FAITH COMES FROM HEARING. ROMANS 10:17




GOD'S PLAN IN LEVITICUS (Page 4)

LITTLE FLOCK BROADCAST

Collection of Break Time Questions from Whatsapp

Select Your Lesson:

61. VOLUNTARY OFFERING! (Part - 3)



61. Voluntary Offering! (Part - 3)


Keeping the commitment we made!


In Lesson 60, we saw how the sacrifice of Christ was completely burned on the altar and went up as a sweet aroma to God, didn’t we?

Here, the fire of the altar is drawing near to us, the new creations!

That means, questions like fire! — to help us examine ourselves and purify ourselves...


Baptism! The Bible calls it “the answer of a good conscience toward God” (a covenant)!

When we take baptism, we step into the water with a clear mind, open eyes, a true heart, and of our own will...
saying “Yes!” to the will of God.


This is not because of anyone’s compulsion or force!
It’s our free will!
Yes! I willingly submit! I want my old man (old life) to die,
and to put on the new man (the likeness of Christ)!

A true commitment (vow)!
A free decision!


I, who made a covenant of good conscience with God!

Yes! Like our Christ who said, “Behold, I come to do Your will,” are we actually doing the will of God in our actions?
Or does it just end with mere words?

✨Do I appear like Christ only when others are watching me?
Or do I sincerely strive to live like Christ even when no one sees me, knowing that God is watching?


✨How is my behavior toward those who anger me or those weaker than me?
Do I have a forgiving heart? Or a harsh and condemning spirit?
Are the words from my mouth sweet? Or do they inject poison?
Are my secret thoughts pure?
Does my patience last long?

Such questions are being stirred up within our hearts...

Not to condemn us, but to strengthen us in Christ!

To clothe us with His likeness.


Then, have we drifted away from His likeness?

That’s what today’s lesson is meant to examine...

Let’s ask ourselves:

We who were buried through baptism, are we still adorning the old man (the corpse) that was crucified on the cross?

What are the worldly thoughts that make us wander away (or weaken) so that the new creation doesn’t grow?


We avoid standing before the mirror of God’s Word every day...
but we keep our eyes open before the mirror of the world — our phone screens!

Instead of valuing God’s thoughts, we start valuing self (human) opinions more.

When others make mistakes, we start thinking of ourselves as holy!


The time for worship and studying the Word gets shorter; but we increase the time spent on worldly entertainment — to please others...

Family burdens, worries about sickness, debt, business, work, future, property, comfort, show-off, luxury;
love, betrayal, secret sins, loneliness, fear —
all these are traps trying to push us back into the pit from which Christ rescued us!


What should I do to escape from this?

Every day, before the phone in our hands awakens the world in the morning, we must remember the water!
That is — our baptism!

And tell our hearts right now:
I die to myself!
I live in Christ.

To do that, I must:

Pray before God — quietly but firmly — through the Word!

Take a portion of the true Word, and study and meditate on it!

Because:
God speaks to us through His Word...
and we speak to God through prayer!

Let’s kneel before God and ask the Holy Spirit to clothe us with the likeness of the new man (Christ).
Let the first and last words of our day be the Psalms and the Gospels!

Every morning, on a small piece of paper, let’s write down the thoughts and sins that arise in our hearts. Let’s pray not to repeat them — let’s fight against them.
Then in the evening, tear that paper and throw it away... from our hearts too!

Once a week, let’s share thoughts with true children of God —
biblically and sincerely...

There’s only one question we must ask ourselves!

“Father! In what way am I falling short of Your Son?”
That’s all...

May God Himself protect us and lead us through Christ!
Amen!



61. தன்னார்வக் காணிக்கை! (பகுதி - 3)Ch. 22:18-20


நாம் செய்த பொருத்தனையைக் கடைப்பிடித்தல்!


பாடம் 60 இல்,  கிறிஸ்துவின் பலி முழுவதுமாக பலிபீடத்தில் எரிந்து, கடவுளுக்கு சுகந்த நறுமணமாக சென்றதைப் பார்த்தோம் அல்லவா?

இங்கு, புது சிருஷ்டிகளான நம்மை நோக்கி, பலி பீடத்தின் நெருப்பு நெருங்கி வருகிறது!

அதாவது நெருப்பை போன்ற கேள்விகள்! நம்மை நாம் ஆராய்ந்து பார்த்து, சுத்திகரித்துக் கொள்ள...


ஞானஸ்நானம்! வேதத்தில் இதனை "கடவுளுடனான நல்மனச்சாட்சியின் பதில்!" (உடன்படிக்கை) என்று அழைக்கின்றது!

ஞானஸ்நானம் எடுக்கும்போது, நாம் தெளிந்த புத்தியுள்ளவர்களாக, தெளிவான கண்களாலும், உண்மை இருதயத்தோடும், சுய விருப்பத்தோடும் நீரில் அடியெடுத்து வைக்கிறோம்...
கடவுளின் சித்தத்திற்க்கு "ஆம்!" என்று கூறி...


இது பிறரின் வற்புறுத்துதலினாலோ; கட்டாயத்தினாலோ அல்ல!
நம் சுய விருப்பம்!
ஆம்! நான் மனப்பூர்வமாக கீழ்படிகிறேன்! என் பழைய மனிதன் (வாழ்க்கை) மரிக்கவும்,
புதிய மனிதனை (கிறிஸ்துவின் சாயல்)
அணிந்துக் கொள்ளவும் நான் விரும்புகிறேன் என்று!

உண்மையான பொருத்தனை(சபதம்)!
சுதந்திரமான தீர்மானம்!


கடவுளுடன் நல்மனசாட்சியின் உடன்படிக்கை எடுத்த நான்!

ஆம்! உமது சித்தத்தின்படி செய்ய இதோ வருகிறேன் என்று நம் கிறிஸ்துவை போல கடவுளின் சித்தத்தை செயல்களில் செய்துக் கொண்டிருக்கிறோமா?
அல்லது அது வெறும் பேச்சுடன் மட்டும் நிற்க்கின்றதா?

✨என் சொல், செயல், நடத்தை பிறர் பார்க்கும் போது மட்டும் கிறிஸ்துவை பிரதிபலிப்பது போல் வேடம் அணிந்துக் கொள்கின்றதா?
அல்லது யாரும் பார்க்காத நேரத்திலும், கடவுள் பார்க்கிறார் என்பதை உணர்ந்து உண்மையில் கிறிஸ்துவாக நடந்துக் கொள்ள பிரயாசைப் படுகிறதா?


✨என்னை கோபப்படுத்துபவரிடமும், என்னைக் காட்டிலும் பலவீனமானவர்களிடமும், என் செயல் எப்படி உள்ளது?
மன்னிக்கும் மனநிலையிலா? அல்லது கண்டிக்கும் வன்முறையிலா?
என் நாவில் இருந்து வருபவை இனிமையாக இருக்கின்றதா? அல்லது விஷத்தை செலுத்துகின்றதா?
என் ரகசிய எண்ணங்கள் தூய்மையானதா?
என் பொறுமை நீடித்திருக்கிறதா?

இத்தகைய கேள்விகளை நம் இதயத்தில் இருந்து தட்டி எடுத்துக் கொண்டிருக்கின்றது..


நம்மை குற்றம் சாட்ட அல்ல; கிறிஸ்துவுக்குள் பலப்படுத்த!

அவரின் சாயலை தரித்துக் கொள்ள!


அப்படியெனில், நாம் அவரின் சாயலை விட்டு விலகி இருக்கிறோமா?

அதை சீர்தூக்கி பார்க்கவே இன்றைய பாடம்...

நம்மை நாமே:

ஞானஸ்நானத்தின் மூலம் அடக்கம் பண்ணப்பட்ட நாம், சிலுவையில் அறைந்த பழைய மனிதனுக்கு(பிணத்திற்க்கு) இன்னும் அலங்காரம் பண்ணிக் கொண்டிருக்கின்றோமா?

புதிய சிருஷ்டி வளராத வகையில், வழிவிலக வைக்கும் (சோர்வடைய வைக்கும்) இந்த உலகத்தின் சிந்தனைகள் என்னென்ன?


ஒவ்வொரு நாளும் நம்மை பிரதிபலிக்கும் கண்ணாடியாகிய கடவுளின் வார்த்தையின் முன் நிற்பதை தவிர்க்கின்றோம்...
உலகத்தின் கண்ணாடியாகிய அலைபேசியின் திரையின் முன் கண்விழிக்கின்றோம்!

கடவுளின் கருத்துக்களை விட; சுய(மனிதர்களின்) கருத்துக்களை தான் அதிக முக்கியத்துவமாக கருத ஆரம்பிக்கிறோம்.

மற்றவர்கள் தவறிழைக்கும் போது, நம்மை நாம் பரிசுத்தவான்களாக கருதிக் கொள்கிறோம்!


வழிபாட்டுகளின் நேரமும், வேதத்தின் படிப்புகளுக்கான நேரம் குறுகி; உலக பொழுதுபோக்கிற்க்கான நேரங்களை கூட்டுகிறோம், பிறரை மகிழ வைக்க...

குடும்ப பாரம்; வியாதியின் கவலைகள்; கடன்; வியாபாரம்; வேலை; எதிர்காலம்; சொத்து; சுகம்; பகட்டு; ஆடம்பரம்;
காதல்; துரோகம்; ரகசியப்பாவங்கள்; தனிமை; அச்சம்;
இவையெல்லாம்; நம்மை கிறிஸ்து மீட்டெடுத்த உலக குழிக்குள் மீண்டும் தள்ளிவிடுவதற்க்கான கண்ணிகள்!


இதிலிருந்து தப்பிக்க நான் என்ன செய்ய வேண்டும்?

ஒவ்வொரு நாளும், காலையில் தொலைபேசி நம் கைகளில் உலகத்தை எழுப்புவதற்க்கு முன்பு; தண்ணீரை நினைவில் கொள்ள வேண்டும்!
அதாவது நம் ஞானஸ்நானத்தை!

நம் இதயத்தில் இப்போது சொல்லிக் கொள்வது என்னவென்றால்;
நான் என் சுயத்திற்க்கு மரிக்கிறேன்!
கிறிஸ்துவுக்குள் பிழைக்கிறேன்.( வாழ்கிறேன்)

அதற்காக நான் செய்ய வேண்டியது:

கடவுளிடம் அமைதியான; ஆனால் உறுதியான வேத வசனத்தின் மூலம் ஜெபம்!

சத்திய வார்த்தைகளின் ஒருபகுதியை எடுத்துக் கொண்டு, அதை ஆராய்ந்து படித்தல்!

ஏனெனில்;
கடவுள் நம்மிடம் பேசுவது வேதத்தின் மூலமாக...
நாம் கடவுளிடம் பேசுவது ஜெபத்தின் மூலமாக!

கடவுளின் முன் மண்டியிடுவோம், புதிய மனிதனின்(கிறிஸ்துவின்) சாயலை தரித்துக் கொள்ள பரிசுத்த ஆவியை அருளும்படி...
நம் நாளின் முதல் வார்த்தையும், கடைசி வார்த்தையும், சங்கீதமும், நற்செய்திகளுமாய் இருக்கட்டும்!

ஒவ்வொரு நாளும், காலையில் ஒரு சிறிய தாளில், நம் மனதில் தோன்றும் சிந்தனைகளையும்; பாவங்களையும் எழுதி வைப்போம்! அதை மீண்டும் செய்யாமல் இருக்க ஜெபிப்போம்! போராடுவோம்.
மீண்டும் மாலையில் அதனை கிழித்து எறிவோம்... இதயத்தில் இருந்தும்!

வாரம் ஒருமுறை; உண்மையான தேவப்பிள்ளைகளுடன்
கருத்துக்களை பகிர்ந்துக் கொள்வோம் வேதப்பூர்வமாக...

நாம், நம்மிடம் கேட்க வேண்டிய கேள்வி ஒன்று தான்!

"பிதாவே! நான் உம் குமாரனைப் போல் அல்லாமல், எங்கே தவறி விழுகிறேன்?"
என்று...

கடவுள் தாமே நம்மை பாதுகாத்து கிறிஸ்துவினால் வழி நடத்துவாராக!
ஆமென்!



62. THE PEACE OFFERING!



62. PEACE OFFERING!


LEVITICUS 22:21

If anyone offers a SPECIAL VOW or a FREEWILL OFFERING from the herds or flocks as a FELLOWSHIP OFFERING to the LORD, it must be without blemish or defect to be acceptable.


"SHALOM!"

The meaning of this HEBREW WORD is:

PEACE! HARMONY! COMPLETENESS! WHOLENESS!


The offering we are about to study today is designed based on these very words!

"THE PEACE OFFERING!"


Is there anyone who does not desire peace?

Definitely not!

If this offering is named “PEACE OFFERING,” surely there must be something special hidden in it, right?

What is that special meaning?

Why is this offering given?

Let’s go deeper into today’s lesson to find out! 


WHY THIS OFFERING?

When GOD forgave our sins through other sacrifices, didn’t we feel a deep PEACE in our hearts? This offering is made to express our THANKFULNESS for that peace!

ANYONE can offer this sacrifice!

PRIESTS, LEVITES, LEADERS, MEN, WOMEN — even FOREIGNERS living among Israel (as long as they honor the HOLINESS of GOD) can offer this sacrifice!


THE PROCEDURE OF OFFERING:

The person must place his hands upon the head of the animal (BULL, GOAT, or SHEEP — male or female but WITHOUT DEFECT).

THE MEANING OF THIS ACT:

It signifies: “O GOD, You gave me life — this is my THANK OFFERING to YOU!”

In short, this offering can be divided into THREE TYPES:

They are:

1. THANK OFFERING (LEVITICUS 7:12)

2. VOW OFFERING (PROMISE OR COMMITMENT) (LEVITICUS 7:16)

3. FREEWILL OFFERING OUT OF LOVE (LEVITICUS 7:16)


Do you know what’s special about this offering?

This is the only offering that was SHARED and EATEN TOGETHER with GOD!

Really? YES!


🔸FIRST: The FAT portions and certain inner parts were offered to the ALMIGHTY — that was GOD’S PART!

🔸THEN: The RIGHT THIGH and the BREAST were given to the PRIESTS serving the LORD! (LEVITICUS 7:31-34)

🔸THE REMAINING PART:

Was given to the person who offered the sacrifice and his family as a HOLY MEAL.


Along with this, both LEAVENED and UNLEAVENED BREAD, mixed and unmixed with oil, were baked and presented together with the meat of the PEACE OFFERING.

GOD had a portion!

THE PRIESTS had a portion!

THE ONE WHO OFFERED had a portion!

Just imagine everyone joyfully eating together at the LORD’S TABLE in PEACE and HOLINESS!


But there were also RULES for this offering!

Do you know what they were?

The meat of the PEACE OFFERING must be eaten on the SAME DAY it is offered. It must NOT be eaten the next day.


If it was a VOW or FREEWILL OFFERING, it could be eaten the SAME DAY and, if anything remained, on the NEXT DAY.


But on the THIRD DAY, whatever remains must NOT be eaten — it must be BURNED!


THE EXPLANATION:

JOY must be FRESH, not old!

HOLINESS must be SHARED while it is still WARM!

That’s the meaning behind it!

Those who eat from the PEACE OFFERING must be CLEAN — no one who is UNCLEAN may touch or eat this HOLY FOOD!


There are many beautiful EXAMPLES in this lesson for you!

  • HANNAH!
  • DAVID!
  • SOLOMON!
  • GIDEON!

All of them offered their PEACE OFFERINGS to GOD in a wonderful way.

WHY? You can find the explanation in today’s PDF version of the lesson. 


SUMMARY:

If a child asks his father, “Why do we give the BEST PORTION of our offerings to YAHWEH?”

The father would answer:

Because,

THE LORD — YAHWEH — HAS GIVEN US HIS BEST!

In the next lesson, we will compare this PEACE OFFERING with our LORD JESUS CHRIST!

MAY GOD BLESS US ALL. 

AMEN. 



62. சமாதான பலி!


லேவியர் 22:21

சிறப்புப் பொருத்தனையோ, தன்னார்வக் காணிக்கையோ மாடுகளில் அல்லது ஆடுகளில் நல்லுறவுப் பலியாகச் செலுத்தினால், அது ஏற்கத்தக்கதாக அமைய, மாசுமறுவற்றதாய் இருத்தல் வேண்டும்.


"ஷாலோம்!"

இந்த எபிரேய வார்த்தையின் பொருள்:

அமைதி; சமாதானம்! முழுமை! நல்லிணக்கம்!


நாம் பார்க்கவிருக்கும் பலியும் இந்த வார்த்தைகளில் இருந்து தான் வடிவமைக்கப்பட்டுள்ளது!

"சமாதான பலி!"


சமாதானத்தை விரும்பாதவர்கள் யாராவது இருக்க முடியுமா?

நிச்சயம் இல்லை!

இந்த பலிக்கு சமாதானம் என்று பெயர் வைத்திருக்கிறார்கள் என்றால்; நிச்சயம் இதில் சிறப்பானது ஒளிந்திருக்கும் அல்லவா?

என்ன அந்த சிறப்பு?

எதற்காக இந்த பலி?

இதனை அறிந்துக் கொள்ள இன்றைய பாடத்தின் உள்ளே செல்வோமா? 


எதற்காக இந்த பலி?

நம் குற்றங்களை கடவுள் மற்ற பலிகளினால்  மன்னித்த போது, நம் மனதில் ஒரு சமாதானம் வருகிறது அல்லவா? அதற்கு நன்றி செலுத்தவே இந்த பலி!

இந்த பலியை யார் வேண்டுமானாலும் செலுத்தலாம்!

ஆசாரியர்கள்; லேவியர்கள்; தலைவர்கள்; ஆண்கள்; பெண்கள்; இஸ்ரயேலில் வாழும், அந்நியர்கள் (கடவுளின் பரிசுத்தத்தை மதிக்கும் வரை) இந்த பலியை செலுத்தலாம்!


பலி செலுத்தும் முறை:

தான் கொண்டு வந்த குற்றமற்ற விலங்கின் மேல் (காளை, வெள்ளாடு, செம்மறியாடு, ஆணோ பெண்ணோ ஆனால் குறைபாடு இல்லாமல்)

தன் கைகளை வைக்க வேண்டும்!

இதன் அர்த்தம்:

இந்த வாழ்க்கையைத் தந்த கடவுளுக்கு  என் நன்றி! இது அவருக்கு நான் தரும் காணிக்கை என்று சொல்வதாகும்!

சுருங்க சொல்வதானால் இந்த பலியை மூன்றாகப் பிரிக்கலாம்!

அவை:

1. நன்றி செலுத்தும் பலி (லேவியர் 7:12)

2. பொருத்தனை பலி! (சபதம் அல்லது வாக்கு) (லேவியர் 7:16)

3. அன்பினால் உண்டான விருப்ப பலி! (லேவியர் 7:16)


இந்த பலியின் சிறப்பம்சம் என்னத் தெரியுமா?

இந்த பலியை கடவுளோடு சேர்ந்து நாமும் பகிர்ந்து உண்ணப்போகிறோம்!

உண்மையாகவா? ஆமாம்!


🔸முதலில்: பலியின் கொழுப்பும், சில உள்பாகங்களும் சர்வவல்லவருக்கு செலுத்தப்படுகிறது - இது கடவுளின் பங்கு!

