவாசத்தைக் காட்டும் மற்ற தேசத்து மக்களைக் கடவுள் நீதிமான்களாக ஏற்றுக்கொள்வார் என்பதை வேதவசனம் முன்கூட்டியே சொன்னது; அதாவது, “உன் மூலமாக எல்லா தேசத்தாரும் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்வார்கள்” என்ற நல்ல செய்தியை ஆபிரகாமுக்குச் சொன்னது.
9 அதனால், விசுவாசத்தோடு வாழ்கிறவர்கள் விசுவாசமுள்ள ஆபிரகாமைப் போல+ ஆசீர்வதிக்கப்படுகிறார்கள்.
ஆம். நாமும் கடவுள் மேல் விசுவாசம் கொண்டால், ஆபிரகாமுக்கு கடவுள் தந்த வாக்குதத்தத்திற்கு உரிமையாளர் ஆவோம்.
6 ஆபிரகாமும் கடவுள் மேல் விசுவாசம் வைத்தார், அதனால் அவர் நீதிமானாகக் (உண்மையுள்ளவர்) கருதப்பட்டார்.”
7 விசுவாசத்தோடு வாழ்கிறவர்கள்தான் ஆபிரகாமின் பிள்ளைகள்+ என்பது நிச்சயமாகவே உங்களுக்குத் தெரியும்.
8 விசுவாசத்தைக் காட்டும் மற்ற தேசத்து மக்களைக் கடவுள் நீதிமான்களாக ஏற்றுக்கொள்வார் என்பதை வேதவசனம் முன்கூட்டியே சொன்னது; அதாவது, “உன் மூலமாக எல்லா தேசத்தாரும் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்வார்கள்” என்ற நல்ல செய்தியை ஆபிரகாமுக்குச் சொன்னது.
9 அதனால், விசுவாசத்தோடு வாழ்கிறவர்கள் விசுவாசமுள்ள ஆபிரகாமைப் போல+ ஆசீர்வதிக்கப்படுகிறார்கள்.
10. விசுவாசித்தால் இசுரயேலருக்கும் இரட்சிப்பு
வாசிப்போம்
சகேயு - ஆபிரகாமின் குமாரன்
லூக்கா 19: 8
8 சகேயு நின்று, கர்த்தரை நோக்கி: ஆண்டவரே, என் ஆஸ்திகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுக்கிறேன், நான் ஒருவனிடத்தில் எதையாகிலும் அநியாயமாய் வாங்கினதுண்டானால், நாலத்தனையாகத் திரும்பச் செலுத்துகிறேன் என்றான்.
9 இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு இந்த வீட்டுக்கு இரட்சிப்பு வந்தது; இவனும் ஆபிரகாமுக்குக் குமாரனாயிருக்கிறானே.
10 இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார் என்றார்.

18 வருடமாக கூன் விழுந்த பெண் = ஆபிரகாமின் மகள்
லூக்கா 13: 11,16
11 18 வருஷங்களாக உடல்நலப் பிரச்சினையோடு தவித்துவந்த ஒரு பெண் அங்கே இருந்தாள். கொஞ்சமும் நிமிர முடியாதளவு அவளுக்குக் கூன் விழுந்திருந்தது.
16 சாத்தான் 18 வருஷங்களாகக் கட்டி வைத்திருந்த ஆபிரகாமின் மகளான இந்தப் பெண்ணை இந்தக் கட்டிலிருந்து ஓய்வுநாளில் விடுதலை செய்யக் கூடாதா?”

இங்கு நாம் பார்த்த வசனங்களின் படி, இஸ்ரயேல் மக்களும் இழந்து போன விசுவாசத்தை (வெள்ளிக் காசை) கண்டு கொண்டால், இரட்சிக்கப்படுவார்கள் = ஆபிரகாமுக்கு கொடுக்கப் பட்ட வாக்குதத்தத்திற்கு பங்காளிகள் ஆவார்கள்.
11. விசுவாசத்தினால் கடவுளுக்கு ஏற்புடையவராகும் புறஜாதியார்
சுருக்கமாக,
இஸ்ரயேல் மக்கள் விசுவாசம் (1) இல்லாததால், அளிக்கப்பட்டிருந்த மற்றதை (9) இழந்து போனார்கள்.
