FAITH COMES FROM HEARING. ROMANS 10:17



[68] RUTH'S SUCCESSOR | ரூத்தின் சுதந்தரவாளி

அன்பானவர்களே 🙏
நிழல் நிஜம்
நிழல் : ரூத் 4: 6-8
6 அவரோ என்னால் அந்த நிலத்தை வாங்க இயலாது. ஏனெனில் இதனால், என் குடும்பத்திற்குரிய உரிமைச் சொத்து குறைந்து போகும். நீரே அந்த உரிமையை எடுத்துக் கொள்ளும். என்னால் நிலத்தை வாங்கவே இயலாது என்றார்.
7
இஸ்ரயேலரிடையே பண்டைக் காலத்தில் ஒரு வழக்கம் இருந்தது. நிலவிற்பனை அல்லது கொடுக்கல் வாங்கல் நடைபெறும்போது எடுக்கும் முடிவை உறுதிப்படுத்துவதற்காக, ஒருவர் தம் காலணியைக் கழற்றி மற்றவரிடம் கொடுத்துவிடுவார். எடுக்கப்பட்ட முடிவை உறுதிப்படுத்தும் முறை இதுவே. 

8
அவ்வாறே அந்த முறை உறவினர் போவாசிடம், நீரே வாங்கிக்கொள்ளும் என்று சொன்னபோது, அவர் தம் காலணியைக் கழற்றி அவரிடம் கொடுத்தார்.
ரூத்து 4:6,7,8

நிஜம்:

ரூத் : சபை
ROMANS 2:7
"சோர்ந்துபோகாமல் நற்கிரியைகளைச்செய்து, மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் தேடுகிறவர்களுக்கு நித்தியஜீவனை அளிப்பார்."

போவாஸ் :
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து.
2 CORINTHIANS 8:9
"நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையை அறிந்திருக்கிறீர்களே; அவர் ஐசுவரியமுள்ளவராயிருந்தும், நீங்கள் அவருடைய தரித்திரத்தினாலே ஐசுவரியவான்களாகும்படிக்கு, உங்கள் நிமித்தம் தரித்திரரானாரே."

கிட்டின சுதந்திரவாளி :
நியாயப்பிரமாணம் மற்றும் அதன் மூலம் வந்த மனுஷர்கள்.
ரோமர் 8:3
"அதெப்படியெனில், மாம்சத்தினாலே பலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததை கடவுளே செய்யும்படிக்கு, தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார்.

HEBREWS 7:11
அல்லாமலும், இஸ்ரவேல் ஜனங்கள் லேவிகோத்திர ஆசாரிய முறைமைக்குட்பட்டிருந்தல்லவோ நியாயப்பிரமாணத்தைப் பெற்றார்கள்; அந்த ஆசாரிய முறைமையினாலே பூரணப்படுதல் உண்டாயிருக்குமானால், ஆரோனுடைய முறைமையின்படி அழைக்கப்படாமல், மெல்கிசேதேக்கினுடைய முறைமையின்படி அழைக்கப்பட்ட வேறோரு ஆசாரியர் எழும்பவேண்டுவதென்ன?

ரூத் 4:4-5
ஆகையால் நீர் அதை ஊராருக்கு முன்பாகவும், என் ஜனத்தின் மூப்பருக்கு முன்பாகவும் வாங்கிக்கொள்ளும்படி உமக்கு அறியப்பண்ணவேண்டும் என்றிருந்தேன்; நீர் அதைச் சுதந்தரமுறையாக மீட்டுக்கொள்ள மனதிருந்தால், மீட்டுக்கொள்ளும்; அதை மீட்டுக்கொள்ள மனதில்லாதிருந்தால், நான் அதை அறியும்படிக்கு எனக்குச் சொல்லும்; உம்மையும் உமக்குப்பின்பு என்னையும் தவிர, அதை மீட்கத்தக்கவன் வேறொருவனும் இல்லை என்றான்; அதற்கு அவன்: நான் அதை மீட்டுக்கொள்ளுகிறேன் என்றான்.
அப்பொழுது போவாஸ்: நீர் நகோமியின் கையிலே அந்த வயல் நிலத்தை வாங்குகிற நாளிலே மரித்தவனுடைய சுதந்தரத்தில் அவன் பேரை நிலைநிற்கப்பண்ணும்படிக்கு, அதை மரித்தவன் மனைவியாகிய மோவாபிய ஸ்திரீயான ரூத் கையிலும் வாங்கவேண்டியது என்றான்.

சுதந்தரவாளி நிராகரித்தது:
நியாயப்பிரமாணத்தின் கீழ் வந்தவர்கள், பூமிக்குரிய ஆசீர்வாதங்களை (வயல் நிலம்) மட்டும் எதிர்பார்த்தார்கள். ஆவிக்குரிய ஆசிர்வாதங்களை (ரூத்தை திருமணம் செய்ய) நிராகரித்தார்கள்.

பாதரட்சை மாற்றப்பட்டது-
ஆசீர்வாத உரிமையானது நியாயப்பிரமாணத்திடம் இருந்து கிறிஸ்துவிடம் சென்றதைக் குறிக்கிறது.

கிறிஸ்துவுக்குள்

Comments