🔸பின்பு: வலதுதொடை; மார்பகம் தேவசேவை செய்யும் ஆசாரியர்களுக்கு வழங்கப்பட்டது!(லேவி 7:31-34)

🔸மீதமுள்ள பகுதி:

பலி செலுத்திய மனிதருக்கும், அவர் குடும்பத்தினருக்கும் புனித உணவாக வழங்கப்பட்டது.


இதில், புளித்த மற்றும் புளிக்காத, எண்ணெய் கலந்த மற்றும் கலக்காத ரொட்டிகள் சுடப்பட்டு சமாதான பலியின் இறைச்சியோடு காணிக்கையாக செலுத்தப்பட்டது.

கடவுளுக்கும் ஒரு பங்கு! 

ஆசாரியர்களுக்கும் ஒரு பங்கு!

பலி செலுத்துபவருக்கும் ஒரு பங்கு!

 அனைவரும் கர்த்தரின் மேஜையில் மகிழ்ச்சியாக பரிசுத்த உணவை சமாதானத்தோடு உண்ணும் காட்சியை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்!


இதிலும் சில விதிமுறைகள் உண்டு!

என்னத் தெரியுமா?

சமாதான பலியின் இறைச்சியை அன்றே சாப்பிட்டு விட வேண்டும். மறுநாள் சாப்பிடக் கூடாது.


பொருத்தனை அல்லது விருப்பபலியை அதே நாளில் சாப்பிட வேண்டும். ஒருவேளை மீதம் இருந்தால் மறுநாள் சாப்பிடலாம்.


ஆனால் மூன்றாம் நாளில் மீதமிருக்கும் எதையும் சாப்பிடக்கூடாது.

எரித்து விட வேண்டும்!


இதற்காக விளக்கம்:

மகிழ்ச்சி புதியதாக இருக்க வேண்டும், பழையதாக அல்ல!

பரிசுத்தம் சூடாக இருக்கும்போதே பகிர்ந்துக் கொள்ளப்பட வேண்டும்!

என்பதே ஆகும்!

இந்த பலியின் உணவை உண்பவர்களும் தூய்மையாக இருக்க வேண்டும். அசுத்தமான ஒன்றை தொட்டு இந்த பரிசுத்த உணவை தொடலாகாது!


மேலும் பல அருமையான குறிப்புகள் இந்த பாடத்தில் உங்களுக்காக விளக்கப்பட்டுள்ளது!

  • அன்னாள்!
  • தாவீது!
  • சாலமோன்!
  • கிதியோன்!

இவர்களும்; கடவுளுக்கு  சமாதான பலியை மிக அருமையாக செலுத்தி உள்ளார்கள்.

அது எதற்காக? என்பதைக் குறித்தும் இன்றைய பாடத்தின் PDF இல் கொடுக்கப்பட்டுள்ளது. 


இரத்தினச்சுருக்கம்:

ஒரு குழந்தை, தன் தந்தையைப் பார்த்து நாம் ஏன் பலியின் சிறந்த பகுதிகளை யாவேக்கு கொடுக்கிறோம்? என்றுக் கேட்டால்...

அதற்கு அந்த தந்தையின் பதில்:

ஏனென்றால்; 

யாவே கடவுள்-  நமக்கு அவருடைய சிறந்ததைக் கொடுத்தார்! என்பதே!

அடுத்த பாடத்தில்,  இந்த சமாதான பலியுடன், நம் ஆண்டவராகிய கிறிஸ்துவை பொருத்திப் பார்க்க போகிறோம்!

கடவுள் நம்மை ஆசீர்வதிப்பாராக. 

ஆமென். 



63. CHRIST, OUR PEACE OFFERING!



63. CHRIST, OUR PEACE OFFERING!


Lesson No: 62 – The Peace Offering gave peace to our hearts;
But today’s lesson teaches the peace that remains in us till our last breath!


Because the shadow of peace...

Is our living Lord JESUS CHRIST.

Earlier, for the people of Israel in the flesh, peace came through the peace offering — true indeed!
But it was only temporary peace!
Because;
Between God and the Israelites, a curtain still hung in between!


But for us, the spiritual Israelites — eternal peace!
Because the veil that once hung between God and us has been torn forever!


The reason — the life sacrifice of our sinless Jesus Christ!

SHALOM!

Once, we were enemies of God...

What? Enemies?

Yes, beloved! The Bible doesn’t sugarcoat the truth!

It tells the bitter truth as it is — plainly!

We were indeed enemies of God!


How?
Was it because God hated us?

No!

It was because we did not know God!
We were far away from Him!

🔸Our sins hid His face from us! (Isaiah 59:2)
🔸Our minds opposed His commandments! (Romans 8:7)
🔸We walked in the ways of the world, carrying wrath upon ourselves!
(Ephesians 2:1–3)

Yet;
We were reconciled through the death of the beloved Son of the Father. (Romans 5:10)


We received the adoption as sons who cry, “Abba! Father!”

Just as a spotless animal was sacrificed in the tabernacle long ago,
So our spotless Christ was offered as a living sacrifice on Calvary’s cross!


First came the Sin Offering,
Then the Peace Offering!

Christ became our Sin Offering to take away our sins;
Thus reconciling us with God, and becoming the reason for our Peace Offering!


He was wholly burnt — a sweet aroma unto the Father!

He brought together those who stood outside the fence (the Gentiles)

And those within — the chosen people of God (the Israelites) — through His cross!


That day, the Holy Food was shared — for all!

🔸In the shadow...
It was meat.

🔸In the reality — it became bread!

Where?

In the upper room!

Christ said, “Take, eat; this is My body given for you!”

(Matthew 26:26–28)

He came not only to cleanse us from sin,
But also to be the feast prepared for us!


To make peace for us, before the very people He loved —

🔸He was humiliated!
🔸He was beaten!
🔸He was crushed!
🔸He was torn!

Yet He left us with peace as His gift!
Because “the punishment that brought us peace was upon Him.” (Isaiah 53:5)

Through food, Christ revealed many truths:

When He sat and ate with sinners — His mercy was revealed!

When He multiplied bread for the hungry — His compassion was revealed!


Even His parables of the wedding banquet —

All centered around food!
Do you know why?

Because He Himself is the Bread broken for us!
His Blood — the New Covenant for us!

The covenant of peace between God and mankind!

The more we write of it, the more the love of Christ flows on and on...
It’s hard to stop, yet I stop here!


Precious Summary:

🔸Does our flesh still desire to sin?

🔸Does our mind stumble and waver?

Then look once more at Calvary’s Cross — where our Lord hung, bearing the lashes, nails, and thorns for our sins!
Are you going to repent and bring Him down from that cross?

Or...
Are you going to nail Him there again?

My heart grows heavy...
Even as I write these words...

How must it be for our Christ, and for the Father,
Each time we sin again!

We must choose —

Peace? or Disturbance?

Abba, Father! We praise You for giving Your beloved Son!

O Jesus, our Redeemer! We thank You for offering Your life, reconciling us with the Father, and granting us the right to be called His children!
Words fail us...
Before Your boundless love!


AMEN!



63. நம்முடைய சமாதான பலியாகிய கிறிஸ்து!


பாடம் எண்: 62,  சமாதான பலி; நம் இருதயத்திற்க்கு சமாதானத்தை அளித்திருக்கும்!
ஆனால் இன்றையப் பாடம் நம் இறுதிமூச்சு வரை நம்முள் சமாதானத்தை நிலைக்கச் செய்யும்!


ஏனெனில் சமாதானத்தின் நிழல்!

ஜீவனுள்ள நம் இயேசு கிறிஸ்து. 

முன்பு ஊனுடல் இஸ்ரயேலர்களுக்கு; சமாதான பலியின் மூலம் சமாதானம் கிடைத்தது உண்மைதான்..
ஆனால் அது தற்காலிக சமாதானம்!
ஏனெனில்;
கடவுளுக்கும்; இஸ்ரயேலர்களுக்குமிடையே ஒரு திரைச்சீலை தொங்கி கொண்டு தான் இருந்தது!


ஆனால் ஆவிக்குரிய இஸ்ரயேலர்களான நமக்கோ, நிரந்தர சமாதானம்!
ஏனெனில்; கடவுளுக்கும் நமக்கும் இடையே தொங்கி கொண்டு இருந்த திரைச்சீலை நிரந்தரமாக கிழிக்கப்பட்டு விட்டது!


காரணம் நம் குற்றமற்ற இயேசுகிறிஸ்துவின் ஜீவபலி!

ஷாலோம்!

ஒரு காலத்தில் கடவுளின் எதிரிகளாக இருந்த நாம்...

என்னது? எதிரிகளாகவா?

ஆம்! அன்பானவர்களே! வேதம் கசப்பை தேன் தடவிக் கொடுக்கவில்லை!

கசப்பான உண்மைகளை, கசப்பாகவே கொடுக்கிறது! (சொல்கிறது)

நாம் கடவுளுக்கு எதிரிகள் தான்!


எப்படி?
கடவுள் நம்மை வெறுத்ததாலா?

அல்ல!

கடவுளை நாம் அறியாததால்!
கடவுளை விட்டு விலகி இருந்தோம்!

🔸நமது பாவங்கள் கடவுளின் முகத்தை மறைத்தது! (ஏசாயா 59:2)
🔸நம் மனம் கடவுளின் கட்டளைகளை எதிர்த்தது! (ரோமர் 8:7)
🔸உலகத்தின் பாதையில் நடந்து கோபத்தை சுமந்து திரிந்தோம்!
(எபேசியர் 2:1-3)

ஆனாலும்;
பிதாவின் நேசக்குமாரனின் மரணத்தால் சமரசம் செய்யப்பட்டோம். (ரோமர் 5:10)


அப்பா! பிதாவே என்று கூப்பிடும் புத்திர சுவீகாரத்தை அடைந்தோம்!

அன்று ஆசரிப்புக் கூடாரத்தில் மாசற்ற விலங்கு பலி செலுத்தப்பட்டது போல;
மாசற்ற நம் கிறிஸ்துவின் உயிர் பலியாக செலுத்தப்பட்டது! கல்வாரி சிலுவையில்!


முதலில்;
பாவ நிவாரண பலி!
பிறகே சமாதான பலி!

நம் பாவங்களை நீக்கும் பொருட்டு கிறிஸ்து நம் பாவ நிவாரண பலியானார்!
அதனால் நமக்கும் கடவுளுக்கும் ஒப்புறவை உண்டாக்கி, சமாதான பலிக்கும் காரணரானார்!


பரிசுத்தமாக எரிந்து பிதாவிற்க்கும் இனிய நறுமணமானார்!

வேலிக்கு அப்பால் நின்ற நம்மையும் (புறஜாதிகளையும்)

வேலிக்குள் இருந்த கடவுளின் சொந்த ஜனங்களையும் (இஸ்ரயேலர்கள்) தம் சிலுவையினால் ஒன்றுக் கூட்டினார்!


அன்று பரிசுத்த உணவு பங்கிடப்பட்டது... அனைவருக்கும்!

🔸நிழலில்..
அன்றைய இறைச்சி,

🔸நிஜத்தில் அப்பமாக (ரொட்டி) உருமாறியது.

எங்கே?

மேல் வீட்டு அறையில்!

கிறிஸ்து கூறுகிறார்! இதோ எடுத்துக் கொள்! புசி! இது என் சரீரம்! உங்களுக்காக என்று!

(மத்தேயு 26:26-28)

அவர் நம் பாவத்தை
சுத்திகரிக்க மட்டுமல்ல;
நமக்கான
விருந்தாகவும் வந்தார்!


நமக்கு சமாதானத்தை உண்டாக்க; தான் நேசித்த மனிதர்களின் முன்னால் அவர்
🔸அவமானப்பட்டார்!
🔸அடிக்கப்பட்டார்!
🔸நொறுக்கப்பட்டார்!
🔸கிழிக்கப்பட்டார்!

ஆனாலும் சமாதானத்தையே பரிசாக கொடுத்துவிட்டுச் சென்றார்!
ஏனெனில் "நம் சமாதானத்தின் தண்டனை அவர் மேல் இருந்தது!"(ஏசாயா 53:5)

உணவின் வழியே கிறிஸ்து நமக்கு உணர்த்துபவைகள்:

பாவிகளோடு அமர்ந்து உண்கையில் அவரின் கருணை வெளிப்பட்டது!

பசியால் வாடும் மக்களுக்காக அப்பங்களை பெருக்கும் போது அவரின் இரக்கம் வெளிப்பட்டது!


மேலும்; அவரின் கல்யாண விருந்து கதைகளும்;

உணவையே உள்ளடக்கியுள்ளது!
ஏன் தெரியுமா?

அவரே நமக்காக பிய்க்கப்படும் அப்பம்!
அவரின் இரத்தமே நம் புதிய உடன்படிக்கை!

கடவுளுக்கும் மனிதர்களுக்குமான சமாதான உடன்படிக்கை!

எழுத எழுத நம் கிறிஸ்துவின் அன்பு நீண்டுக் கொண்டே போகிறது!
நிறுத்த மனமில்லாமல் நிறுத்துகிறேன்!


இரத்தின சுருக்கம்!

🔸ஒருவேளை பாவம் செய்ய நம் மாம்சம் துடிக்கிறதா?

🔸சிந்தை தடுமாறுகிறதா?


ஒருமுறை நம் பாவங்களுக்காக, மரண அடிகளையும் ஆணிகளையும், முட்களையும் சுமந்து தொங்கும் நம் ஆண்டவரின் கல்வாரி சிலுவையை பாருங்கள்!
மனம் மாறி அவரை அதிலிருந்து இறக்கப் போகிறீர்களா?

அல்லது;
மீண்டும் ஆணி அறைந்து தொங்கவிடப் போகிறீர்களா?

இதயம் கனக்கிறது..
இந்த வரிகளை எழுதும் போது...எனக்குள்!
நம் கிறிஸ்துவுக்கும், பிதாவிற்க்கும் எப்படி இருக்கும்?
ஒவ்வொரு முறையும் நாம் தவறிழைக்கும் போதெல்லாம்!

நாம் தேர்ந்தெடுக்கப் போவது!

சமாதானத்தையா?
சஞ்சலத்தையா?


அப்பா! பிதாவே! அருமை மகனை தந்ததற்காய் உம்மை ஸ்தோத்தரிக்கிறோம்!

எங்கள் பரிகாரியாகிய இயேசுவே! உங்கள் உயிரை தந்து

பிதாவோடு எங்களையும் ஒப்புறவாக்கி, புத்திரசுவீகாரத்தை பெற்றுத் தந்ததற்காக உமக்கு நன்றி கூறுகின்றோம்!
வார்த்தைகள் இல்லை..
உங்களின் அன்பிற்க்கு முன்னால்!


ஆமென்!



64. OUR THANKSGIVING OFFERING!



64. OUR THANKSGIVING OFFERING!


LEVITICUS 22:21
If anyone offers a fellowship offering to the Lord to fulfill a special vow or as a freewill offering from the herd or the flock, it must be without defect or blemish to be acceptable.


AM I LIKE CHRIST?
IN WORD, DEED, THOUGHT, AND CONDUCT!

Because, when I offer my SACRIFICE OF THANKSGIVING to the FATHER who gave His beloved Son,

IS IT ONLY FROM MY MOUTH?
OR FROM MY HEART TOO?


WHAT IS MY SACRIFICE OF PRAISE?

  • Like the Israelites, is it animals on the altar?
  • Or is it my HEART filled with LOVE, OBEDIENCE, HOLINESS, and SERVICE burning on the altar that is CHRIST?
  • When I burn, does my fragrance, like that of CHRIST, bring a SWEET AROMA to the FATHER?
  • What should I do to spread such fragrance?

1. JUST AS CHRIST FORGAVE US, WE MUST FORGIVE OTHERS!
2. JUST AS HE BORE OUR BURDENS, WE MUST BEAR ONE ANOTHER’S BURDENS!

The OLD LAW taught the Israelites to respond to GOD’S MERCY with an OFFERING OF THANKSGIVING!

But;
TODAY, the LAW OF LOVE teaches us this:
OFFER YOUR WHOLE LIFE AS A THANKSGIVING TO GOD!


HOW CAN I OFFER MY LIFE AS A PLEASING SACRIFICE TO THE FATHER?

By CONTINUALLY GIVING THANKS TO GOD IN EVERYTHING WE DO!
For this, no room or meeting is needed!

🍁THANK HIM WHEN YOU WAKE UP!
🍁THANK HIM WHILE YOU WORK!
🍁THANK HIM WHEN YOU EAT!
🍁THANK HIM BEFORE YOU SLEEP!
Because;
📌DO NOT LET THANKSGIVING COOL DOWN, THINKING “I’LL DO IT LATER.”
IF WE DO THAT,
📌ITS POWER WILL FADE AWAY!


It seems EASY to THANK GOD in favorable situations!
But what about UNFAVORABLE ones?

When we are ACCUSED even though we did no wrong;

When we get TRAPPED in UNEXPECTED TROUBLES;

When we must PART from our LOVED ONES;

WHAT IS OUR ATTITUDE OF THANKSGIVING TO GOD THEN?


Is it like a CANDLE that still BURNS in the WIND—with a JOYFUL HEART?!

It’s not easy to LIGHT A CANDLE in the wind,

Likewise, it’s not easy to THANK GOD when we are caught in the STORMS of LIFE!


But;

OUR PEACEMAKER, CHRIST, SAYS:
“TAKE HEART! I HAVE OVERCOME THE WORLD!”
(JOHN 16:33)
Therefore, as NEW CREATIONS who follow in HIS FOOTSTEPS with PATIENCE, we must say:
FATHER! WE TRUST YOU!
WE WILL NOT BLAME YOU IN ANY SITUATION!


RESULT: THE PEACE OF GOD WILL OVERFLOW IN OUR HEARTS!
Are we the WEAK ONES who say, “We tried many times and failed”?


PRECIOUS NOTE!
PEACE and LOVE are like SISTERS!
Where one exists, the other surely stays!
But if we FEED HATRED, they both LEAVE US!
If we FEED THANKFULNESS, both will REMAIN WITH US!


FATHER, WE TAKE THE CUP OF SALVATION, CALL UPON YOUR NAME,
AND WALK BEHIND YOU IN LOVE...
THAT ITSELF IS OUR THANKSGIVING OFFERING FOR ALL THE GOODNESS YOU HAVE DONE FOR US!
AMEN!



64. நம்முடைய நன்றி பலி!


லேவியர் 22:21
சிறப்புப் பொருத்தனையோ, தன்னார்வக் காணிக்கையோ மாடுகளில் அல்லது ஆடுகளில் நல்லுறவுப் பலியாகச் செலுத்தினால், அது ஏற்கத்தக்கதாக அமைய, மாசுமறுவற்றதாய் இருத்தல் வேண்டும்.


நான் கிறிஸ்துவை போல் இருக்கிறேனா?
சொல், செயல், சிந்தை, நடத்தை இவைகளில்!

ஏனெனில், தன் அன்பு மகனையே தந்த பிதாவின் அன்பிற்க்கு நான் ஸ்தோத்திர பலி செலுத்தும் போது!

தன் என் வாயிலிருந்து மட்டும் தானா?
என் உள்ளத்தில் இருந்துமா?


என்னுடைய ஸ்தோத்திர பலி என்ன?