புறஜாதியார், விசுவாசம் (1) கொண்டதால், மற்றவை (9) இலவசமாக அளிக்கப்பட்டது.
அதாவது,
புறஜாதியாராகிய நாம் விசுவாசத்தினால்
நம்மை இஸ்ரயேலர் என்று அழைத்துக் கொள்கிறோம்.
கடவுளை அப்பா என்று அழைக்கிறோம்.(புத்திரசுவிகாரம்)
நம்மிடையே அவருடைய மகிமையை வெளிப்படுத்துகிறார்.(மகிமை)
நாம் கடவுளோடு ஞானஸ்நானம் உடன்படிக்கை செய்து,
புது உடன்படிக்கையான அன்பின் பிரமாணம் மூலம் திருவிருந்தில் பங்கேற்கிறோம்.(உடன்படிக்கை)
கடவுளையும் இறைமகனார் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவையும் அறிந்து, பரிசுத்த சேவை (தேவாராதனை) செய்யும் பாக்கியத்தை பெற்றிருக்கிறோம்.
ஆபிரகாமுக்கு கொடுக்கப்பட்ட வாக்குதத்தத்திற்கு உரிமையாளர் ஆகி உள்ளோம்.(வாக்குத்தத்தம்)
எபிரேயர் 11ஆம் அதிகாரத்தில், விசுவாசத்தினால் நற்சாட்சி பெற்ற இஸ்ரயேலரின் பிதாக்கள் நம்மை மேகம் போல சூழ்ந்து கொண்டிருக்க நமக்கு குறிப்பிடப்பட்டுள்ள பந்தயத்தில் மன உறுதியுடன் ஓட அழைக்கப்பட்டுள்ளோம்.
(எபிரேயர் 12:1)(பிதாக்கள்)
கிறிஸ்துவை நம் உள்ளத்தில் ஏற்று கொண்டுள்ளோம்.(கிறிஸ்து)
12. விசுவாசம் தொலைந்தால், மற்றனைத்தும் தொலைந்து போகும்
எப்படி இஸ்ரயேல் மக்கள் தொலைந்த இந்த விசுவாசம் என்னும் வெள்ளிக் காசை நமக்கு எளிதாக கிடைத்ததோ,
அதை நாமும் இழப்பது எளிது.
இந்த ஒரு வெள்ளிக் காசை இழந்து போனால், மற்றதையும் இழந்து போவோம்.
வாசிப்போம்
லூக்கா 18: 8
நான் உங்களுக்குச் சொல்கிறேன், ... மனிதகுமாரன் வரும்போது பூமியில் உண்மையிலேயே இப்படிப்பட்ட விசுவாசத்தைப் பார்ப்பாரா?” என்று கேட்டார்.
நமக்கு இலவசமாக கிடைத்த இந்த விசுவாசம் என்னும் வெள்ளிக் காசை நாம் இழந்து போனால், அது உருண்டு யார் அதை தேடுகிறார்களோ, அவர்களிடம் சென்று விடும்.
நான் உங்களுக்குச் சொல்கிறேன், ... மனிதகுமாரன் வரும்போது பூமியில் உண்மையிலேயே இப்படிப்பட்ட விசுவாசத்தைப் பார்ப்பாரா?” என்று கேட்டார்.
13. இந்த உவமை மூலமாக பரிசேயர் வேதபாரகருக்கு என்ன பாடம்?
தங்களை நீதிமான்கள் என்று எண்ணிக்கொண்டும், பாவிகளுடன் நம் ஆண்டவர் உணவருந்துகிறார் என்று முணுமுணுத்த பரிசேயர் வேத பாரகரிடம்,
இந்த உவமை மூலமாக, இஸ்ரயேல் மக்களாகிய அவர்களிடம், 9 வெள்ளிக் காசுகள் இருந்தும், விசுவாசம் என்ற ஒரு வெள்ளிக் காசை தொலைத்ததால்,
அந்த ஒரு வெள்ளிக் காசு (விசுவாசம்) யாரிடம் இருக்கிறதோ அவர்களிடம் செல்கிறேன் என்பதே.
வாசிப்போம்
மல்கியா 3: 1-3
1 நீங்கள் ஆர்வத்தோடு தேடுகிற உண்மையான எஜமான் திடீரென்று தன்னுடைய ஆலயத்துக்கு வருவார்.
