FAITH COMES FROM HEARING. ROMANS 10:17



[9] THE BIBLE ABOUT THE 4 COUNTRIES ON THE MAP | வரைபடத்தில் உள்ள 4 நாடுகள் பற்றி பைபிள்.

அன்புடையீர்🙏
இந்த வரைபடத்தில் உள்ள நான்கு நாடுகள் தற்போதுள்ள பிரச்சனையிலும் சம்பந்தப்பட்டுள்ளன.
israel iran syria lebanon bible

இந்த நான்கு நாடுகளை குறித்து BIBLE என்ன சொல்லுகிறது?

பதில்:
நான்கு நாடுகள்:
1️⃣ இஸ்ரயேல்
2️⃣ ஈரான்
3️⃣ சீரியா
4️⃣ லெபனான்

இஸ்ரேல்:
மட்டாய் தண்டிக்க படுவார்கள்.
நான் உன்னோடு இருக்கின்றேன்; உன்னை மீட்பதற்காக உள்ளேன், என்கிறார் ஆண்டவர். எந்த மக்களினத்தார் இடையே நான் உன்னைச் சிதறடித்தேனோ அவர்கள் அனைவரையும் முற்றிலும் அழித்தொழிப்பேன்; உன்னையோ முற்றிலும் அழிக்கமாட்டேன்; உன்னை நீதியான முறையில் தண்டிப்பேன்; உன்னைத் தண்டிக்காமல் விட்டுவிடமாட்டேன்; உன்னை எவ்வகையிலேனும் தண்டியாதுவிடேன்.
- எரேமியா 30:11

கடவுள் யார் என்று புரிந்து கொள்வார்கள்.
நான் என் மக்களாம் இஸ்ரயேலில் என் திருப்பெயரை அறியச் செய்வேன். என் திருப்பெயரை இனிமேல் தீட்டுப்படவிடமாட்டேன். ஆண்டவராகிய நானே இஸ்ரயேலில் தூயவராய் இருப்பவர் என வேற்றினத்தார் அறிந்துகொள்வர்.
- எசேக்கியேல் 39:7

ஈரான்(பெர்சியா):
முற்றிலுமாக தோல்வி அடைவார்கள்.
இஸ்ரயேல் மலைகளில் நீ வீழ்வாய்; நீயும் உன் எல்லாப் படைகளும், உன்னோடிருக்கும் மக்களினங்களும் வீழ்வீர். நான் உன்னை ஊன் தின்னும் எல்லாப் பறவைகளுக்கும், காட்டு விலங்குகளுக்கும் இரையாகக் கொடுப்பேன்.

நீ திறந்தவெளியில் வீழ்வாய். நானே இதை உரைத்தேன், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.
- எசேக்கியேல் 39:4-5

சீரியா:
பாழடைந்த மண்மேடாக மாறும்
தமஸ்கு நகரைப் பற்றிய திருவாக்கு; நகர் என்ற பெயரை தமஸ்கு இழந்துவிடும்; அது பாழடைந்த மண்மேடாக மாறிவிடும்.
- எசாயா 17:1

லெபனான்:
சாம்பலாகும்
லெபனோனே! உன் வாயில்களைத் திறந்துவை; நெருப்பு உன் கேதுரு மரங்களைச் சுட்டெரிக்கட்டும்.
செக்கரியா 11:1

அந்நாளில் நான் எருசலேமுக்கு எதிராக வரும் வேற்றினத்தார் அனைவரையும் அழிக்க வகைதேடுவேன்.
செக்கரியா 12:9

இஸ்ரயேல் - கடவுள் யார் என்று புரிந்து கொள்ள வேண்டும்.
உலகம் - கடவுள் யார் என்று அறிந்து கொள்ள வேண்டும்.

நாம், அறிந்தும் புரிந்தும் இருப்பதால் பாக்கியம் பெற்றவர்கள்.

ஆனாலும் தண்டனைக்கு தப்ப மாட்டோம் நீதியில் நிலைநிற்கவில்லையென்றால்.

கிறிஸ்துவுக்குள்

Comments