  • இஸ்ரயேலர்களை போல பலிபீடத்தின் மேல் விலங்குகளா>
  • என் கிறிஸ்துவாகிய பலிபீடத்தின் மேல் எரியும் அன்பு; கீழ்படிதல்; பரிசுத்தம் மற்றும் சேவை நிறைந்த என் இருதயமா?
  • நான் எரியும் போது, என் வாசனை, என் கிறிஸ்துவைப் போலவே, பிதாவிற்க்கு சுகந்த நறுமணத்தை தருகிறதா?
  • அப்படி நறுமணம் வீச நான் என்ன செய்ய வேண்டும்?

1. கிறிஸ்து நம்மை மன்னித்ததுப் போல; நாமும் பிறரை மன்னிக்க வேண்டும்!
2. அவர் நம்முடைய பாரங்களை சுமந்தது போல; நாமும் மற்றவர்களின் பாரங்களை சுமக்க வேண்டும்!

அன்றைய நியாயப்பிரமாணம் இஸ்ரயேலர்களுக்கு கற்றுத் தந்தது! கடவுளின் இரக்கத்திற்க்கு, நன்றியின் உணவால் பதிலளிக்கச் சொல்லி!

ஆனால்;
இன்று; அன்பின் பிரமாணம் நமக்கு கற்றுத் தருகிறது!
உன் வாழ்க்கையையே கடவுளுக்கு நன்றியாக செலுத்து என்று!


எப்படி நான் என் வாழ்க்கையை பிதாவிற்க்கு பிரியமான பலியாக செலுத்துவது!

நம் ஒவ்வொரு செயலிலும் கடவுளுக்கு நன்றி கூறிக் கொண்டே இருப்பதன் மூலமாக!
இதற்காக, அறையோ, ஐக்கியமோ தேவையில்லை!

🍁காலையில் எழுந்தவுடன் நன்றி!
🍁வேலையில் இருக்கும் போதும் நன்றி!
🍁உண்ணும் போதும் நன்றி!
🍁உறங்கும் போதும் நன்றி!
ஏனெனில்;
📌நன்றியை ஆற வைக்கக் கூடாது! பிறகு கூறிக் கொள்ளலாம் என்று!
அப்படி செய்தோமானால்
📌அதன் வீரியம் குறைந்துவிடும்!


சாதகமான சூழ்நிலையில், கடவுளுக்கு நன்றி கூறுதல் நமக்கு எளிதாக தோன்றும்!
ஆனால்; சாதகமற்ற சூழ்நிலையில்?

ஒருவேளை நாம் தவறே செய்யாமல், பிறர் நம்மை குற்றம் சாட்டினால்;

எதிர்பார்க்காத பிரச்சனைகளின் மத்தியில் நாம் சிக்கிக் கொண்டால்;

அன்பானவர்களை பிரிய நேர்ந்தால்;

நாம் கடவுளுக்கு செலுத்தும் நன்றியின் மனநிலை என்ன?


காற்றின் மத்தியிலும் எரிய வைக்கும் மெழுகுவர்த்தியை போல; மகிழ்ச்சியான மனநிலையிலா?!

காற்றில் மெழுகுவத்தியை ஏற்றுவது அத்தனை சுலபமல்ல,

அதுபோல, உலக காற்றாகிய பிரச்சனைகளில் நாம் சிக்கிக்கொள்ளும் போது, கடவுளுக்கு நன்றி செலுத்துவது அவ்வளவு சுலபமல்ல!


ஆனால்;

நம் சமாதான காரராகிய கிறிஸ்து கூறுகிறார்!
திடன் கொள்ளுங்கள்! நான் இந்த உலகத்தை ஜெயித்தேன்! என்று!
(யோவான் 16:33)
ஆகையால், அவர் பாதச்சுவடைப் பின்பற்றிச் செல்லும், புது சிருஷ்களான நாம் சகிப்புத்தன்மையோடு சொல்லவேண்டியது
என்னவென்றால்:
பிதாவே! உம்மை நம்புகிறோம்!
எந்த சூழ்நிலையிலும் உங்களை குற்றப்படுத்த மாட்டோம் என்று!


பலன்: தேவ சமாதானம் நம் இதயத்துள் பொங்கி வழியும்!
நாங்கள் பலமுறை முயன்று தோல்வியடைந்து விட்டோம்! என்றுச் சொல்லும் பலவீனரா நாம்?


இரத்தினசுருக்கம்!
சமாதானமும்; அன்பும்! சகோதரிகள் போன்றவை!
ஒன்று இருக்கும் இடத்தில் மற்றொன்று நிச்சயம் இருக்கும்!
ஆனால் நாம் பகைக்கு உணவளித்தால், அவை நம்மை விட்டு நீங்கிவிடும்!
நன்றிக்கு உணவளித்தால், இரண்டும் நம்முடனே தங்கி விடும்!


அப்பா, நாங்கள் இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்து உம் நாமத்தை தொழுதுகொண்டு
அன்பிலே உம் பின்னே நடக்கிறோம்...
அதுவே நீங்கள் எங்களுக்கு செய்த உபகாரத்திற்க்கு எங்களின் நன்றி பலி!
ஆமென்!



65. DAY 8 HIDDEN IN LAW



65. THE EIGHTH DAY HIDDEN IN THE LAW!


LEVITICUS 22:27 — What does the law say?

  • A CALF,
  • OR A LAMB, after it is born,
  • MUST STAY WITH ITS MOTHER FOR SEVEN DAYS.
  • FROM THE EIGHTH DAY ONWARD IT SHALL BE ACCEPTED AS AN OFFERING UNTO THE LORD!

This short verse opens a GREAT DOOR for us!


COME! Let’s step through that door and see the PROPHETIC MYSTERIES that GOD has hidden inside this small creature!


MERCY!

  • Even dumb animals were cared for by GOD.
  • He commanded Israel to follow that same care!
    (Proverbs 12:10)

SEVEN DAYS WITH THE MOTHER!
Then on the EIGHTH DAY — ON THE ALTAR!
WHY?

  • We know that in the Bible, SEVEN represents COMPLETION and PERFECTION!

[Example: The SEVEN DAYS OF CREATION! The SEVEN LAMPS! The SABBATH DAY!]

  • But the EIGHTH DAY represents A NEW BEGINNING!
  • It is the ENTERING INTO COVENANT! (Circumcision!)
  • HOLY REJOICING!
    (The Day of RESURRECTION!)

The END OF THE SEVENTH DAY — The BEGINNING OF THE EIGHTH DAY!
That is,
After COMPLETION comes ACCEPTANCE!


THE MOTHER AND THE NEWBORN — A SYMBOLIC PICTURE:

  • The MOTHER represents THE EARTH from which ADAM came!
    “You are DUST, and to DUST you shall return.”
  • The CHILD represents HUMANITY — the offspring that came through ADAM.
  • The SEVEN DAYS represent in prophetic language SEVEN THOUSAND YEARS! (Psalm 90:4; 2 Peter 3:8)

To explain briefly:
After the completion of the full seven days,

THE CREATION will be ACCEPTED by GOD on the EIGHTH DAY!

That is — THE NEW HEAVEN and THE NEW EARTH! (Revelation 21:1–5)


That means —
🌼 GOD’S KINGDOM = THE NEW HEAVEN!
THE PEOPLE WHO KNOW GOD = THE NEW EARTH!

This prophecy unfolds in FIVE STEPS!


IN SHORT:

STEP ONE: SEVEN DAYS NEAR THE MOTHER!

This shows that MAN is still bound to the WORLD!

Even though the LAW, the PROPHETS, and the SON have come, we still live within ADAM’S SEVEN DAYS!


STEP TWO:
THE CHILD WHO CHANGES THE WEEK! Our PEACE OFFERING — CHRIST HIMSELF — is that CHILD! That child grew up in this world!

Then HIS CROSS stood at the END of the SEVENTH DAY!

And THE EMPTY TOMB opened the DOOR to the EIGHTH DAY!


STEP THREE:
THE LONG EVENING!
This present life we live under the RISEN CHRIST!

It is the time where we LEARN the WAY to STEP INTO the EIGHTH DAY!


STEP FOUR:
THE SEVENTH DAY COMPLETES!
CHRIST will REIGN until all enemies are under HIS FEET!
He will DESTROY DEATH!
SATAN will be JUDGED!

The GREAT WEEK — the SEVEN DAYS — will be COMPLETED!


STEP FIVE:
THE EIGHTH DAY DAWNS!

  • It is the time when CHRIST HANDS OVER the KINGDOM to the FATHER!
  • The time when HUMANITY is GLORIFIED!
  • The time when THE RIGHTEOUS WILL SHINE!

I will stop with this short note for now!

Read this lesson slowly — it carries PROPHETIC MYSTERIES hidden within!

THE DIVINE PLAN IS CONCEALED INSIDE!


MAY GOD HIMSELF BLESS US ALL!
AMEN!



65. நியாய பிரமாணத்தில் மறைக்கப்பட்ட எட்டாவது நாள்!


லேவியர் 22:27 ல் சட்டம் கூறுவது என்னவென்றால்!

  • பசுங்கன்றோ
  • ஆட்டுக்குட்டியோ, பிறந்ததும்,
  • ஏழுநாள் தாயுடன் இருக்கவேண்டும்.
  • எட்டாம் நாள் முதல் அது கர்த்தருக்கு பலியாக ஏற்றுக்கொள்ளப்படும்!

இந்த சின்னஞ்சிறு வசனம் நமக்கு ஒரு பெரிய வாசலை திறந்து வைக்கிறது!


வாருங்கள்! வாசலுக்குள் அடியெடுத்து வைத்து, கடவுள் இந்த சின்ன விலங்கிற்க்குள் மறைத்து வைத்துள்ள யுகங்ளைப் பற்றிய தீர்க்கதரிசன ரகசியங்களை தெரிந்துக் கொள்ளலாம்!


இரக்கம்!

  • பேசமுடியாத உயிரினங்களையும் கடவுள் பாதுகாத்தார்
  • இஸ்ரயேலர்களை அதை கடைபிடிக்கவும் கூறினார்
    (நீதி 12:10)

தாயுடன் ஏழு நாட்கள்!
பின்பு எட்டாம் நாள் பலிபீடத்தில்!
ஏன்?

  • ஏழு என்பது வேதத்தில் பரிபூரணம் மற்றும் முழுமையை குறிக்கும் என்பது நாம் அறிந்ததே!

[உதாரணம்: சிருஷ்டிப்பின் ஏழுநாள்!ஏழு குத்துவிளக்கு; ஓய்வுநாள்!]

  • ஆனால் எட்டாம் நாள் என்பது ஒரு புதிய ஆரம்பம்
  • உடன்படிக்கைக்குள் பிரவேசிப்பது! (விருத்தசேதனம்)
  • பரிசுத்தமான மகிழ்ச்சி!
    (உயிர்தெழுதலின் நாள்!)

ஏழாம் நாளின் நிறைவு! எட்டாம் நாளின் துவக்கம்!
அதாவது
பூரணத்திற்க்கு பின்பு ஏற்றுக்கொள்ளுதல்!


தாயும், பிறந்த குழந்தைக்கான உவமை:

  • தாய் என்பது ஆதாம் வந்த இந்த பூமி!
    நீ மண்ணிலிருந்து வந்தவன்; அதனால் மண்ணுக்கே திரும்புகிறாய்.
  • குழந்தை: மனிதகுலம்! ஆதாமினால் வந்த சந்ததியினர்
  • ஏழுநாட்கள்: தீர்க்கதரிசன பாஷையில் ஏழாயிரம் வருடங்கள்!(சங்கீதம் 90:4; 2 பேதுரு 3:8)

விளக்கங்கள் உள்ளே! சுருக்கமாக சொல்வதானால்;
முழுமையான ஏழுநாட்கள் முடிந்து,

படைப்பு - எட்டாவது நாளில் கடவுளுக்கு ஏற்றதாக மாறுகின்றது!

அதுவே புதிய வானம்! புதிய பூமி! (வெளி 21:1-5)


அதாவது;
🌼 கடவுளின் அரசாங்கம்! = புதிய வானம்!
கடவுளை அறிந்த மக்கள்! = புதிய பூமி!

இந்த தீர்க்கதரிசனம்!
5 படிகளை கொண்டுள்ளது!


சுருக்கமாக:

முதல் படி: தாயின் அருகில் ஏழு நாள்!

மனிதன் இன்னும் உலகத்தோடு பிணைந்திருப்பதை கூறுகிறது!

நியாய பிரமாணமும், தீர்ககதரிசிகளும், குமாரனும் வந்தாலும், நாம் இன்னும் ஆதாமின் ஏழு நாட்களுக்குள்ளே வாழ்கிறோம்!


படி: இரண்டு!
வாரத்தை மாற்றும் குழந்தை!நம் சமாதான பலியாகிய கிறிஸ்துவே அந்தக் குழந்தை!அந்த குழந்தை வளர்கிறது இந்த உலகத்தில்!

பின்பு அவருடைய சிலுவை ஏழாம் நாளின் முடிவில் நிற்கிறது!

காலியான கல்லறை எட்டாம் நாளின் கதவை திறக்கிறது!


படி: 3
நீண்ட மாலை நேரம்!
உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் கீழ் நாம் வாழும் இந்த வாழ்வு!

எட்டாம் நாளில் அடியெடுத்து வைப்பதற்க்கான வழிமுறைகளை கற்றுக் கொள்கிறது!


படி: 4
ஏழாம் நாள் நிறைவடைகிறது!
கிறிஸ்து எல்லா சத்துருக்களும் அவருடைய பாதத்தில் கீழ்ப்படியும் வரை ஆளுகை செய்வார்!
மரணத்தை அழிப்பார்!
சாத்தான் நியாயம் தீர்க்கப்படுவான்!

பெரிய வாரம், ஏழு நாள் முடிந்தது!


படி: 5
எட்டாம் நாள் உதயமாகிறது!

  • கிறிஸ்து இராஜ்ஜியத்தை பிதாவிடம் ஒப்படைக்கும் காலம்
  • மனிதகுலம் மகிமைப்படும் காலம்!
  • நீதிமான்கள் பிரகாசிக்கும் காலம்!

இந்த சிறுகுறிப்புடன் இங்கு நிறுத்திக் கொள்கிறேன்!

தீர்க்கதரிசன ரகசியங்கள் புதைந்துள்ள இப்பாடத்தை, நிதானமாக படியுங்கள்!

தெய்வீக திட்டம் ஒளிந்துள்ளது!


கடவுள் தாமே நம் அனைவரையும் ஆசிர்வதிப்பாராக!
ஆமென்!



66. KEEP MY NAME HOLY - Leviticus 22:32,33



KEEP MY NAME HOLY! — LEVITICUS 22:32,33


THE ALMIGHTY GOD said to ISRAEL:

“DO NOT PROFANE MY HOLY NAME!”

FOR I AM THE LORD WHO SANCTIFIES YOU!


Was this said only to them?

NO...
It continues even TO US — who are BAPTIZED INTO CHRIST!

We too have TAKEN UP THE NAME OF GOD!


He calls us “SAINTS!”
(Psalm 50:5)

THE NAME OF GOD is not just a TAG we wear — it is HIS CHARACTER entrusted to us!


It is not a mere ID CARD to pin on our shirt —

It is HIS PRESENCE to be engraved in our HEART!

When we treat this casually, we become those who DEFILE HIS HOLY NAME!

That is — when the LIFE WE LIVE loses its VALUE before others, THE NAME OF GOD is also DISHONORED!


HOW CAN WE GLORIFY THE NAME OF GOD?

THROUGH LOVE!

LOVE is the CROWN of every commandment!
If we truly LOVE GOD with all our HEART, this becomes EASY for us!


A LOVING HEART easily FORGIVES OTHERS!

A LOVING HEART does not seek AUTHORITY, but desires TO SERVE!

Where LOVE FADES, HOLINESS FADES!

Where LOVE ABOUNDS, THE NAME OF THE FATHER IS HONORED!


Let us EXAMINE OURSELVES through the following SEVEN POINTS:
Are we HONORING the Father’s Name? Or TRAMPLING it?

GOD IS LOVE!
If we, His children, LOVE ONE ANOTHER,
THE FATHER’S NAME IS GLORIFIED!

But if we HATE?

If we become JEALOUS of another’s growth?

If we FAIL to correct the one who errs?

Then aren’t we DIMMING the FACE of our LOVING FATHER?


To put it strongly — we are THROWING MUD on the HOLY FACE OF GOD!

We CONFESS HIM with our mouth, yet give the THRONE of our heart to another god!


The GOD OF LOVE desires to DWELL in our HEART —

Whether we keep that HEART as a TEMPLE OF LOVE,

or as a GRAVE FILLED WITH FILTH — is in OUR HANDS!


SECOND POINT:
When only our LIPS say “FATHER! LORD!”

But our HEART keeps STRAYING AWAY from HIS WAYS —

This is what CHRIST HIMSELF said!
“If you do not love the Father in your heart, then calling out ‘Lord! Lord!’ with your lips is of no use!”

  • PEOPLE don’t look at our WORDS OF CHARM;
  • They look at our WAY OF LIFE!

When we WALK IN OBEDIENCE to GOD’S WILL,
We become the SALT that ADDS FLAVOR to others’ lives!
But when we NEGLECT it, we lose our FLAVOR and become USELESS!


THIRD POINT:
When we use HOLY THINGS for SELF-GLORY or PERSONAL GAIN, we bring SHAME to the HOLY NAME OF GOD!

-> SERVICE done to be SEEN by others!
-> WEALTH given to gain PRAISE from others!
These do not reach the HOUSEHOLD OF GOD!
But instead:
-> QUIET SINCERITY!
-> HUMBLE, UNSELFISH SERVICE!
These are what bring GLORY TO GOD!


THE ONE WHO CALLED US IS HOLY!
THE ONE WHO GAVE HIS LIFE FOR US IS HOLY!
MAY GOD HIMSELF GRANT US GRACE TO BECOME HOLY LIKE HIM!

AMEN!



என் நாமத்தை பரிசுத்தமாக வைத்திருங்கள்! லேவியர் 22:32,33


சர்வவல்லவர் இஸ்ரயேலரைப் பார்த்து இவ்வாறு கூறுகிறார்.

என் நாமத்தை பரிசுத்த குலைச்சலாக்காதீர்கள்!

ஏனெனில்; உங்களை பரிசுத்தப்படுத்தும் கடவுள் நானே!


இது அவர்களுக்கு மட்டும் தான் சொல்லப்பட்டதா?

இல்லை...
கிறிஸ்துவுக்குள் ஞானஸ்நானம் பெற்ற நம்மிடமும் தொடர்கிறது!

நாமும் தரித்துக்கொண்டோம்! கடவுளின் பெயரை!


"பரிசுத்தவான்கள்!" என்று!
(சங்கீதம் 50:5)

கடவுளின் பெயர் நாம் அணியும் ஒரு முத்திரை அல்ல; இது நமக்கு ஒப்படைக்கப்பட்ட அவரது குணம்!


இது வெறுமனே ஒரு அடையாள அட்டை அல்ல; சட்டையில் குத்திக் கொள்ள!

இது அவரின் பிரசன்னம்! இதயத்தில் குத்திக் கொள்ள!

இதை நாம் சாதாரணமாக கருதும்போது அவரின் நாமத்தை தீட்டுப்படுத்துபவர்கள் ஆகிவிடுகிறோம்!