2 ஆனால், அவர் வரப்போகிற நாளை யாரால் தாக்குப்பிடிக்க முடியும்? அவருக்குமுன் யாரால் நிற்க முடியும்? அவர் புடமிடுகிறவரின் நெருப்பு போலவும், சலவைக்காரரின் சலவைக்கட்டி போலவும் இருப்பாரே.
3 அவர் புடமிடுகிறவரைப் போலவும், வெள்ளியைச் சுத்தப்படுத்துகிறவரைப் போலவும் உட்காருவார்.
லேவியின் மகன்களை அவர் சுத்தப்படுத்துவார்.
தங்கத்தையும் வெள்ளியையும் புடமிடுவது போல அவர்களைப் புடமிடுவார்.
அதனால், அவர்கள் கடவுளுக்கு நீதியோடு காணிக்கை செலுத்தும் ஜனங்கள் ஆவார்கள்.
ஆம். நாம் அவருடைய ஆலயமாக இருக்கிறபடியால்,1 நீங்கள் ஆர்வத்தோடு தேடுகிற உண்மையான எஜமான் திடீரென்று தன்னுடைய ஆலயத்துக்கு வருவார்.
2 ஆனால், அவர் வரப்போகிற நாளை யாரால் தாக்குப்பிடிக்க முடியும்? அவருக்குமுன் யாரால் நிற்க முடியும்? அவர் புடமிடுகிறவரின் நெருப்பு போலவும், சலவைக்காரரின் சலவைக்கட்டி போலவும் இருப்பாரே.
3 அவர் புடமிடுகிறவரைப் போலவும், வெள்ளியைச் சுத்தப்படுத்துகிறவரைப் போலவும் உட்காருவார்.
லேவியின் மகன்களை அவர் சுத்தப்படுத்துவார்.
தங்கத்தையும் வெள்ளியையும் புடமிடுவது போல அவர்களைப் புடமிடுவார்.
அதனால், அவர்கள் கடவுளுக்கு நீதியோடு காணிக்கை செலுத்தும் ஜனங்கள் ஆவார்கள்.
அவருடைய இரண்டாம் வருகையில், தம்மை தேடி விசுவாசத்தை (வெள்ளிக் காசை) காத்துக் கொண்டிருக்கும், தம்முடைய ஜனங்களை தமது சத்தியத்தினால் புடமிடுவார் = சுத்தப்படுத்துவார்.
14. முடிவு காலத்தில் வாழும் நமக்கான பாடம்
வாசிப்போம்
எபிரேயர் 3: 12,14
12 அதனால் சகோதரர்களே, உயிருள்ள கடவுளைவிட்டு விலகிப் போவதன் காரணமாக உங்களில் யாருடைய இதயமும் விசுவாசம் இல்லாத பொல்லாத இதயமாக மாறிவிடாதபடி எப்போதும் எச்சரிக்கையாக இருங்கள்.
14 ஆரம்பத்தில் நமக்கு இருந்த நம்பிக்கையை முடிவுவரை உறுதியாகப் பிடித்துக்கொண்டிருந்தால் மட்டும்தான் நாம் கிறிஸ்துவோடு பங்குள்ளவர்களாக ஆவோம்.
சத்தியத்தில் உடன் பயணிக்கும் தங்களை கடவுளாம் பரமதந்தையும் நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் ஆசீர் அளிப்பார்களாக.
12 அதனால் சகோதரர்களே, உயிருள்ள கடவுளைவிட்டு விலகிப் போவதன் காரணமாக உங்களில் யாருடைய இதயமும் விசுவாசம் இல்லாத பொல்லாத இதயமாக மாறிவிடாதபடி எப்போதும் எச்சரிக்கையாக இருங்கள்.
14 ஆரம்பத்தில் நமக்கு இருந்த நம்பிக்கையை முடிவுவரை உறுதியாகப் பிடித்துக்கொண்டிருந்தால் மட்டும்தான் நாம் கிறிஸ்துவோடு பங்குள்ளவர்களாக ஆவோம்.
பரமதந்தைக்கும் இறைமகனாருக்கும் மாட்சி உண்டாவதாக.
ஆமென்.

Comments
Post a Comment