FAITH COMES FROM HEARING. ROMANS 10:17



[32] THE ROBE OF JONATHAN | யோனத்தானின் மேலங்கி [1 SAMUEL 18:4]

நிழல் நிஜம்
கேள்வி

நிழல்:

தாவீது சவுலிடம் பேசி முடித்த போது யோனத்தானின் உள்ளம் தாவீதின் உள்ளத்தோடு ஒன்றுப்பட்டது. யோனத்தான் அவரை தம் உயிரெனக் கருதி, அவர் மீது அன்பு கொண்டிருந்தார்.
யோனத்தான் தாவீதுடன் உடன்படிக்கை செய்து கொண்டார். ஏனெனில் அவரை தம் உயிரெனக் கருதி, அவர் மீது அன்பு கொண்டிருந்தார்.

யோனத்தான் தான் அணிந்திருந்த மேலங்கியைச் சுழற்றி தாவீதுக்குக் கொடுத்தார். அத்துடன் தம் அங்கி,
வாள் வில், கச்சை ஆகியவற்றையும் கொடுத்தார்.
1 சாமுயேல் 18:1,3,4

பொருள்:

இங்கு >>> 
சவுல் = ராஜா + தந்தை.
பரமதந்தையை அடையாளப் படுத்துவார். 

ஜோனதன் = ராஜாவாகிய தந்தையின் மகன் = 
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து

தாவீது: திருச்சபை= 144000 = நாம் = CHURCH CLASS 

தாவீது,  தந்தையுடன் பேசிய / அறிந்த பின் - ஜோனதனின் உள்ளம் தாவீதுடன் ஒன்று பட்டு - மேலங்கி, அங்கி, வாள், கச்சை கொடுத்தார்

என்பது  திருச்சபையாக அழைக்கபட்டவர் பரமதந்தையை அறிந்து உடன்படிக்கை செய்த பின், 

கிறிஸ்து - தமது திருச்சபையை நேசித்து அவர்களுக்கு தனது 

நேர்மை என்னும் ஆடை
யை அணிவித்து,  
(நேர்மை என்னும் ஆடையை எனக்கு அணிவித்தார். 
எசாயா 61:10)

அங்கி = வெண்மையான  அங்கி = தூய்மை (திருவெளிப்பாடு 7:13) 

கச்சை =  உண்மை
(உண்மையை இடைக்கச்சையாகக் கட்டிக் கொண்டு,
எபேசியர் 6 : 14)

வாள் = போர் வாள் = சத்தியம் 
(கடவுளின் வார்த்தையைத் தூய ஆவி அருளும் போர்வாளாகவும் எடுத்துக் கொள்ளுங்கள். 
எபேசியர் 6:17)

ஆகியவற்றை தருவதை அடையாளப் படுத்துகிறது. 

பரமதந்தைக்கும் இறைமகனாருக்கும் மாட்சி உண்டாவதாக. 

Comments

Post a Comment