அதாவது நாம் வாழும் வாழ்க்கை! பிறரின் மத்தியில்; மதிப்புமிக்கதாக இல்லாத போது, கடவுளின் நாமமும் தூஷிக்கப்படுகிறது!


நாம் எப்படி கடவுளின் நாமத்தை மகிமைப்படுத்துவது?

அன்பினால்!

அன்பு என்பது ஒவ்வொரு கட்டளைகளின் கிரீடமாகும்!
உண்மையில் கடவுள் மேல், முழு இருதயத்தோடு அன்பிருந்தால், இது நமக்கு சுலபமான ஒன்று!


அன்பிருக்கும் இதயம்; பிறருக்கு மன்னிப்பை எளிதில் வழங்கும்!

அன்பிருக்கும் இதயம், தலைமை பதவியை அல்ல; சேவை செய்யவே கீழ்படியும்!

அன்பு மங்கிப்போகும் இடத்தில்; பரிசுத்தம் மங்கிப்போகிறது!

அன்பு பெருகும் இடத்திலோ; பிதாவின் பெயர் மதிக்கப்படுகிறது!


கீழ்வரும் ஏழு காரியங்கள் மூலம், நம்மை நாமே சீர்த்தூக்கிப் பார்க்கலாமா?
நாம் பிதாவின் நாமத்தை மதிக்கிறோமா?அல்லது மிதிக்கிறோமா?

கடவுள் அன்பே வடிவானவர்!
அவரின் பிள்ளைகளாகிய நாமும் ஒருவரை ஒருவர் நேசித்தால்,
பிதாவின் பெயருக்கு மகிமை!

வெறுத்தால்?

பிறரின் வளர்ச்சியில் பொறாமை கொண்டால்?

தவறுபவர்களின் தவறுகளை திருத்தாவிட்டால்?

பிரகாசம் நிறைந்த நம் அன்பின் பிதாவின் முகத்தை மங்கச் செய்கிறோம் அல்லவா?


அழுத்தமாக சொல்வதென்றால், கடவுளின் பரிசுத்த முகத்தில் சேற்றை வாரி பூசுகின்றோம்!

வாயால் அவரை அறிக்கையிடுகின்றோம்! மனதாலோ அந்நிய கடவுளுக்கு சிம்மாசனம் தருகின்றோம்!


அன்பே வடிவானவர் குடியிருக்க விரும்பும் நம் இதயத்தை,

அன்பு நிறைந்த கோவிலாக வைத்திருப்பதும்,

அசுத்தம் நிறைந்த கல்லறையாக வைத்திருப்பதும் நம் கையில்!


இரண்டாவது:
 உதடுகள் மட்டுமே உச்சரிக்கின்றது அப்பா! பிதாவே என்று,

ஆனால்; உள்ளமோ அவரின் பாதைகளை விட்டு வழி விலகி சென்றுக் கொண்டே இருக்கிறது!

இதை தான் நம் கிறிஸ்துவும் கூறினார்!
நீங்கள் உள்ளத்தில் பிதாவை நேசிக்காமல், உதட்டளவில் கர்த்தாவே! கர்த்தாவே! என்று என்னைப் பார்த்து புலம்புவதில் ஒரு பிரயோஜனமும் இல்லை என்று!

  • மக்கள் நம் வார்த்தை ஜாலங்களை அல்ல;
  • வாழ்க்கை முறைகளையே அதிகம் பார்க்கின்றார்கள்!

தேவ சித்தத்தின்படி கீழ்படிந்து நடக்கும் போது,
பிறர் வாழ்வில் சுவை கூட்டும் உப்பாக இருக்கின்றோம்!
புறக்கணிக்கும் போதோ; சுவையை (சாரமற்று) இழந்தவர்களாக மாறி விடுகின்றோம்!


மூன்றாவது:
பரிசுத்த காரியங்களை, சுயமகிமைக்காகவும் அல்லது ஆதாயத்திற்க்காகவும் பயன்படுத்தும் போது, அவமானத்தையே தேடி தருகிறோம்! பரிசுத்த நாமத்திற்க்கு!

-> பிறர் காண செய்யும் சேவை!
-> பிறர் புகழ கொடுக்கப்படும் செல்வம்!
பிறர்யம் தேவ சமூகத்தை சென்று சேராது!
மாறாக;
-> அமைதியான உண்மைத்தன்மை!
-> அமைதியான எதிர்பார்க்காத தேவசேவை!
இவைகளே கடவுளுக்கு மகிமை சேர்கின்றது!


நம்மை அழைத்தவர் பரிசுத்தர்!
நமக்காக ஜீவனைத் தந்தவரும் பரிசுத்தர்!
நாமும் பரிசுத்தமாக மாற கடவுள் தாமே கிருபை செய்வாராக!

ஆமென்!



67. APPOINTED FESTIVALS



THE FEASTS OF THE LORD!


THE ALMIGHTY GOD, in LEVITICUS CHAPTER 23, spoke to MOSES about the SEVEN FEASTS that the ISRAELITES had to observe every year.

What are they?
Why? For what purpose? How?
Let’s look into them!

First of all, why did GOD command the ISRAELITES to keep these feasts?


After being REDEEMED from SLAVERY in EGYPT, these feasts were given as a BEAUTIFUL CALENDAR for GOD’S PEOPLE to follow throughout the year.

The main theme of these feasts was to express THANKSGIVING for all the GOODNESS that GOD had done for them!

Next,

It also taught them HOW TO LIVE TOGETHER as ONE NATION!

These feasts were designed around their SEASONS — their GRAINS, FRUITS, CATTLE, and FOODS!

  • To the ISRAELITES, these feasts:
  • Taught GRATITUDE!
  • Taught EQUALITY!
  • Taught UNITY!
  • Taught HOSPITALITY!
  • Taught JOY!
  • Taught FRIENDSHIP with their NEIGHBORS!
  • And to those who were weary from SLAVERY in EGYPT,
  • Brought ENCOURAGEMENT and HOPE!

Alright, SHALL WE ENTER INTO THE FEASTS?

FIRST — THE DAY OF REST!
"SABBATH"
(LEVITICUS 23:3 – Six days you shall work, but the seventh day is a day of complete rest, a HOLY CONVOCATION. You shall do no work; wherever you live, it is a SABBATH to the LORD.)

This is NOT a feast!
But, it is right AFTER THIS that the FEASTS begin!

What should the Israelites do on this day?

After working for SIX DAYS, they must REST on every SEVENTH DAY!

This was not only for them, but also for their SERVANTS, FOREIGNERS, and even for their ANIMALS to rest from labor!

However, the purpose was not merely to SLEEP or be idle!

On this day:

They could GATHER as a COMMUNITY, HEAR GOD’S LAW, PRAY, and SING!

Moreover,
The POOR and the RICH, the MASTER and the SERVANT — ALL had equal rest without any discrimination!

This day of rest protected the HEARTS and BODIES of those who toiled hard in the fields for six days!


NOW COME THE SEVEN FEASTS OF THE LORD!

1. THE PASSOVER

(LEVITICUS 23:4–5

4 These are the LORD’S APPOINTED FESTIVALS, the sacred assemblies you are to proclaim at their appointed times.
5 The LORD’S PASSOVER begins at twilight on the fourteenth day of the first month.

It was celebrated on the 14th day of the month of NISAN!

PURPOSE: To REMEMBER the day when GOD DELIVERED them from SLAVERY in EGYPT!

The BITTER HERBS and the UNLEAVENED BREAD reminded them of this!

They were reminded NEVER to OPPRESS those who worked under them or anyone weaker than them — because THEY TOO once suffered in EGYPT!


2. THE FEAST OF UNLEAVENED BREAD

(LEVITICUS 23:6–8

On the fifteenth day of that month the LORD’S FESTIVAL OF UNLEAVENED BREAD begins; for seven days you must eat bread made without yeast.
7 On the first day hold a sacred assembly and do no regular work.
8 For seven days present a food offering to the LORD. And on the seventh day hold a sacred assembly and do no regular work.
)

This was celebrated for SEVEN DAYS — from NISAN 15 to 21!

For seven days, they removed all YEAST and ate UNLEAVENED BREAD together and shared it with everyone!

LESSON: Yeast must be removed not only from FOOD but also from the HEART!
Just as they shared unleavened bread, we must share SINCERE LOVE without deceit!


3. THE FEAST OF FIRSTFRUITS!
(NISAN 23)
The Israelites took the FIRST SHEAF of their HARVEST (BARLEY) to the HOLY PLACE and WAVED it before the LORD as an OFFERING!

This taught them a great lesson:

First, DO THE WORK — then RECEIVE THE REWARD!

Even though they sowed the seed, it was GOD who caused it to GROW!
🌾After offering the FIRSTFRUIT, they gained PEACE and FEARLESSNESS!

PATIENCE and GRATITUDE grew in them!

If we notice carefully, all these THREE FEASTS were celebrated in the month of NISAN!


Next comes the FEAST OF WEEKS — after SEVEN WEEKS!
That is, on the FIFTIETH DAY!
4. THE FEAST OF PENTECOST / SHAVUOT!

This was also called the FEAST OF THE WHEAT HARVEST!

As a token of THANKSGIVING to GOD for His blessings, they offered the HARVESTED GRAINS back to Him!

Here GOD gave them a beautiful SOCIAL COMMAND:

🌾During the harvest, they were commanded to LEAVE the corners of their fields and the fallen stalks for the POOR to gather!
This was the LAW OF COMPASSION!
(LEVITICUS 23:33)

Thus,
🌾Even though the landowners celebrated their FULL BARNS, the POOR and the LANDLESS could still gather food with DIGNITY!

📌This feast taught that TRUE WORSHIP includes GENEROSITY and MERCY!


There are still THREE more feasts:

📯 THE FEAST OF TRUMPETS!
(YOM TERUAH)

🐏🐏THE DAY OF ATONEMENT! (YOM KIPPUR)

🌴THE FEAST OF TABERNACLES!
(SUKKOT)


Beloved ones, these were precious to behold!

A SHORT SUMMARY:
My dear ones, are these feasts necessary today?

Certainly NOT!

They were for the ISRAELITES — that is, for GOD’S PEOPLE — to make them throughout the year:

❣️REJOICE continually!
❣️LEARN TO SHARE!
❣️GROW IN LOVE!
❣️SUPPORT THE WEAK!
❣️NEVER FORGET GRATITUDE!
❣️LEARN OBEDIENCE!

We have seen the SHADOW of these feasts today — will we see their REALITY tomorrow?

Until then, may GOD bless us in CHRIST!
AMEN!
🙇🏻🙇🏻‍♀️



கர்த்தருடைய பண்டிகைகள்!


சர்வவல்லவர்! லேவியராகமம் 23 ம் அதிகாரத்தில், இஸ்ரயேலர்கள் வருடத்தில் கடைபிடிக்க வேண்டிய ஏழு பண்டிகைகளைக் குறித்து மோசேயிடம் கூறியிருந்தார்.

அவைகள் என்ன?
ஏன்? எதற்காக? எப்படி?
என்பதைக் குறித்துப்பார்க்க போகிறோம்!

முதலில் எதற்காக இந்த பண்டிகைகளை கடவுள் இஸ்ரயேலர்களை கடைபிடிக்கச் சொன்னார்?


எகிப்தில் அடிமைத்தனத்தில் இருந்து மீண்டு (மீட்டு) வந்த தன் மக்களுக்கு ஒரு அழகிய வருட நாட்காட்டியாக இந்த பண்டிகைகள் வழங்கப்பட்டது.

இந்த பண்டிகைகளின் முக்கிய கருப்பொருள் என்னவென்றால்,
கடவுள் தங்களுக்கு செய்து கொண்டு வரும் எல்லா நன்மைகளுக்கும் நன்றி செலுத்துவதாகும்!

அடுத்து,

ஒரு தேசமாக ஒன்றாக வாழ்வது எப்படி என்பதையும் அவர்களுக்கு கற்றுக் கொடுப்பதுமாகும்!

இது அவர்களின் பருவகாலங்கள், அதில் விளையும் தானியங்கள், பழங்கள், கால்நடைகள், உணவுகள் இவற்றைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது!

  • இஸ்ரயேலர்களுக்கு; இந்த பண்டிகைகள்:
  • நன்றியுணர்வைக் கற்றுத் தந்தது!
  • சமத்துவத்தை கற்றுத்தந்தது!
  • ஒற்றுமையை கற்றுத் தந்தது!
  • உபசரிப்பைக் கற்று தந்தது!
  • மகிழ்ச்சியை கற்றுத் தந்தது!
  • அண்டை வீட்டாருடன் நட்புறவை கற்றுத் தந்தது!
  • எகிப்தில் அடிமைத்தனத்தில் இருந்து சோர்ந்து போன
  • மக்களுக்கு உற்சாகத்தை பெற்றுத் தந்தது!

சரி, பண்டிகைக்குள் செல்வோமா??

முதலில் ஓய்வு நாள்!
"ஷாபாத்"
(லேவியர் 23:3 - ஆறு நாள்கள் நீங்கள் வேலை செய்யலாம்.ஏழாம் நாளோ முழுமையாக ஓய்வெடுக்கும் நாள்: புனித சபை கூடும் நாள்.அன்று நீங்கள் ஒரு வேலையும் செய்யவேண்டாம்.நீங்கள் வாழும் இடமெங்கும் அது ஆண்டவருக்கான ஓய்வுநாள்.)

இது பண்டிகை அல்ல!
ஆனால்; இதற்கு பின்பே; பண்டிகைகள் ஆரம்பிக்கப்படுகிறது!

இந்த நாளில் இஸ்ரயேலர்கள் என்ன செய்ய வேண்டும்?

ஆறு நாட்கள் வேலை செய்தப்பின் ஒவ்வொரு ஏழாம் நாளும் ஒய்ந்திருக்க வேண்டும்!

இது அவர்களுக்கு மட்டுமல்ல; அவர்களோடு வசிக்கும்; அடிமைகள்! அந்நிய தேசத்தார்! ஏன்? விலங்குகள் கூட உழைப்பிலிருந்து ஓய்ந்திருக்க வேண்டும்!

ஆனால்; வெறுமனே படுத்து தூங்குவதல்ல இதன் நோக்கம்!

இந்நாளில்;

சமூகமாக ஒன்று கூடலாம்! கடவுளின் சட்டத்தை கேட்கலாம்!
ஜெபிக்கலாம்! பாடலாம்!

மேலும்;
ஏழை, பணக்காரர், முதலாளி, தொழிலாளி, என எந்த பாகுபாடும் இல்லாமல்,
அனைவருக்கும் கட்டாயமாக ஓய்வு!

ஆறுநாள் கடினமாக வயல்களில் வேலை செய்யும் மக்களுக்கு இந்த ஓய்வு நாள்; உள்ளங்களையும்; உடல்களையும் உடைக்காமல் பாதுகாத்தது!


இனி வருவது தான் கர்த்தர் சொன்ன ஏழு பண்டிகைகள்!

1. பஸ்கா

(லேவியர் 23:4;5

4 நீங்கள் சபையாகக் கூடிக் குறிப்பிட்ட நாள்களில் புனிதமாய்க் கடைப்பிடிக்க வேண்டிய ஆண்டவரின் பண்டிகை நாள்களாவன:
5 நீங்கள்தம் பதினான்காம் நாள் மாலையில் ஆண்டவருக்கான பாஸ்கா.)

நிசான் மாதத்தின் 14 ம் தேதியில் கொண்டாடப்பட்டது!

நோக்கம்: எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து; தங்களை கடவுள் விடுதலை செய்த நாளை நினைவுகூறுவது!

கசப்பான கீரை;
புளிப்பில்லாத அப்பம்!
அவர்களுக்கு நினைவுபடுத்தியது!

நாம் எகிப்தில் அனுபவித்த கஷ்டங்களை இனி; நமக்கு கீழ் வேலை செய்பவர்கள், நம்மை விட பலவீனமானவர்கள் மீது எப்போதும் பிரயோகிக்ககூடாது
என்று!


2. புளிப்பில்லாத அப்ப பண்டிகை!

(லேவியர் 23:6-8

அந்த மாதம் பதினைந்தாம் நாள் ஆண்டவருக்கான புளிப்பற்ற அப்பப் பண்டிகை: ஏழநாள் புளிப்பற்ற அப்பங்களை உண்பீர்கள்.
7
பண்டிகையின் முதல் நாள் சபை கூடும் புனித நாள்.அன்று வேலை செய்யலாகாது.
8
ஏழுநாளும் ஆண்டவருக்கு எரிபலி செலுத்த வேண்டும்.ஏழாம் நாள் சபை கூடும் புனித நாள்.அன்று வேலை செய்யலாகாது.
)

நிசான் 15 ல் இருந்து 21 வரை ஏழு நாட்கள் இது கொண்டாடப்பட்டது!

ஏழு நாட்கள் புளிப்பை நீக்கி அப்பம் செய்து, அனைவரும் பகிர்ந்து உண்ணவேண்டும்!

பாடம்: புளிப்பை உணவில் மட்டுமல்ல; உள்ளத்தில் இருந்தும் நீக்கிப் போட வேண்டும்!
புளிப்பற்ற ரொட்டியை பகிர்ந்து உண்பது போல; வஞ்சனையற்ற அன்பை அனைவரிடமும் பகிர்ந்துக் கொள்ள வேண்டும்!


3. முதற்பலன்கள் பண்டிகை!
(நிசான் 23)
இஸ்ரயேலர்கள், தங்கள் விளைச்சலின் முதற்பலனான (அறுவடை) வாற்கோதுமையை எடுத்துக் கொண்டு பரிசுத்த ஸ்தலத்திற்க்கு சென்று கடவுளுக்கு முன்பாக அசைவாட்டினார்கள் அர்பணித்தார்கள்!

இது அவர்களுக்கு கற்பித்த பாடம்:

முதலில் வேலை செய்யுங்கள்! பின்பு பரிசை பெற்றுக் கொள்ளுங்கள்!

மேலும், நட்டது அவர்களாக இருந்தாலும்; வளர செய்வது கடவுளின் காரியமாக இருந்ததால்,
🌾முதற்பலனை செலுத்தியப்பிறகு அவர்களுக்கு

அமைதியும்; பயமின்மையும் உருவாகியது!

பொறுமையும்; நன்றியும் வளர்ந்தது!

நாம் இங்கு ஒன்றை கவனித்து பார்த்தோமானால்,
இந்த மூன்று பண்டிகைகளும், நிசான் மாதத்தில் நடைபெறுகிறது!


அடுத்து;
வாரப் பண்டிகை (ஏழு வாரங்களுக்குப் பிறகு!
அதாவது ஐம்பதாவது நாள்)
4. பெந்தெகொஸ்தே/ ஷாவோத் பண்டிகை!

இதை கோதுமை அறுவடை பண்டிகை என்றும் அழைக்கலாம்!

கடவுள் தந்த ஈவுக்கு, தங்களின் நன்றியை பிரதிபலிக்கும் வண்ணமாய்; வயலில் விளைந்த தானியங்கள் கடவுளுக்கு செலுத்தப்பட்டது!

இதில் ஒரு அருமையான சமூக கட்டளையை கடவுள் தந்தார்!

🌾அறுவடையின் போது வயல் ஓரங்களில் உள்ள கதிர்களையும், கீழே விழுபவைகளையும், ஏழைகளுக்கு விட்டுவிட வேண்டும் என்பதே!
அந்த கருணையின் கட்டளை!
(லேவியர் 23:33)

இதனால்;
🌾அறுவடையின் உரிமையாளர்கள், முழு களஞ்சியத்தை கொண்டாடினாலும்;
நிலமற்ற ஏழைகளும் கண்ணியத்துடன் உணவை சேகரிக்கமுடியும்!

