FAITH COMES FROM HEARING. ROMANS 10:17



[1] 38 YEARS/ 38 ஆண்டுகள் - [DEUTERONOMY 2:14]


menora 38 years
கேள்வி
முப்பத்தெட்டு ஆண்டுகள்
14 நாம் காதேசு பர்னேயாவினின்று புறப்பட்டு செரேது ஓடையைக் கடப்பதற்கு ஆன காலம் முப்பத்தெட்டு ஆண்டுகள். அதற்குள் அந்தத் தலைமுறையின் போர்வீரர் அனைவரும், ஆண்டவர் அவர்களுக்கு ஆணையிட்டுக் கூறியபடியே, பாளையத்தினின்று அடியோடு அழிந்தொழிந்தனர்

15 உண்மையாகவே, அவர்கள் அனைவரும் அடியோடு அழிந்தொழியும்வரை ஆண்டவரின் கை அவர்களுக்கு எதிராய் இருந்தது. 

16 மக்களுள் போர்வீரராய் இருந்த எல்லோரும் முற்றிலும் இறந்தனர். 
இணைச் சட்டம் (உபாகமம்) 2:14,15,16

இதன் ஞான அர்த்தத்தை சொல்லவும். 🙂

1)போர் வீரரான அந்த தலை முறையினர்: 
இஸ்ரயேல் மக்கள், நம் கடவுளாம் பரமதந்தைக்கு முழுவதுமாக கீழ்படியாமல் முரட்டாட்டமும், கடிண குணமுள்ளவர்களாய் கடவுளுக்கு விரோதமான, கடவுள் அருவருக்கும் காரியங்களை செய்தவர்களாக இருந்தார்கள். 

ரோமர் 1 : 20- 28 வாசியுங்கள்... 
20 ஏனெனில் கண்ணுக்குப் புலப்படா அவருடைய பண்புகள்-அதாவது, என்றும் நிலைக்கும் அவரது வல்லமையும் கடவுள் தன்மையும்-உலகப் படைப்பு முதல் அவருடைய செயல்களில் மனக் கண்களுக்கு தெளிவாய்த் தெரிகின்றன. ஆகவே அவர்கள் சாக்குப்போக்கு சொல்வதற்கு வழியே இல்லை. 
21 ஏனெனில், அவர்கள் கடவுளை அறிந்திருந்தும் கடவுளுக்குரிய மாட்சியை அவருக்கு அளிக்கவில்லை; நன்றி செலுத்தவுமில்லை. அதற்கு மாறாக அவர்கள் எண்ணங்கள் பயனற்றவையாயின. உணர்வற்ற அவர்களது உள்ளம் இருண்டு போயிற்று. 
32 இப்படியெல்லாம் நடப்பவர்கள் சாவுக்குரியவர்கள் என்னும் கடவுளின் ஒழுங்கை அறிந்திருந்தும் இவ்வாறு நடக்கின்றார்கள்; தாங்கள் நடப்பது மட்டுமன்று, அப்படி நடப்பவர்களையும் பாராட்டுகிறார்கள். 
உரோமையர் 1:20- 32

யுத்த மனிதர்களான (போர் வீரரான)  இவர்களெல்லாரும்: 
6000 வருடத்தின் முடிவிலே அழியப்போகிற உலக அரசுகளும்;   உலக மக்களையும்  அடையாளப்படுத்துவார்கள்.

2)சேரேத் ஆற்றைக் கடக்க  38 ஆண்டுகள் ஆயிற்று: 
38 ஆண்டுகள்: 
மனுகுலத்தின் 6000 ஆண்டுகளை குறிக்கும். 
இதை எப்படி புரிந்து கொள்வது?
யோவான் 5 : 2-10 வரை உள்ள இறை வார்த்தைகளில் 
பெதஸ்தா எனப்பட்ட ஒரு குளம் அருகே, 38 ஆண்டுகளாக உடல் நலமற்ற ஒரு மனிதனை,
நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஓய்வு நாளில் குணமாக்கினார். 

ஓய்வு நாள்:
இந்த அற்புதம் ஓய்வு நாளில் நடைபெற்றது, 
ஓய்வு நாள் என்பது ஆயிரமாண்டு அரசாட்சியை அடையாளப்படுத்தும்.

பெதஸ்தா: 
இரக்கத்தின் வீடு, கிருபையின் வீடு என்று அர்த்தம். 

உடல் நலமற்ற மனிதன் குணமடைய
38 ஆண்டுகள் தேவைப்படுகிறது என்பது மனுகுலம் மீட்பு அடைய 6000 ஆண்டுகள் ஆகும் என்பதை குறிக்கும். 

இந்த குணமடைதல் நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவினால்  கிடைக்கிறது,

6000 வருடத்தின் முடிவில், உலக மக்களுக்கு மீட்கும் பொருள் கொடுக்கப்பட்டு,  உயிர்த்தெழுந்து வரும்போது,  வாழ்வுக்குரிய காரியங்களைப் பெற்றுக் கொள்ளவார்கள்.

யுத்த மனிதரான அந்த சந்ததியாரெல்லாரும் மாண்டு போக, 38 வருஷமாகிறது: 
சேரேத் ஆற்றைக் கடந்தால், அடுத்ததாக;  "கானானுக்குள்",  வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட நாட்டுக்குள் நுழைந்து விடுவார்கள்.
ஆனால், போர் வீரர்கள் நுழையவில்லை. 
இது, கடவுளுக்கு விரோதமான
ஒட்டுமொத்த உலக அரசுகளும்,  உலக மக்களும்,  6000 ஆண்டுகளின் முடிவில் நடக்கும் அர்மெகெதோன் யுத்தத்தில் அழியப்போவதை அடையாளப்படுத்தும். 

கிறிஸ்துவுக்குள்


Comments

  1. 38 years is wrong

    ReplyDelete
    Replies
    1. Thank you brother for your reply. Here in Menora, We are here to learn. Can you please give us the correct understanding for this 38 years? Thank you

      Delete

Post a Comment