அன்பானவர்களே 🙏
நிழல் நிஜம்
கேள்வி
கேள்வி
நிழல்:
ஆகாய் 1:14,15
"14 அப்போது, ஆண்டவர் யூதாவின் ஆளுநரும் செயல்தியேலின் மகனுமாகிய செருபாபேலின் உள்ளத்தையும் தலைமைக் குருவும் யோசதாக்கின் மகனுமாகிய யோசுவாவின் உள்ளத்தையும் மக்களுள் எஞ்சியிருந்தோர் அனைவரின் உள்ளத்தையும் தட்டியெழுப்பினார். அவர்களும் சென்று தங்கள் கடவுளாகிய படைகளின் ஆண்டவரது இல்லத்தைக் கட்டும் பணியை மேற்கொண்டார்கள்.
15 அந்நாள் தாரியு அரசனது இரண்டாம் ஆட்சியாண்டின் ஆறாம் மாதம் இருபத்து நான்காம் நாள்".
ஆகாய் 1:14, 15
நிஜம்
ஆகாய் சொன்ன வார்த்தைகள் யாவும் ஆலயம் கட்ட தாமதமாகும் போது ஜனங்களை உற்சாகப்படுத்துவதற்காக கூறப்பட்ட வார்த்தைகள் ஆகும். ஆகாய் மூலம் கடவுளாம் பரமதந்தை ஐந்து முறை தன்னுடைய வார்த்தைகளை தெரிவித்தார். அதில் இந்த வாக்கியம் இரண்டாம் முறை வந்த வார்த்தைகள் ஆகும்.
2 - சுவிசேஷ யுகத்தின் காலம்
6 - ஆறாம் சபையின் காலம்
24 - முடிவு பகுதியை அடையாளப்படுத்துகிறது
இதன் அடிப்படையில் ஆகாய் மூலம் சொல்லப்பட்ட இந்த வார்த்தைகள், ஆறாம் சபையின் முடிவு காலத்தில் ஆறாம் சபையின் தூதன் மூலம் வெளிப்பட்ட கடவுளின் சத்தியத்தின் காரியங்களை அடையாளப்படுத்துகிறது.
இதன் விளைவாக அநேக கடவுளின் பிள்ளைகள் மிகவும் உற்சாகத்தோடு தங்கள் கடவுள் பக்திகுரிய ஜீவத்தின் காரியங்களை செயல்படுத்த தொடங்கினர். கடவுளின் ஆலயம் மீண்டுமாக உற்சாகத்தோடு தொடங்கப்பட்டது.
நாமும் உற்சாகமாக கட்டுவோம்
கிறிஸ்துவுக்குள்
ஆமென்
ReplyDelete🙏🙏🙏🙏🙏
ReplyDeleteAmen. Praise the Lord
ReplyDelete