📌இந்த பண்டிகை உணர்த்துவது என்னவென்றால்:

கடவுள் வழிபாட்டின் ஒரு பகுதி;
தாராள மனப்பான்மை மற்றும் கருணை!


இன்னும் மூன்று பண்டிகைகள் உள்ளது!

📯 எக்காளப் பண்டிகை!
(யோம் தெருவா)

🐏🐏பாவநிவாரணப் பண்டிகை! (யோயாம்கிப்பூர்)

🌴கூடாரப் பண்டிகை!
(சுக்கோட்)


இவைகள் உங்களின் பார்வைக்கு பிரியமானவர்களே...

இரத்தினச் சுருக்கம்!
அன்பே வடிவானவர்! மகிழப் பண்டிகைகள் அவசியமா?

நிச்சயமாக இல்லை!

இவை இஸ்ரயேலர்களுக்கு!
அதாவது;
தன் ஜனங்கள் வருடம் முழுவதும்,
❣️மகிழ்ந்திருக்கவும்;
❣️பகிர்ந்து கொள்ளவும்;
❣️அன்பை வளர்க்கவும்;
❣️பலவீனரைத் தாங்கவும்;
❣️நன்றியை மறக்காதிருக்கவும்;
❣️கீழ்படிதலை கற்றுக் கொள்ளவும்! ஏற்படுத்தப்பட்டதே இந்த பண்டிகைகள்!

இதன் நிழலை இன்று கண்ட நாம்! பொருளை நாளைக் காண்போமா?

அதுவரை; கடவுள் 
கிறிஸ்துவுக்குள் நம்மை ஆசிர்வதிப்பாராக!
ஆமென்!



68. SHABBAT SHALOM


SHABAT SHALOM

THE PEACEFUL DAY OF REST! (PART - 1)


"SHABBATH SHALOM"!
THE PEACEFUL DAY OF REST!


In LEVITICUS 23:3, the ALMIGHTY gave this COMMAND to the ISRAELITES!

  • For SIX DAYS in a week you may WORK! But,
  • On the SEVENTH DAY you must REST.
    We meditated a bit about this in the previous lesson.

TODAY, we are going to LOOK EVEN DEEPER!


The HEBREW word “SHABBATH” means “REST” or “CEASING.”

YES; a day when the WORKING HANDS rest, and the HEART breathes PEACE — this GOLDEN DAY was CREATED by GOD!

Because, only a LOVING FATHER knows what is GOOD for His CHILDREN!


OUR FATHER! Why did He BLESS and SANCTIFY this DAY alone?

FIRST REASON: CREATION!

In SIX DAYS He CREATED the HEAVENS and the EARTH...
and on the SEVENTH DAY He RESTED!
(EXODUS 20:11)
It reminds us that TIME itself is a GIFT from GOD!


NEXT: REDEMPTION!

After DELIVERING His people from the SLAVERY of EGYPT — from all their toil and tears — He lovingly said, “MY CHILDREN, now take ONE DAY A WEEK to REST PEACEFULLY!” What a LOVING FATHER we have!
(DEUTERONOMY 5:15)

This DAY OF REST constantly reminded the ISRAELITES of their STORY OF FREEDOM:

YES! “MY GOD IS MY CREATOR AND MY REDEEMER!”


WHAT CAN I DO ON THE DAY OF REST?

Yes! They were NOT allowed to WORK in the fields or carry tools.
But they COULD DO the WORKS OF GOD!

On this DAY:

🌿 EXTRA OFFERINGS were presented in the HOLY PLACE!
(NUMBERS 28:9-10)

🌿 THE SHOWBREAD was renewed!
(LEVITICUS 24:8)

🌿 They were instructed to STOP SPEAKING about themselves and to DELIGHT in the HOLY DAY of the LORD! (ISAIAH 58:13-14)

Even though the PRIESTS WORKED on this DAY, they were considered BLAMELESS!
(MATTHEW 12:5)

Because the ALTAR had CALLED them to HOLY SERVICE —
They must NEVER CEASE doing GOD’S WORK!


OKAY... WHAT SHOULD NOT BE DONE?

🔸PHYSICAL LABOR, BUSINESS, and TRADE were PROHIBITED!

🔸Lighting a FIRE in their DWELLINGS was NOT ALLOWED! (EXODUS 35:3)

🔸MANNA was NOT GATHERED!
(EXODUS 16:22-30)

Those who did NOT KEEP the LAW of the SABBATH were WARNED by:
🔹JEREMIAH!
(JEREMIAH 17:21-22)

🔹NEHEMIAH CLOSED the GATES of the CITY!
(NEHEMIAH 13:15-22)

In NUMBERS 15, a man who gathered sticks on the SABBATH was STONED TO DEATH!


WHY?

Not merely because he GATHERED STICKS...
But because he DISREGARDED GOD’S COMMANDS!
<< HIS ONE ACT OF NEGLECT could lead MANY OTHERS to do the same! >>

Because the DAY OF REST is a SIGN of GOD!
To HONOR it is to HONOR HIM!
To TRAMPLE it is to DISHONOR HIM!


All this is true! BUT...

1. Did the STIFF-NECKED ISRAELITES keep the SABBATH till the end?

2. The DAY OF REST was not only for HUMANS and ANIMALS, but even for the LAND!
HOW?

3. JESUS healed the SICK on the DAY OF REST...
Was that RIGHT?

4. Was it proper that DAVID ate the SHOWBREAD that only the PRIESTS were supposed to eat?

All these QUESTIONS are EXPLAINED in this LESSON!

READ and be BLESSED!
This is the END of my PART!


PRECIOUS SUMMARY!
The DAY OF REST was MADE FOR MAN — not MAN for the DAY OF REST!

The SABBATH was not given to CRUSH the WEARY, but to LIFT THEM UP!

The DAY OF REST is indeed a COMMAND, but when you look DEEPER, it is a GIFT OF LOVE!

Though it first seems a RULE, it is truly a DIVINE REWARD filled with BLESSINGS!

Bowing before the feet of our FAITHFUL HEAVENLY FATHER, we THANK HIM for BLESSING and SANCTIFYING this DAY — in the NAME of our SAVIOR JESUS CHRIST!
AMEN!



அமைதியான ஓய்வு நாள்! (பகுதி -1)


"ஷபாத் ஷாலோம்"!
அமைதியான ஓய்வுநாள்!


லேவியர 23:3 ல் சர்வவல்லவர் இஸ்ரயேலர்களிடம் கடைப்பிடிக்க சொன்னக் கட்டளை இது!

  • வாரத்தில் ஆறு நாட்கள் நீங்கள் வேலை செய்யலாம்! ஆனால்,
  • ஏழாம் நாளில் கட்டாயமாக ஒய்வெடுக்க வேண்டும்.
    நேற்றைய பாடத்தில் இதை குறித்து சிறிது தியானித்து இருந்தோம்.

இன்று இன்னும் ஆழமாக பார்க்கப் போகிறோம்!


ஷாபாத் என்ற எபிரேய வார்த்தையின் அர்த்தம் "ஓய்வு" அல்லது "நிறுத்துதல்!"

ஆம்; உழைத்த கைகள் ஓய்வெடுக்கவும், அமைதியாக இதயம் சுவாசிக்கவும், கடவுள் ஏற்படுத்திய நன்நாள்;
இந்த பொன்நாள்!

ஏனெனில்;
ஒரு அன்பான தந்தைக்கு மட்டும் தானே தெரியும் தன் பிள்ளைகளுக்கு எது நல்லது என்று!


நம் தகப்பன்! இந்த நாளை மட்டும் ஆசிர்வதித்து பரிசுத்தமாக்க காரணம் என்ன?

முதல் காரணம்: படைப்பு!

ஆறு நாட்கள், வானத்தையும், பூமியையும் உண்டாக்கி...
ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தார்!
(யாத்திரை 20:11)
இது காலங்கள் - கடவுள் தந்த பரிசு என்பதை நினைவூட்டுகிறது!


அடுத்து: மீட்பு!

எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து; தம் மக்களை விடுவித்து; அங்கு ஓய்வின்றி கதறி துடித்த தன் ஜனங்களை மீட்டு; பிள்ளைகளே; இனி வாரத்தில் ஒருநாள் அமைதியாக ஓய்வெடுங்கள்! என்று அன்பின் கட்டளையாக சொன்னார்! நம் அன்பே வடிவானத் தகப்பன்!
(உபாகமம் 5:15)

சுதந்திரத்தின் கதையை இந்த ஓய்வுநாள் நினைவுக் படுத்திக் கொண்டே இருந்தது...
இஸ்ரயேலர்களின் இதயத்தில்
இவ்வாறு:

ஆம்! என் கடவுள் என் படைப்பாளர்! என் மீட்பர்! என்று!


என் ஓய்வு நாளில் என்ன செய்யலாம்?

ஆம்! ஆயுதங்கள் ஏந்தி வயல்வெளிகளில் வேலை செய்யக்கூடாது தான்..
ஆனால்;
கடவுளின் காரியங்கள் செய்யலாம்!

இந்த நாளில் தான்,

🌿பரிசுத்த ஸ்தலத்தில் கூடுதல் காணிக்கை செலுத்தப்பட்டது!
(எண்ணிக்கை 28:9;10)

🌿சமூகத்து அப்பம் புதுப்பிக்கப்பட்டது!
(லேவியர் 24:8)

🌿சுயத்தை பேசவிடாமல் தடுத்து, கடவுளின் பரிசுத்த நாளை எண்ணி மகிழ வைத்தது! (ஏசாயா 58: 13;14)

இந்த நாளில் ஆசாரியர்கள் வேலை செய்த போதும்; அவர்கள் குற்றமற்றவர்களாக கருதப்பட்டனர்!
(மத்தேயு12:5)

ஏனெனில்;
பலிபீடம் அவர்களை பரிசுத்த வேலைக்கு அழைத்திருப்பதால்..
அவர்கள் ஒருபோதும் தேவ காரியங்களை நிறுத்தக்கூடாது!


சரி..என்ன செய்யக்கூடாது?

🔸உடல் உழைப்பு! வியாபாரம்! வணிகம், வர்த்தகம் தடை செய்யப்பட்டது!

🔸வாசஸ்தலங்களில் நெருப்பு மூட்ட அனுமதி இல்லை! (யாத்திராகமம் 35:3)

🔸மன்னா சேகரிக்கப்படவில்லை!
(யாத் 16:22-30)

ஓய்வு நாளின் சட்டத்தை கடைப்பிடிக்காதவர்களை,
🔹எரேமியா கடிந்துக் கொண்டார்!
(எரேமியா 17:21;22)

🔹நெகேமியா நகரவாசல் கதவுகளையும் மூடிவிட்டார்!
(நெகேமியா 13:15-22)

எண்ணாகமம்: 15 ல் ஓய்வுநாளில் குச்சிகளை சேகரித்த மனிதன் கல்லெறிந்துக் கொல்லப்பட்டான்! என்ற பதிவுகள் உள்ளது!


ஏன்?

காரணம்; அவன்,
குச்சிகளை சேகரித்ததால் அல்ல;
கடவுளின்  கட்டளைகளை அலட்சியப்படுத்தியதால்...
<< இந்த ஒருவரின் செயல், பலரின் அலட்சியத்திற்க்கு வித்திடும் என்பதால்! >>

ஏனெனில்;
ஓய்வு நாள் கடவுளின் அடையாளம்!
அதை மதிப்பது அவரை கனப்படுத்தும்!
மிதிப்பதோ அவரை அவமானப்படுத்தும்!


இதெல்லாம் சரிதான்!ஆனால்,

1. வணங்கா கழுத்துள்ள இஸ்ரயேலர்கள், கடைசிவரை இந்த ஓய்வு நாளை கடைப்பிடித்தார்களா?

2. ஓய்வு நாள், மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் மட்டுமல்ல; பயிரிடும் நிலத்திற்க்கும் கூடவாம்!
எப்படி?

3. ஓய்வு நாளில்; கிறிஸ்து நோய்களை குணப்படுத்தினாரே..
இது சரியா?

4. பசியோடு இருந்த தாவீதுக்கு; ஆசாரியர்கள் மட்டும் சாப்பிடும் சமூகத்து அப்பம் கொடுக்கப்பட்டது முறையா?

இப்படி பல பல கேள்விகளுக்கான விடைகள் இப்பாடத்தில் விளக்கப்பட்டுள்ளது!

படித்து பயன்பெறுங்கள்!
இத்துடன் என் பகுதி முடிந்தது!


இரத்தினச் சுருக்கம்!
மனிதர்களுக்காக உண்டாக்கப்பட்டதே ஓய்வு நாளேயன்றி;

ஓய்வு நாளுக்காக மனிதர்கள் உண்டாக்கப்படவில்லை!

ஓய்வுநாள் சோர்ந்துப் போனவர்களை நசுக்க அல்ல; அவர்களை உயர்த்தவே!

ஓய்வு நாள் ஒரு கட்டளை தான்; ஆனால் ஆழ்ந்து கவனித்தால் அது அன்பின் பரிசு!

முதலில் கட்டுபாடுகளை விதித்தாலும்; பின்பு ஆசிர்வாதத்தை அள்ளித் தரப் போகும் தேவனின் அற்புத ஈவு!

துளியும் வஞ்சனையற்ற எங்கள் பரமபிதாவின் பாதம் பணிந்து, இந்த நாளை ஆசிர்வதித்துக் கொடுத்த அவருக்கு, எங்கள் இரட்சகராம் கிறிஸ்துவின் நாமத்தில் துதிகளை ஏறெடுக்கிறோம்!
ஆமென்!



69. THE LORD OF THE SABBATH


LORD OF THE SABBATH

LORD OF THE DAY OF REST!

THE PEACEFUL DAY OF REST – PART 2 (LEVITICUS 23)


In TODAY’S LESSON, we are going to see BEAUTIFULLY about how JESUS CHRIST, the LORD OF THE SABBATH, performed MIRACLES on the DAY OF REST — the REASONS He gave for them, and the TRUE MEANINGS behind the SABBATH!


THE DAY OF REST!
It was a SIGN between the HOLY FATHER and the PEOPLE OF ISRAEL!
(EXODUS 20:8-11)

Since we have already studied this in the previous lesson,

TODAY, we shall WALK ALONGSIDE CHRIST and understand the EXPLANATIONS He gave!


FIRST!

WHY did the SABBATH create so many ARGUMENTS against CHRIST in the GOSPELS?

Because of the many MIRACLES CHRIST performed on the DAY OF REST...

They were:

1. CASTING OUT AN UNCLEAN SPIRIT in CAPERNAUM! (MARK 1:21–28)
2. HEALING PETER’S MOTHER-IN-LAW from FEVER! (MARK 1:29–31)
3. HEALING the MAN with a WITHERED HAND! (MARK 3:1–5)
4. HEALING the MAN who was PARALYZED for 38 YEARS by the pool of BETHESDA and telling him, “RISE, TAKE YOUR BED AND WALK!” (JOHN 5:1–16)
5. HEALING the BENT WOMAN and making her STAND UPRIGHT! (LUKE 13:10–17)
6. HEALING a MAN suffering from DROPSY! (LUKE 14:1–6)
7. GIVING SIGHT to the MAN BORN BLIND and sending him to wash in the POOL OF SILOAM! (JOHN 9:1–7)

All these were the WONDERFUL WORKS our LORD did on the DAY OF REST!


But to the JEWS, these were VIOLATIONS!

Because, according to them, even picking up a BUTTON that fell on the ground on the SABBATH was considered WORK!

If anyone did that, it was counted as BREAKING the SABBATH!

Among such FOOLISH THINKING that grew within ISRAEL and among the RELIGIOUS LEADERS, it is no surprise that CHRIST’S MIRACLES caused many ARGUMENTS!
But the ANSWERS CHRIST gave SILENCED every one of their vain arguments!

They were:

1. Which is RIGHT — to DO GOOD on the SABBATH or to DO EVIL?

2. To KILL LIFE or to SAVE LIFE?

3. If you can show COMPASSION to save an ANIMAL fallen into a PIT on the SABBATH, why do you REFUSE to show MERCY to a SUFFERING HUMAN BEING?

No one could ANSWER these QUESTIONS of CHRIST! That’s the TRUTH!

Now tell me yourselves —

DID OUR CHRIST truly BREAK GOD’S LAW of the SABBATH?

CERTAINLY NOT!

“THE SON OF MAN IS LORD EVEN OF THE SABBATH.” (MATTHEW 12:8)

The ONE who APPOINTED CHRIST as LORD is none other than HIS LOVING FATHER!
So then, would the SON DISOBEY His FATHER’S COMMAND?
CERTAINLY NOT!

He did these MIRACULOUS SIGNS to REVEAL the TRUE PURPOSE of His FATHER’S SABBATH!


  • FIRSTLY;
    A PRIEST must still DO GOD’S WORK even on the DAY OF REST.
  • Because, the GOD who CREATED the UNIVERSE, GAVE LIFE, BREATHED SPIRIT, and KEEPS HEARTS BEATING — can there be REST for such a GOD who upholds all things?
  • If HE were to REST, what would happen to the WORLD?
  • Isn’t our HEAVENLY FATHER the ONE whose EYES NEVER SLEEP?

Therefore, is it WRONG for CHRIST — our GREAT HIGH PRIEST — to DO GOD’S WORK on the DAY OF REST?

If we think, “HOW is HEALING considered GOD’S WORK?”

What did YAHWEH command about the DAY OF REST?

REST! GATHER TOGETHER!
REMEMBER ME!
SHOW MERCY!
(ISAIAH 58:13–14; HOSEA 6:6)

But the PEOPLE OF ISRAEL did three and FORGOT one — “MERCY!”

But the SON OF HIS LOVE showed MERCY perfectly and taught the TRUE PURPOSE of the FATHER’S SABBATH!

Because the SAVIOR has AUTHORITY to REMOVE the HEAVY BURDENS of the PEOPLE, He FREED them from their CHAINS of SICKNESS!

CHRIST did NOT REJECT the COMMANDS of the FATHER — instead, He REVEALED the FATHER’S HEART hidden within them!

CHRIST did NOT WEAKEN HOLINESS — instead, He LOOSENED the CHAINS of PEOPLE bound by EMPTY TRADITIONS!

He BROUGHT OUT the TRUE MEANINGS of the SABBATH — WORSHIP, COMPASSION, REST, and JOY — and MADE THEM KNOWN to the PEOPLE!

Thus ends my portion!

Yet, like a DEEP SEA, this lesson holds MANY MORE hidden truths!

1. When CHRIST said in MATTHEW 12:5–6, “One greater than the TEMPLE is here,” did He place Himself ABOVE the FATHER?

2. Do the SEVEN HEALINGS done on SEVEN SABBATHS signify something deeper?
3. What are the THINGS the PHARISEES said should NOT be done on the DAY OF REST?
4. What is the FULL MEANING of “LORD OF THE SABBATH”?
5. What do the FOOTSTEPS of JESUS teach us?

All these EXPLANATIONS are for YOUR STUDY and REFLECTION!


PRECIOUS SUMMARY!

COMMANDS that CHOKE MERCY never come from GOD!

The DAY OF REST is NOT a WALL that keeps people OUT —
It is a DOOR through which MERCY ENTERS!


O YAHWEH, our LOVING FATHER, who leads us through these WONDERFUL LESSONS in the PATH OF LOVE —
we offer our THANKS in the NAME of CHRIST!

O LOVING ONE, we THANK YOU!



ஓய்வு நாளின் ஆண்டவர்!

சமாதானத்தின் ஓய்வு நாள்- பகுதி -2 (லேவியர் 23)


இன்றைய பாடத்தில், நம் ஓய்வுநாளின் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, ஓய்வுநாளில் செய்த அற்புதங்களை குறித்தும்; அதற்கு அவர் தரும் காரணங்களை குறித்தும்;
ஓய்வுநாளுக்கான உண்மையான விளக்கங்களை குறித்தும் மிக அழகாக பார்க்கப் போகிறோம்!


ஓய்வுநாள்!
பரிசுத்த பிதாவிற்க்கும், இஸ்ரயேல் ஜனங்களுக்கும் இடையிலான ஒரு அடையாளம்!
(யாத்திரை 20:8-11)

இதைக் குறித்து நாம் கடந்த பாடங்களில் பார்த்து வருவதால்,

இன்று நாம், நம் கிறிஸ்துவின் கூடவே நடந்து, அவர் தரும் விளக்கங்களை பார்க்கப் போகிறோம்!


முதலில்!

ஓய்வுநாள் ஏன் சுவிசேஷங்களில் பல வாதங்களை கிறிஸ்துவின் மேல் வைத்தது?

ஏனெனில்; ஓய்வு நாளில் கிறிஸ்து செய்த பல அற்புதங்களினால்...

அவைகள்:

1. கப்பர்நகூமில் அசுத்த ஆவியை துரத்துதல்! (மாற்கு 1:21-28)
2. பேதுருவின் மாமியாரை காய்ச்சலில் இருந்து குணமாக்குதல்! (மாற்கு 1:29-31)
3. சூம்பிய கை உடையவரை குணமாக்குதல்! (மாற்கு 3:1-5)
4. பெதஸ்தா குளம் அருகே 38 வருடமாக முடமாக இருந்தவரை குணமாக்கி, எழுந்து நட! என்று சொன்னது! (யோவான் 5:1-16)
5. கூன் போட்ட பெண்ணை குணமாக்கி நிமிரச் செய்தல்! (லூக்கா 13:19-17)
6. நீர்கோவை வியாதியுள்ள ஒருவரை குணமாக்குதல்! (லூக்கா 14:1-6)
7. பிறவி குருடனுக்கு, பார்வை அளித்து சிலோவாம் குளத்தில் கழுவ வைத்தல்! (யோவான் 9:1-7)

இவைகளெல்லாம்; ஒய்வு நாளில் நம் ஆண்டவர் செய்த அற்புதங்கள்!


ஆனால் யூதர்களுக்கோ, அது விதிமீறல்கள்!

ஏனெனில்; ஓய்வு நாளில், கீழே தெரித்து விழுந்த சட்டை பொத்தானைக் கூட கைகளால் எடுக்க கூடாது...

அப்படி செய்தால் அது ஓய்வுநாளில் வேலை செய்ததாகி விடுமாம்!

இப்படிப்பட்ட முட்டாள்தனமான சிந்தனையை வளர்த்துக் கொண்ட இஸ்ரயேல் ஜனங்கள் மத்தியிலும்; வளர்த்து விட்ட மத குருமார்கள் மத்தியிலும்,

நம் கிறிஸ்துவின் இந்த அற்புத செயல்கள், நிச்சயம் வாக்கு வாதங்களை தூண்டி இருப்பதில் ஆச்சரியம் ஏதும் இல்லை! தான்!
அவர்களின் விதண்டாவாதங்களுக்கு, நம் கிறிஸ்துவின் இந்த பதில்கள், அவர்களின் வாயை அடைக்கச் செய்தது!

அவையாவன:

1. எது நல்லது? ஓய்வுநாளில் நன்மை செய்வதா? தீமை செய்வதா?

2. உயிரைக் கொல்வதா? அல்லது காப்பாற்றுவதா?

3. குழியில் விழுந்த உங்களின் மிருக ஜீவன்களை நீங்கள் ஓய்வுநாளில் காப்பாற்ற காட்டும் இரக்கத்தை, ஏன் வேதனையில் துடிக்கும் மனிதர்கள் மேல் காட்ட மறுக்கிறீர்கள்?

கிறிஸ்துவின் இந்த கேள்விகளுக்கு
ஒருவராலும் மறுபேச்சு பேச முடியவில்லை என்பது தான் உண்மை!

சரி; நீங்களே சொல்லுங்கள்!

நம் கிறிஸ்து; உண்மையில், கடவுளின் ஓய்வு நாள் விதிமுறைகளை மீறினாரா?

நிச்சயம் இல்லை!

மனுஷகுமாரன் ஓய்வுநாளுக்கும் ஆண்டவர்! (மத்தேயு 12:8)

நம் கிறிஸ்துவை; "ஆண்டவராக" நியமித்தவரே, அவரின் அன்பு தகப்பன் தான்!
அப்படியிருக்க,
தன் தகப்பனின் கட்டளையை மகன் மீறுவாரா?
நிச்சயம் இல்லை!

தன் பிதாவின் ஓய்வுநாளுக்குரிய உண்மையான நோக்கங்களை புரிய வைக்கவே அவர் இந்த அற்புத அடையாளங்களை செய்தார்!


  • முதலில்;
    ஒரு ஆசாரியர், ஓய்வு நாளில் கூட கடவுளின் காரியங்களை செய்ய வேண்டும்.
  • ஏனெனில்;அண்ட சராசரங்களை உருவாக்கி; உயிர்களை படைத்து; சுவாசிக்க செய்து; இதயங்களைத் துடிக்க வைத்துக் கொண்டிருக்கும் கடவுளின் காக்கும் வேளைக்கு ஓய்வு என்பது உண்டோ?
  • அவர் ஓய்வெடுத்தால் உலகம் என்னாவது?
  • ஒருபோதும் உறங்காத கண்களை உடையவர் அல்லவா? நம் பரலோகத் தந்தை!

எனவே,
மகா பிரதான ஆசாரியரான கிறிஸ்து, ஓய்வு நாளில் கடவுளின் காரியங்களை செய்வது தவறாகுமா?

இங்கு குணமாக்குதல் எப்படி கடவுளின் காரியமாகும்?
என்று சிந்திப்போமாகில்;

ஒய்வு நாளில், யாவே கடவுள் கூறியிருந்தது என்ன?

ஓய்வெடுங்கள்! ஒன்று கூடுங்கள்!
என்னை கணம் பண்ணுங்கள்!
இரக்கம் காட்டுங்கள்!
(ஏசாயா 58: 13;14; ஓசியா 6:6)

ஆனால் மூன்றை செய்த இஸ்ரயேல் கூட்டம், ஒன்றை மறந்துவிட்டார்கள்!
அது தான் கடவுள் சொன்ன "இரக்கம்"!

ஆனால்,
அவரின் அன்பின் குமாரன்,
இரக்கத்தை சரியாக காட்டி, தன் பிதாவின் உண்மையான ஓய்வு நாளின் நோக்கத்தை கற்பித்தார்!

மக்களின் கனமான நுகங்களை அகற்ற இரட்சகருக்கு அதிகாரம் உண்டு என்பதால், அவர்களின் வியாதிகளின் கட்டுக்களை அகற்றினார்!

கிறிஸ்து பிதாவின் கட்டளைகளை ஒதுக்கவில்லை! மாறாக;
அதில் மறைந்துள்ள பிதாவின் இதயத்தைக் காட்டினார்!

கிறிஸ்து பரிசுத்தத்தை தளர்த்தவில்லை! மாறாக; மூட கொள்கைகளால் பிணைக்கப்பட்ட மக்களின் சங்கிலிகளை தளர்த்தினார்!

ஒய்வு நாளின் உண்மையான அர்த்தங்களான,
வணக்கம்! கருணை, ஓய்வு மற்றும் மகிழ்ச்சியை மக்களிடம் வெளிக் கொண்டு வந்தார்!

இத்துடன் என் பகுதி நிறைவடைகிறது!

இன்னும் ஆழ்கடலை போல ஏராளமான அர்த்தங்கள் இப்பாடத்தில் புதைந்துள்ளது!

1. மத்தேயு 12:5;6 ல் கோவிலை விட பெரியது இங்கே இருக்கிறது! என்று கிறிஸ்து தன்னைக் குறித்து பேசியதால், அவர் தன்னை பிதாவிற்க்கும் மேலே உயர்த்தினாரா?

2. ஏழு ஓய்வுநாளின்; ஏழு குணப்படுத்துதல் எதைக் குறித்தாவது நமக்கு உணர்த்துகிறதா?
3. பரிசேயர்கள் கூறும் ஓய்வு நாளில் செய்யக் கூடாத காரியங்கள் எவைகள்?
4. ஒய்வுநாளின் ஆண்டவர் என்பதன் முழுமையான அர்த்தம் என்ன?
5. இயேசுவின் அடிச்சுவடுகள் நமக்கு கற்றுத் தரும் பாடம் என்ன?

இவைகளுக்கான விளக்கங்கள்!
உங்களின் பார்வைக்கு!


இரத்தின சுருக்கம்!

இரக்கத்தை நெரிக்கும் கட்டளைகள் எதுவும்
கடவுளிடம் இருந்து வருவது அல்ல!

ஓய்வு நாள் மக்களை வெளியே அடைத்து வைக்கும் வேலி அல்ல!
அது; கருணை நுழையும் வாசல்!


அருமையான பாடங்களால்;
எங்களை அன்பின் பாதையில் நடத்திவரும் யாவே தந்தையே;
கிறிஸ்துவின் நாமத்தால் நன்றிகளை ஏறெடுத்துக் கொள்கிறோம்!

அன்பே வடிவானவரே! உமக்கு நன்றிகள்!



70. A DAY TO DELIGHT - Leviticus Ch. 23



A Day to Rejoice!


"Shabbat Shalom!"
"The Rest Day of Peace! (Part - 3)"

We can clearly feel that the long-standing doubts and confusions about the day of rest are slowly leaving our hearts, right?


But still, a few questions might echo in the corners of our hearts...

Which day should we
keep as the day of rest?

❓Saturday?

❓Or some other day?

❓Is there any hidden secret that God wants to reveal in this matter?

That’s what we’re going to see in today’s lesson. Come on...

Let’s see how the Bible leads our hearts not to arguments, but to rest!


Disciples of Christ!

The early disciples gathered on the first day of the week (Sunday), the day of Christ’s resurrection, to break bread and listen to the Word of God!
(Acts 20:7)
Not as a commandment, but joyfully...

Yet, at the same time, the apostles did not ignore the commandment of the Sabbath!

Instead, they transformed it!

🌼 They turned the Sabbath commandment into a relationship!

🌼 That relationship is our risen Christ!
Every day, their life rested in Christ and walked according to the Spirit!

By the Spirit, Paul said not to judge anyone regarding the Sabbath day.
(Colossians 2:16-17)

Because,
in the Old Testament, the meaning or essence behind every shadow was —
Christ Himself.


When the Reality has come, what use is the shadow?

The apostles were not careless about God’s commandments; rather, they were faithful to God’s purpose!

Therefore,
their conscience did not condemn them about the Sabbath day!

Because they followed in the footsteps of the Reality — Christ Himself.


But if you’re wondering,
“Paul preached in the synagogues on the Sabbath day, didn’t he?”...

Yes! He preached in the synagogues on the Sabbath day.
Why?
Because people gathered there that day — so he used that opportunity to preach about Christ!

Even our Lord Jesus healed many sick people on the Sabbath day.
Does that mean
He intended to destroy God’s law?
Certainly not!

He did so with the purpose of revealing the Father’s mercy and love to others!

The blessing and gift of God’s Sabbath rest is none other than our Lord Jesus Christ Himself!

That’s why Jesus called us saying:

"Come to Me, and I will give you rest!"
(Matthew 11:28-29)


The writer of Hebrews connects three kinds of rest here:
1. The rest of Creation! (God rested on the seventh day)
2. The rest in Canaan! (The promised land of Israel)
3. The rest in Christ!
And it is in this rest of Christ that we now...

...are resting!

We wait in faith!

We eagerly await to fully enter it in the coming age!

In short,
when we continue to walk in Christ, we preserve the holiness of the Sabbath.

And the blessing we receive is:


A peaceful heart, an easy yoke, a light burden — a beautiful life commanded by love, without anxiety or restlessness!
Not just here, but in the coming age!

Let us not be trapped in the thought that the Sabbath is just one single day! Instead, like Christ, let us do only the things that glorify the Father — everywhere, in everything, at all times.


Do we want to receive the blessing of the Sabbath?
1. Stop being in a hurry!
2. Give place for mercy!
3. Gather around the Word!
4. Prepare your heart in Christ!
With this, I conclude my part.

There are still many wonderful insights within the lesson...


Precious Summary:

Without setting aside just a day or a time to remember and worship our loving Father —
whenever you get the opportunity,
Praise Him! Pray! Keep your heart pure — a dwelling place God loves to abide in!
Show mercy to others!
Follow in the footsteps of Christ!


May God Himself bless us all,
and lead us in Christ!
Amen!



மகிழ்வதற்க்கு ஒருநாள்!


"ஷபாத் ஷாலோம்!"
"சமாதானத்தின் ஓய்வு நாள்! (பகுதி-3)"

ஓய்வு நாளை குறித்த நீண்ட நாள் சந்தேகங்கள், குழப்பங்கள் நம் இதயத்தை விட்டு நீங்கிகொண்டே வருகிறதை நாம் நன்கு உணர்ந்துக் கொண்டே வருகிறோம்.. அல்லவா?


ஆனால்; இன்றும் சில கேள்விகள் நம் இதயத்தின் ஓரத்தில் ஒலித்துக் கொண்டிருக்கலாம்...

நாம் எந்த நாளை
ஓய்வு நாளாக கடைபிடிக்க வேண்டும்?

❓சனிக்கிழமையையா?

❓அல்லது வேறு ஏதாவது ஒரு நாளையையா?

❓கடவுள் சொல்லும் வேறு ஏதாவது ஒரு ரகசியம் இதில் புதைந்துள்ளதா?

இதற்கான விடைகளைத் தான் இன்றைய பாடத்தில் நாம் பார்க்க போகின்றோம். வாருங்கள்..

எவ்வாறு வேதம் நம் இதயங்களை வாதங்களுக்கு அல்ல; ஓய்வுக்கு இட்டு செல்கிறது என்பதைப் பார்க்கலாம்!


கிறிஸ்துவின் சீஷர்கள்!

ஆரம்ப கால சீஷர்கள்; கிறிஸ்துவின் உயிர்தெழுதல் நாளான வாரத்தின் முதல் நாளில் (ஞாயிறு) அப்பம் பிட்டு, கடவுளின் வார்த்தைகளை கேட்க கூடினார்கள்!
(திருத்தூதர்கள் 20:7)
கட்டளையாக அல்ல மகிழ்ச்சியாக...

ஆனால் அதே நேரத்தில் அப்போஸ்தலர்கள் ஓய்வு நாள் கட்டளைகளை உதாசீனப்படுத்தவில்லை!

மாறாக; மாற்றம் செய்தார்கள்!

🌼ஓய்வு நாளின் கட்டளையை ஒரு உறவுக்கு மாற்றினார்கள்!

🌼அந்த உறவு நம் உயிர்தெழுந்த கிறிஸ்து!
ஒவ்வொரு நாளும் கிறிஸ்துவில் அவர்களின் வாழ்க்கை ஒய்வெடுத்தது! ஆவியின்படி நடந்தது!

ஆவியின்படி பவுல் ஓய்வு நாளை குறித்து யாரையும் நியாயம் தீர்க்க வேண்டாம் என்று கூறினார்.
(கொலேசியர் 2:16;17)

ஏனெனில்,
பழைய ஏற்பாட்டில் ஒவ்வொரு காரியங்களின் நிழலுக்கும் பொருள் என்னவென்றால் அதாவது சாராம்சம் என்னவென்றால்;
நம் கிறிஸ்துவே என்றார்.


நிஜம் வந்த பிறகு, அங்கே நிழலுக்கு வேலை ஏது?

அப்போஸ்தலர்கள், கடவுளின் கட்டளைகளுக்கு கவனக் குறைவாக நடக்கவில்லை; மாறாக அவர்கள் கடவுளின் நோக்கத்திற்க்கு உண்மையுள்ளவர்களாகவே இருந்தார்கள்!

அதனால்;
ஓய்வுநாளைக் குறித்து அவர்களின் மனசாட்சி அவர்களை குற்றப்படுத்தவில்லை!

ஏனெனில்; அவர்கள் நிஜத்தின் பாதபடியை(கிறிஸ்துவின்) பின் தொடர்ந்து சென்றதனால்...


ஆனால், பவுல்,
ஓய்வுநாளில், ஜெப ஆலயங்களில் பிரசங்கித்தாரே... என்ற குழப்பம் வருமாயின்...

ஆம்! அவர் ஓய்வு நாளில் ஜெப ஆலயத்தில் பிரசங்கித்தார்..
எதற்காக?
ஜனங்கள் அன்று ஒன்று கூடி வருவதால், கிறிஸ்துவை பற்றி பிரசங்கிக்க அந்நாளை உபயோகப்படுத்தினார்!

நம் கிறிஸ்துவும் ஓய்வுநாளில் அநேக நோயாளிகளை குணமாக்கினார்..
அதனால்;
அவர் கடவுளின் சட்டத்திட்டத்தை அழிக்க நினைத்தாரா?
நிச்சயமாக இல்லை!

பிதாவின், இரக்கத்தையும், அன்பையையும் மற்றவர்களுக்கு தெரியப்படுத்தும் நோக்கத்துடனே! இவ்வாறு அவர் அடையாளங்களை செய்தார்!

கடவுளின் ஓய்வுநாளுக்கான ஆசிர்வாதமும், பரிசும் நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தான்!

அதனால் தான் இயேசுவும் இவ்வாறு நம்மை அழைத்தார்!

என்னிடம் வாருங்கள்! நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருகிறேன்! என்று!
(மத்தேயு 11:28-29)


எபிரேய எழுத்தாளர்; இங்கு மூன்று ஓய்வுகளை இணைக்கிறார்.
1. சிருஷ்டிப்பின் இளைப்பாறுதல்! (கடவுள் ஏழாம் நாள் ஓய்வெடுத்தார்)
2. கானானில் ஓய்வு! (இஸ்ரயேல் நாட்டின் பகுதி ஓய்வு)
3. கிறிஸ்துவின் ஓய்வு!
இந்த கிறிஸ்துவின் ஓய்வில் தான் நாமும் இப்பொழுது;

இளைப்பாறிக் கொண்டிருக்கிறோம்!

விசுவாசத்தால் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றோம்!

வரவிருக்கும் யுகத்தில் நாம் முழுமையாக நுழைய காத்துக் கொண்டிருக்கிறோம்!

சுருங்கச் சொன்னால்,
நாம் கிறிஸ்துவுக்குள் தொடர்ந்து நடக்கும் போது ஓய்வு நாளின் புனிதத்தன்மையை பாதுகாக்கிறோம்.

அதனால் நமக்கு கிடைக்கும் ஆசிர்வாதம்:


அமைதியான இதயத்துடன், எளிதான நுகத்துடன்; இலகுவான சுமையுடன், பதட்டமில்லாமல் அன்பினால் கட்டளையிடப்பட்ட அழகிய வாழ்க்கை!
இங்கு அல்ல.. வரவிருக்கும் யுகத்தில்!

ஓய்வு நாள் ஒருநாள் மட்டுமே! என்ற சிறைக்குள் நாம் சிக்கி கொள்ள வேண்டாம்! மாறாக, கிறிஸ்துவை போலவே நாமும் எங்கும், எதிலும், எப்போதும் பிதாவை கனம் பண்ணும் காரியங்களையே செய்து கொண்டு இருக்க வேண்டும்.


நாம் ஓய்வு நாளின் ஆசிர்வாதத்தை பெற வேண்டுமா?
1. அவசரப்படுவதை நிறுத்த வேண்டும்!
2. இரக்கத்திற்க்கு இடமளிக்க வேண்டும்!
3. வேதத்தை சுற்றி ஒன்று கூட வேண்டும்!
4. இதயத்தை கிறிஸ்துவுக்குள் தயார்படுத்த வேண்டும்.
இத்துடன் எனது பகுதியை முடித்துக் கொள்கிறேன்!

மேலும் பல அருமையான விளக்கங்கள் பாடத்தின் உள்ளே...


இரத்தினச் சுருக்கம்:

நம் அன்பான தகப்பனை நினைக்கவும், வணங்கவும் ஒரு நாளையோ; ஒரு நேரத்தையோ; ஒதுக்காமல்;
வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம்,
துதியுங்கள்! ஜெபியுங்கள்! கடவுள் வாசம் செய்ய பிரியப்படும் நம் இதயத்தை தூய்மைபடுத்திக் கொண்டே இருங்கள்!
பிறர் மீது இரக்கம் காட்டுங்கள்!
கிறிஸ்துவின் பாதசுவடுகளை பின்பற்றுங்கள்!


கடவுள் தாமே நம் அனைவரையும் ஆசிர்வதித்து,
கிறிஸ்துவுக்குள் வழி நடத்துவாராக!
ஆமென்!



71. SABBATH SIGN 1 (Leviticus Ch. 23, Luke 4:31-37)



THE SABBATH OF PEACE! (PART - 4)


THE SIGN OF THE SABBATH - 1

We are going to look, one by one, at the SEVEN WONDERFUL MIRACLES that our LORD JESUS CHRIST performed on the SABBATH DAY! Dearly beloved!

DON’T MISS ANYTHING!
EACH ONE IS A PEARL!


THE WONDERFUL TEACHERS WHO LEAD US IN OUR SPIRITUAL JOURNEY!
THESE PRECIOUS LESSONS WE ARE STUDYING!
I AM NOT EXAGGERATING...

I’M SURE YOU YOURSELF HAVE FELT THIS IN YOUR HEART!


OUR LESSON: TODAY BEGINS WITH OUR CHRIST IN CAPERNAUM!

TODAY’S LESSON WILL ENTER INTO THREE PERIODS:
1. WHAT HAPPENED! (YESTERDAY)
2. WHAT IS HAPPENING! (TODAY)
3. WHAT IS GOING TO HAPPEN! (TOMORROW)


WHAT HAPPENED:

WHAT HAPPENED THAT DAY IN CAPERNAUM?

SHALL WE STEP ASIDE AND WATCH?

IT WAS THE SABBATH DAY! OUR CHRIST WAS PREACHING POWERFULLY IN THE SYNAGOGUE!

BUT SUDDENLY, A HARSH VOICE INTERRUPTED...
“JESUS OF NAZARETH! WHY ARE YOU INTERFERING WITH US?
HAVE YOU COME TO DESTROY US?
WE KNOW WHO YOU ARE — THE HOLY ONE OF GOD!”

EVERYONE STOOD AMAZED AND FEARFUL,
(INCLUDING US) WONDERING WHAT WOULD HAPPEN NEXT!
BECAUSE THAT VOICE CAME FROM A MAN POSSESSED BY AN EVIL SPIRIT!

BUT THEN,

WITH A COMPASSIONATE LOOK AND A GENTLE VOICE, OUR JESUS SPOKE HIS COMMAND!

BE QUIET!
COME OUT OF HIM!

WHAT A WONDER!

THE UNCLEAN SPIRIT SCREAMED, THREW THE MAN DOWN IN ANGER, AND LEFT HIM!
A MOMENT OF SILENCE... THEN HE ROSE UP — FREE AND WHOLE!

EVERYWHERE, PEOPLE WERE AMAZED AND ASKED,
“WHAT KIND OF COMMAND IS THIS?
EVEN EVIL SPIRITS OBEY HIM!”

ON THE DAY MADE FOR REST, THAT MAN FOUND HIS TRUE REST!

FOR THE LORD OF THE SABBATH IS CHRIST HIMSELF!


IS THE LESSON OVER?

NO...

THAT WAS THE LESSON WE HEARD...
THE LESSON WE ARE ABOUT TO HEAR IS EVEN MORE PRECIOUS!


PART ONE:

FREEDOM IN THE HOUSE OF GOD — FOR US!

WHAT IS HAPPENING! (TODAY)

WE TOO WERE IN PRAYER HOUSES — SEEMINGLY FREE...
JUST LIKE THAT DEMON-POSSESSED MAN...
WHAT DOES THAT MEAN?

YES, BELOVED...

WE TOO WERE IN PRAYER HOUSES! WE SANG SONGS! BUT WE STILL CARRIED CHAINS WE COULD NOT BREAK!

WE WERE CREATED TO WORSHIP; TO HAVE CLEAR THOUGHTS, PEACEFUL HEARTS, AND SUBMITTED WILLS! BUT THE CORRUPTED POWERS OF THE AIR LED US ASTRAY.

FALSE TEACHINGS MADE US THINK SIN WAS ACCEPTABLE!

HUMAN TRADITIONS REPLACED OBEDIENCE!
THEY WERE SOWN INTO US.

THESE UNCLEAN SPIRITS TAUGHT US TOO!

THEY SAID CHRIST IS HOLY!

HALF-TRUTH —
THE CUNNING OF THE DEVIL! 📌

BUT THEY HID FROM US THE FULL TRUTH —
THE CALL TO COMPLETE DEDICATION AND OBEDIENCE TO CHRIST!

CAUGHT IN HIS TRICKERY, WE TOO WERE PERISHING —
LIKE THAT MAN — WITHOUT KNOWING THE FULL TRUTH OF CHRIST!

AND THEN;

THE MERCY OF THE LORD FOUND US!

THE WORDS OF TRUTH CAST OUT THE DEMONS IN OUR HEARTS!

AFTER MANY QUESTIONS, THERE CAME A MOMENT OF PEACE!

BEFORE THE PURE TRUTH, WE HAD NOTHING LEFT BUT TO BOW DOWN IN SURRENDER!


BUT JUST AS THE EVIL SPIRIT LEFT THAT MAN WITH PAIN AND STRUGGLE,

WHEN THE SPIRIT OF FALSEHOOD LEFT US, IT ALSO BROUGHT US SOME SUFFERING!

HOW?

✨LONELINESS IN THE FAMILY!
✨SEPARATION FROM FRIENDS!
✨HATRED FROM THOSE WE TRULY LOVED!

YES, WE WERE SHAKEN — THAT’S TRUE!

BUT WE CAME THROUGH! WE LEFT FALSE TEACHINGS BEHIND!

YET WE HAVE NOT REACHED FULLNESS!

HOW?

THE DEMON SPOKE TRUTHS ABOUT CHRIST — BUT ITS HEART MEANT ONLY DECEPTION!

ARE WE THE SAME?

⚖️ WE HAVE COME INTO THE TRUTH...
BUT;
ARE WE REALLY TRYING TO BECOME LIKE CHRIST?
OR;
ARE WE JUST WEARING A MASK AND PRETENDING TO BE HIS?


PREACHING SCRIPTURE WITH OUR LIPS;
YET HOLDING IN OUR HEARTS — SIN, BITTERNESS, DECEIT, JEALOUSY, IMMORALITY, AND SELF-MADE COMPROMISES!

THINGS GOD CALLS WRONG — WE JUSTIFY WITH OUR FOOLISH “GOD WILL UNDERSTAND”!

ARE THESE THINGS HIDING IN OUR HEARTS?

THESE ARE WHAT WE MUST WEIGH OURSELVES AGAINST!

IF WE ABIDE IN CHRIST, THEN WE ARE HIS DISCIPLES!

WHEN WE KNOW THE TRUTH, THE TRUTH SHALL MAKE US FREE! (JOHN 8:31-32)

LIKE THAT MAN WHO FOUND REST AFTER PAIN,
WE TOO WILL FIND REST IN CHRIST...

AS THE UNCLEAN THINGS LEAVE US,
WE WILL SHINE LIKE CHRIST — IN WORD AND DEED!

IN EVERYTHING, WE WILL BEGIN TO SEE GOODNESS!

EVEN TO EVIL, WE WILL DO GOOD!

PEACE (REST) NOW REIGNS IN OUR HEARTS!

OUR PEACE BRINGS PEACE TO THOSE AROUND US!


PART TWO:
FOR THE KINGDOM OF PEACE: (FOR ALL)
(WHAT IS GOING TO HAPPEN:)

IN THE FUTURE, IN CHRIST’S GLORIOUS VISIBLE KINGDOM — THE WHOLE WORLD WILL HAVE *PEACE — THAT IS, TRUE REST!*

HOW? EVEN THIS IS TAUGHT UNDER THE FIRST SIGN OF THE SABBATH!

THREE THINGS EXPLAIN IT CLEARLY!
THEY ARE:
1. BE STILL AND COME OUT — WILLINGNESS TO OBEY THAT CALL!
2. ALLOWING FALSE TEACHINGS TO LEAVE US!
3. COOPERATING WITH CHRIST AS HE HEALS US!

THESE ARE EXPLAINED IN DETAIL WITHIN THE LESSON FOR YOUR MEDITATION...

WITH THIS,
I CONCLUDE MY WRITING’S INSIGHT!


PRECIOUS SUMMARY!

OUR CHRIST —
THE SAME YESTERDAY, TODAY, AND FOREVER!
HIS REST IS ALSO THE SAME —
UNCHANGING FOREVER!
BECAUSE;
HE IS THE *HOLY OF HOLIES’ HOLY ONE!*


MAY GOD HIMSELF LEAD US IN CHRIST AND BRING US INTO HIS REST!
AMEN!



சமாதானத்தின் ஓய்வுநாள்! (பகுதி-4)


ஓய்வு நாளின் அடையாளம் - 1

நம் இயேசு கிறிஸ்து ஓய்வுநாளில் குணமாக்கிய ஏழு சிறந்த சம்பவங்களை குறித்து, ஆச்சரியம் மேலிட ஒவ்வொன்றாகப் பார்க்க போகிறோம்! பிரியமானவர்களே!

எதையும் தவறவிடாதீர்கள்!
அத்தனையும் முத்துக்கள்!


ஆவிக்குரிய பாதையில் நம்மை வழி நடத்திச் செல்லும் அற்புத ஆசான்கள்!
நாம் படித்துக் கொண்டிருக்கும் இந்த அருமையான பாடங்கள்!
இதை நான் மிகைப்படுத்தி கூறவில்லை..

நீங்களே இந்நேரம் இதை மனதால் உணர்ந்து இருப்பீர்கள் என்பது நிச்சயம்!


நம் பாடம்: இன்று கப்பர்நகூமில் நம் கிறிஸ்துவுடன் தொடங்குகிறது!

இன்றைய பாடம் மூன்று காலங்களில் பிரவேசிக்கப் போகிறது!
1. நடந்தது! (நேற்று)
2. நடந்துக் கொண்டிருப்பது! (இன்று)
3. நடக்கப்போவது! (நாளை)


நடந்தது:

அன்று கப்பர்நகூமில் நடந்தது என்ன?

நாம் சற்று மறைந்து நின்று பார்ப்போமா?

அன்று ஓய்வு நாள்!ஜெப ஆலயத்தில் நம் கிறிஸ்துவின் சக்திவாய்ந்த பிரசங்கம்!

ஆனால், திடீரென்று அபஸ்வரத்தில் இடையில் ஒரு குரல்...
நசரேனாகிய இயேசுவே! ஏன் எங்கள் விஷயத்தில் தலையிடுகிறீர்கள்?
எங்களை அழிக்க வந்தாயா?
கடவுளின் பரிசுத்தர் நீர் என்பது எங்களுக்கு தெரியும்!

அனைவரும் அதிர்ச்சியோடும், பயத்தோடும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
(நம்மையும் சேர்த்து) என்ன நடக்க போகுமோ?
என்று!
ஏனெனில்; அந்த குரல், பிசாசினால் பலகாலம் பீடிக்கப்பட்டுள்ள ஒரு மனிதனின் வாயில் இருந்து வந்த குரல்!

ஆனால்,

கனிவான பார்வை மற்றும் மென்மையான குரலில் நம் இயேசுவின் கட்டளை வெளிப்பட்டது!

அமைதியாயிரு!
அவனை விட்டு வெளியே போ! என்று...

என்ன ஆச்சரியம்!

அந்த மனிதனுள் இருந்த ஆவி, அலறிக் கொண்டு, ஆத்திரத்தில் அவனை கீழே தள்ளிவிட்டு புறப்பட்டு சென்றது!
சற்று நேரம் அமைதி! பின்பு எழுந்து உட்கார்ந்தான்! அந்த மனிதன் கட்டுகள் நீங்கி முழுமையாக!

எங்கும் ஆச்சரியக் கேள்விகள்!
இது என்ன வகையான கட்டளை?
அசுத்த ஆவிகளும் இவர் சொல்லுக்கு கட்டுப்படுகிறதே என்று!

ஒய்வெடுக்க அமைக்கப்பட்ட நாளில், அந்த மனிதனுக்கு உண்மையான ஓய்வு திரும்புகிறது!

ஏனெனில் ஓய்வுநாளுக்கும் ஆண்டவர் நம் கிறிஸ்து!


பாடம் முடிந்ததா?

இல்லை...

இது நாம் கேட்ட பாடம்..
இனி கேட்க இருக்கும் பாடம் தான் மிக அருமை!


பகுதி ஒன்று:

நமக்காக கடவுளின் வீட்டில் சுதந்திரம்!

நடந்துக் கொண்டிருப்பது! (இன்று)

நாமும் ஜெப ஆலயங்களில் தான் இருந்தோம்! சுதந்திரமாக...
அந்த பிசாசு பிடித்த மனிதனைப் போல...
என்ன?

ஆம் பிரியமானவர்களே..

நாமும் ஜெப ஆலயங்களில் இருந்தோம்! பாடல்கள் பாடினோம்! ஆனால், நம்மால் விடுபடமுடியாத சங்கிலிகளை சுமந்தோம்!

நாம் தொழுது கொள்ளும்படி உருவாக்கப்பட்டோம்; தெளிவான சிந்தனை, அமைதியான இதயம், ஒப்பு கொடுக்கப்பட்ட சித்தம்! ஆனால்; ஆகாயத்து (கெட்டுப்போன) அதிகாரங்களினால் நாம் திசை மாற்றப்பட்டோம்.

பாவத்தை கூட சரியென்று உணர்த்தும் தவறான போதனைகள்!

கீழ்படிதலை மாற்றும் மனித பாரம்பரியங்கள்!
நம்முள் விதைக்கப்பட்டது.

இந்த அசுத்த ஆவிகள்..நமக்கும் கற்றுத் தந்தது!

கிறிஸ்து பரிசுத்தர் என்று!

பாதி உண்மை;
பிசாசின் தந்திரம்!📌

ஆனால் கிறிஸ்துவுக்குள், முழுமையான அர்பணிப்பையும், கீழ்படிதலையும் கற்று தராமல் மறைத்தது

அவனின் தந்திரத்தில் சிக்கி, அந்த மனிதனை போலவே நாமும் அழிந்துக் கொண்டே வந்தோம்...

கிறிஸ்துவின் முழு உண்மையை அறியாமல்...

அப்போது தான்;

கர்த்தரின் தயவு நம்மை
சந்திந்தது!

சத்திய வார்த்தைகள் நம் இதய பிசாசுகளை விரட்டியது!

ஆயிரம் கேள்விகளுக்கு பிறகு, ஒரு கட்டத்தில் அமைதி!

உண்மை சத்தியங்கள் முன் தலைவணங்குதலை தவிர வேறு ஒன்றும் இல்லை நம்மிடம்!


ஆனால், பிசாசு விட்டு போகும் போது, அவனை பாடுபடுத்தி (அலைகழித்து) விட்டு சென்றது போல,

நம்மில் உள்ள அசத்திய பிசாசு நம்மை விட்டு செல்லும் போது நம்மை ஒரு வலிப்புக்குள் ஆழ்த்தியது உண்மை தான்!

எப்படி?

✨குடும்பத்தில் தனிமை!
✨நண்பர்களிடம் பிரிவு!
✨உண்மையாக நேசித்த உறவுகளிடம் வெறுப்பு!

இப்படியெல்லாம் அலைகழிக்கப்பட்டதால் நடுக்கம் நம்மில் வந்ததென்னவோ வாஸ்தவம் தான்!

ஆனாலும் கடந்து வந்தோம்! பொய் போதனைகளை விட்டு விலகி..

ஆனாலும் இன்னும் நாம் முழுமையடையவில்லை!

எப்படி?

பிசாசு பேசியது கிறிஸ்துவை பற்றிய உண்மைகளை... ஆனால் அதன் உள்ளமோ அவரை வஞ்சிக்கவே நினைத்தது!

நாமும் அப்படியா?

⚖️ சத்தியத்தில் வந்துவிட்டோம்..
ஆனால்;
கிறிஸ்துவின் சாயலாக மாற நாம் உண்மையில் முயற்சி செய்கிறோமா?
அல்லது;
வெறும் முகமூடியை மட்டும் முகத்தில் மாட்டிக் கொண்டு கிறிஸ்து அ(எ)வன் என்று திரிகின்றோமா?


உதட்டால் வேதத்தை போதித்துக் கொண்டு;
உள்ளமோ, பாவம், கசப்பு, வஞ்சகம், பொறாமை, ஒழுக்க கேடு, அதற்கு நமக்கு நாமே கற்பித்துக் கொள்ளும் நொண்டி சமாதானங்கள்!

கடவுள் தவறு என்றும் சொல்லியிருந்தும், அதனை மேற்க்கொண்டு, அவரின் கருணை நம்மை மன்னிக்கும் என்ற மதியீனம்!

இத்தனையும் உள்ளத்தில் ஒளிந்துள்ளதா?

நம்மை நாமே சீர்தூக்கி பார்க்க வேண்டியவைகள் இவைகளே!

நாம் கிறிஸ்துவோடு நிலைத்திருந்தால், நாம் அவரின் சீடர்கள்!

உண்மையில் சத்தியத்தை நாம் அறிந்துக் கொள்ளும் போது சத்தியம் நம்மை விடுதலை ஆக்கும்! (யோவான் 8:31;32)

வலிப்புக்கு பின் அந்த மனிதன் ஓய்வு பெற்றது போல நாமும்,
கிறிஸ்துவுக்குள் ஓய்வு பெறுவோம்...

நம்மை விட்டு அசுத்த செயல்கள் நீங்கும் போது;
நாமும் கிறிஸ்துவை போலவே, சொல்லிலும்; செயலிலும் பிரகாசிப்போம்!

அனைத்து காரியங்களிலும்; நல்லதையே பார்க்க ஆரம்பிப்போம்.

தீமைக்கும் நன்மை செய்யவே விரும்புவோம்!

சமாதானம் (ஓய்வு) இப்போது நம் இதயங்களில் ஆட்சி செய்கிறது.

நம் சமாதானம்; நம்மை சுற்றி இருப்பவர்களுக்கும் அமைதியைத் தருகிறது


பகுதி: இரண்டு
சமாதானமுள்ள இராஜ்ஜியத்திற்காக: (அனைவருக்கும்)
(நடக்கப்போவது: )

கிறிஸ்துவின் வெளியரங்கமான எதிர்கால இராஜ்ஜியத்தில் முழு உலகத்திற்க்கும் *சமாதானம் அதாவது ஓய்வு!*

எப்படி?இதை குறித்தும்...

முதல் ஓய்வுநாள் அடையாளத்தின் கீழ் நாம் எப்படி வாழ்வது?

மூன்று விஷயங்கள் மூலம் அவை விளக்கப்பட்டுள்ளன!
அவைகள்:
1. அமைதியாக இருங்கள்; வெளியே வாருங்கள்! என்ற குரலுக்கு கீழ்படிய தயாராகுதல்!
2. தவறான போதனைகள் நம்மை விட்டு நீங்க அனுமதித்தல்!
3. கிறிஸ்து நம்மை குணப்படுத்த ஒத்துழைத்தல்!

இவற்றை பற்றியும் விரிவான விளக்கங்கள் பாடத்தின் உள்ளே உங்களின் பார்வைக்காக...

இத்துடன்
என் எழுத்தின் பார்வையை முடித்துக் கொள்கிறேன்!


இரத்தினச்சுருக்கம்!

நம் கிறிஸ்து!
நேற்றும், இன்றும், என்றும் மாறாதவர்.
அவர் அளிக்கும் ஓய்வும் அப்படியே...
என்றும் மாறாதது!
ஏனெனில்;
அவர் *மகா பரிசுத்தரின்* *பரிசுத்தர்!*


கடவுள் தாமே கிறிஸ்துவுக்குள் நம்மை வழி நடத்தி, ஓய்வுக்குள் நம்மை அழைத்துச் செல்வாராக!
ஆமென்!



72. SABBATH SIGN 2 - Leviticus Ch. 23, Matthew 8:14-15, Mark 1-29-31, Luke 4:38-39


Sabbath Sign

Peaceful Sabbath Day - Part 5

The Miracle of the Sabbath - 2


Today we are going to briefly look at the **lesson of mercy!**

Even if it’s just a drop, honey… is still honey!

Shall we step into the lesson to taste it, beloved ones?


Today we are going to **Peter’s house** — with our Lord!
Why? Because Peter’s mother-in-law is lying sick with a **high fever!**


Our Lord went near her.
Gently took her hand and lifted her up.
He spoke to the sickness with **authority!**
What a wonder!

The fever completely left her…
She immediately got up and **began serving them!**


This act of mercy also happened on a Sabbath day!

Yesterday’s demon casting had at least some excitement!


But what’s so special about a simple fever?
That’s what our (my) mind tends to think...
until we see the **spiritual meaning of fever!**


Do you know what fever mostly represents in the Bible?

It’s a **symbol of God’s burning anger** against sin!
(Deuteronomy 28:22)

The woman represents the **descendants of Adam**, weak and helpless under the heat of God’s righteous judgment!

Because of Adam’s sin, the **disease of death** spread throughout the world!

The **infection of sin** separated mankind from the Holy Father!


We, who were meant to live in the **cool peace of Eden**, are now suffering under a **burning fever!**

Yes — it burns!

❤️‍🔥 Our **conscience**, burning with guilt!
❤️‍🔥 Our **hearts**, burning with lust!
❤️‍🔥 Our **temper**, burning with anger!

⚖️ God’s **judgment has begun...**
Through Adam… to us!

The descendants of Adam are burning like Peter’s mother-in-law!
Then came our **Great Physician!**

He **touched**, **spoke**, and **healed!**


♥️This is how our **Christ began our healing — on the Cross!**

♥️He entered into our fallen fever!

♥️In the Garden of Gethsemane, His sweat became drops of blood!
Why?

Because of the heat of the world’s sin pressing upon Him!

He bore the **fierce wrath of God** that came because of our sin!

He burned — but this fever was not caused by whips or the Cross!

It was the **spiritual fever** caused by the weight of the world’s sin and the wrath of God that burned upon it!

♥️He bore it! (our sin)

♥️He endured it! (on the Cross)

♥️He gave it! (His life)

♥️He saved! (mankind from sin)


Now, for your reflection...

What is the **mystery behind the touch** of Jesus?

What does the **Greek word “KLINE”** signify?

How will the **peaceful kingdom of Christ** be?

When and by whom will Christ — the **Anointed Lord by the Father** — be called “Master”?

Why is **Peter’s house** compared to the **redeemed Earth**?

All these things… are for you to dig out, beloved ones!

Dig carefully, so that none of the treasures scatter away!


Precious Summary:

True healing always leads to **service!**
Gratitude turns into **action!**
Salvation blossoms into **ministry!**

Let us give thanks to the **Heavenly Father**, who gave us our **Great Physician**, that our sickness may be healed and peace may bloom within us!

In the **name of Christ**, hear our prayer, loving Father!

Amen!



சமாதானமான ஓய்வு நாள் - பகுதி 5

ஓய்வு நாள் அற்புதம் - 2


இன்று இரக்கத்தின் பாடத்தை சுருக்கமாக பார்க்க இருக்கின்றோம்!

ஒரு துளி என்றாலும், தேன்.. தேன் தானே!

சுவைக்க பாடத்தினுள் செல்வோமா? பிரியமானவர்களே...


இன்று நாம் பேதுருவின் வீட்டிற்க்கு செல்லப்போகிறோம்! நம் ஆண்டவரோடு...
ஏன்? ஏனெனில் அங்கு பேதுருவின் மாமியார், கடும் காய்ச்சலில் சுருண்டு கிடக்கிறார்!


நம் ஆண்டவர் அவள்(ர்) அருகில் சென்றார்.
மென்மையாக அவள் கையை பிடித்து எழுப்பினார்.
அதிகாரத்துடன் வியாதியுடன் பேசினார்!
என்ன ஆச்சரியம்.

காய்ச்சல் முற்றிலும் அவளை விட்டு பறந்தது..
அவளும் எழுந்து பறந்தாள் அவர்களுக்கு சேவை செய்ய...


இந்த இரக்கத்தின் சம்பவம் நடந்ததும் ஓய்வு நாளில் தான்..

நேற்று பேய்களை விரட்டியதிலாவது ஒரு சுவாரசியம் இருந்தது!


காய்ச்சலில் என்ன புதுமையான காரியம் இருக்கப் போகிறது?
என்று நினைக்கும் நம் (என்) சிந்தையின் தலையில் குட்டு வைப்பது போல் உள்ளது..
காய்ச்சலின் ஆவிக்குரிய விளக்கங்கள்!


வேதாகமத்தில் பெரும்பாலும் காய்ச்சல் எதைக் குறிக்கிறது தெரியுமா?

பாவத்தின் மீதுள்ள கடவுளின் பற்றி எரிகிற கோபத்தின் அடையாளமாக உள்ளது!
(உபாகமம் 28:22)

அந்த ஸ்தீரி கடவுளின் நியாயத்தீர்ப்பின் உஷ்ணத்தின் கீழ் பலவீனமாகவும், உதவியற்ற நிலையிலும் இருக்கும் ஆதாமினால் பிறந்த இனத்தைக் குறிக்கிறது!

ஆதாம் செய்த பாவத்தினால் உலகம் முழுவதும் மரணத் தொற்று பரவிவிட்டது!

பாவ தொற்று பரம தகப்பனை விட்டே மனித குலத்தை பிரித்துவிட்டது!


இனிமையான குளிர்ந்த நிலையில் ஏதேன் தோட்டத்தில் வாழ்ந்திருக்க வேண்டிய நாம், இன்று எரியும் காய்ச்சலினால் அவதிபட்டுக் கொண்டிருக்கின்றோம்!

ஆம் எரிகிறது!

❤️‍🔥நம் மனசாட்சி குற்ற உணர்ச்சியால்!
❤️‍🔥ஆசை இச்சையால்!
❤️‍🔥கோபம் சீற்றத்தால்!

⚖️ கடவுளின் நியாயத்தீர்ப்பு தொடங்கிவிட்டது...
ஆதாமினால்... நமக்கும்!

தகித்துக் கொண்டிருக்கின்றது ஆதாம் பரம்பரைகள் பேதுருவின் மாமியாரைப் போல!
வந்தார் நம் மகா வைத்தியர்!

தொட்டார், பேசினார்! குணமாக்கிவிட்டார்!


♥️இப்படித்தான், நம் கிறிஸ்துவும், நமக்கான குணப்படுத்துதலை துவங்கினார், தன் சிலுவையில்!

♥️நம் வீழ்ச்சியடைந்த காய்ச்சலுக்குள் அவர் நுழைந்தார்!

♥️கெத்செமேனே தோட்டத்தில் அவரின் இரத்தம் வியர்வையாக பெருகிற்று!
ஏன்?

உலகத்தின் ஒட்டு மொத்த பாவம் அழுத்திய உஷ்ணம்!

நம் பாவத்தினால் கடவுளின் கோபத்தின் உக்கிரத்தை அவர் தாங்கினார்!

காய்ச்சலால் தகித்தார்.. சிலுவையிலும், சாட்டையடிகளினாலும் உண்டான காய்ச்சல் அல்ல இது!

ஒட்டு மொத்த உலகத்தின், பாவத்தினால் எரிகிற பாரத்தையும், அதன் மீது வருகின்ற கடவுளின் கோபத்தையும் தன் மீது சுமந்ததால் வந்த ஆவிக்குரிய காய்ச்சல்!

♥️சுமந்தார்! (பாவத்தை)

♥️தாங்கினார் (சிலுவையில்)

♥️கொடுத்தார் (தன் உயிரை)

♥️தப்புவித்தார் (மனித குலத்தை பாவத்திலிருந்து)


இனி உங்களின் பார்வைக்கு...

இயேசுவின் தொடுதலில் உள்ள இரகசியம் என்ன?

கிரேக்க வார்த்தையான க்ளைனே (KLINE) எதைக் குறிக்கிறது?

நம் கிறிஸ்துவின் சமாதான இராஜ்ஜியம் எப்படி இருக்கும்?

பிதாவினால் அபிஷேகம் பண்ணப்பட்ட ஆண்டவர் *(எஜமான்) என்று நம் கிறிஸ்துவை யார்? எப்போது? அழைப்பார்கள்!

பேதுருவின் வீட்டை, மீட்கப்பட்ட பூமிக்கு ஒப்பிட்டு பேசுவதன் காரணம் என்ன?

இவைகளெல்லாம், நீங்கள் தோண்டி எடுக்கத்தான்...
பிரியமானவர்களே...

கவனமுடன் தோண்டுங்கள்.. எந்த பொக்கிஷங்களும் சிதறாமல்...


இரத்தினச் சுருக்கம்:

உண்மையான குணப்படுத்துதல் எப்போதும் சேவைக்கு வழி வகுக்கிறது!
நன்றியுணர்வு செயலாகிறது!
இரட்சிப்பு ஊழியமாக பூத்துக் குலுங்குகிறது!

நம் வியாதியையும் நீக்கி, நமக்குள்ளும் சமாதானம் பூத்துக் குலுங்க, நம் மகா வைத்தியரை பரிசளித்த பரமதகப்பனுக்கு
நன்றிகளை ஏறெடுத்துக் கொள்வோம்!

கிறிஸ்துவின் நாமத்தினால் எங்கள் ஜெபம் கேளும்! அன்புத் தகப்பனே!

ஆமென்!



73. SABBATH SIGN 3(Leviticus Ch. 23, Matthew 12:9-14, Mark 3:1-6, Luke 6:6-11)




THE SABBATH OF PEACE (PART 6)
THE WONDER OF THE SABBATH - 3 (HEALING THE WITHERED HAND)


Are there so many spiritual truths hidden within this withered hand?
Truly, I was astonished!
You too will surely be astonished, beloved ones...

The very beginning will touch your heart...

It is the Sabbath today!
A group is waiting with a plot!
For our Lord...


Do you know why?

They had silently watched the two miracles our Lord Jesus Christ did on the Sabbath. Now, as if they had regained their senses,
they were waiting to accuse Christ—
that He had broken the Law!


Yes...
Who are they?
Who else?

The brood of vipers,
and whitewashed tombs — the Pharisees themselves!

Alright... what happened there?

Our Lord called before Him a man who had a withered hand.
Seeing the sharp, watchful eyes of those vipers, Jesus asked them a heart-touching question...


"Is it lawful on the Sabbath day to do good, or to do evil? To save life, or to destroy it?"


The Pharisees, with hardened faces and hearts, remained silent...
Grieved, Jesus turned toward the people.

There was a yearning in His eyes...
as if asking, “Will you at least answer?”

But no one spoke!

He looked around at them in anger,
grieved at their hardness of heart.

Then He said to the man with the withered hand, “Stretch out your hand!”
He obeyed and stretched it out.
His hand was completely restored — stronger and more alive than before!


If we think a little about why the word ‘obeyed’ appears here,

That man lived among those who believed that even stretching one’s hand to pick up a button fallen from the shirt on the Sabbath was a sin!

And around him stood the Pharisees...
What if he had feared men?
What would have happened?
But;
♥️ He placed his faith in Jesus, obeyed His words, stretched out his hand, and was healed!
Thus, today’s miracle ends!


What are the spiritual lessons we can learn from this?
What does the withered hand teach us?

❄️ The hands of Adam that once beautifully tended the Garden of Eden took the *“fruit given by Eve”* with his own hands and ate it, committing sin. Thus sin entered the world and made powerless the hands of all humanity!

❄️In the spiritual sense, man lost the ability and worthiness to serve God — his hands became inactive (withered) in divine service!


The Remedy: The same hands (of Adam) that committed sin were redeemed when our Lord’s wrists were pierced on the cross, and His blood was shed!

For disobedience — came the love of obedience.

The blood that flowed from the nails that pierced His hands cleansed the whole human race.

In the synagogue, that man could not stretch forth his hand by his own strength.
Likewise,
Without God’s grace, we too cannot serve Him, worship Him, or even approach Him.


Because;
❄️The withered hand of Adam represents our weakness.

Then:
For Israel, the high priest carried the blood of the sacrifice and obtained forgiveness from God for the people.

Now:
Our great High Priest, Christ, also carries His own precious blood before the Father, pleading for our redemption!

Then:

He said to that man, “Stretch out your hand!” — that call was not only for one man;

but for all the children of Adam.

Today:
First of all, it applies to the Church — His bride...


By the grace of Christ alone, the new creation can lift up holy hands without blame. (1 Timothy 2:8)

The hand once withered by sin now becomes a hand of service, comfort, and worship.

Now, the new creation itself has come for this healing.

Then:
In the coming Kingdom of Peace, all the hands of mankind, withered by sin, will be healed!

Today: The miracle that happened in the synagogue will one day become a worldwide miracle! (Isaiah 35:3–6)

Here I conclude my writing...


More wonderful lessons about these hands are waiting for you, beloved ones...

A PRECIOUS SUMMARY!
True rest comes only through redemption!

To make that known, our Great Physician chose the Sabbath day to heal — how compassionate He is!

O our Holy Father who dwells in the light of holiness...
For giving Your Son, who healed our withered hearts and weakened hopes,
restored, strengthened, and renewed them —
We praise You in the name of Christ!

Amen!




சமாதான ஓய்வு நாள் (பகுதி 6)
ஓய்வுநாளின் அற்புதம் -3 (சூம்பின கையை குணமாக்குதல்)


இந்த சூம்பின கைகளுக்குள் இவ்வளவு ஆவிக்குரிய சத்தியங்கள் மறைந்துள்ளதா?
உண்மையில் நான் ஸ்தம்பித்து தான் போனேன்!
நீங்களும் நிச்சயம் ஸ்தம்பிப்பீர்கள்! பிரியமானவர்களே...

ஆரம்பமே மனதை நெகிழ வைக்கப் போகிறது...

இன்று ஓய்வு நாள்!
ஒரு கூட்டம் சதி திட்டத்தோடு காத்திருக்கிறது!
நம் ஆண்டவருக்காக...


ஏன் தெரியுமா?

இரண்டு அற்புதங்களை, நம் இயேசு கிறிஸ்து ஓய்வு நாளில் செய்ததை வாயடைத்து பார்த்துக் கொண்டிருந்த அவர்கள், இப்போது தான் சுயநினைவுக்கு வந்திருக்கிறார்கள் போலும்,
நம் கிறிஸ்துவின் மேல் குற்றசாட்டு வைக்க...
நியாயபிரமாணத்தை மீறினார் என்று!


ஆமாம்..
யார் இவர்கள்?
வேறு யார்?

விரியன் பாம்பு குட்டிகளும்,
வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளுமான, பரிசேயர்கள் தான்!

சரி.... அங்கு நடந்தது என்ன...?

சூம்பின கையை உடைய ஒருவனை நம் ஆண்டவர், அவர் முன்னே வரவழைத்தார்..
விரியன் பாம்பு குட்டிகளின் கண்கள் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருப்பதைக் கண்ட இயேசு, அவர்களிடம் ஒரு நெகிழ வைக்கும் கேள்வியை கேட்டார்...


"ஓய்வுநாளில் நன்மை செய்வதோ; தீமை செய்வதோ? உயிரை காப்பதோ அல்லது அழிப்பதோ சட்டப்படி எது நியாயம்?


கடினமான முகத்துடனும், இருதயத்துடனும் இருந்த அந்த பரிசேயர்கள் பதில் அளிக்கவில்லை...
வேதனைப்பட்டு, ஜனங்களின் பக்கம் திரும்பினார்...

இயேசுவின் கண்களில் ஏக்கம்...
நீங்களாவது பதில் சொல்வீர்களா என்று...

ஆனால்.. ஒருவரும் பதில் சொல்லுவதாய் இல்லை!

அவர்களின்;
அன்பற்ற இருதயத்தைக் கண்டு கோபத்துடன், சுற்றி இருந்தவர்களை பார்த்தார்..

பின்பு;
சூம்பின கைகளை உடையவனிடம், உன் கையை நீட்டு! என்றார்!
அவனும் கீழ்படிந்து கைகளை நீட்டினான்!
அவன் கைகள் முழுமையாக குணமானது முன்பிருந்ததை விட பலத்துடனும், உயிர்ப்புடனும்!


இங்கு ஏன் கீழ்படிந்து என்ற வார்த்தை வந்தது என்பதை பற்றி சற்று சிந்தித்தோமானால்,

ஓய்வு நாளில் சட்டையிலிருந்து விழுந்த பொத்தான்களைக் கூட கை நீட்டி எடுப்பது பாவம் என்ற மனிதர்களின் மத்தியில் இருப்பவன் அவன்!

சுற்றிலும் பரிசேயர் கூட்டம் வேறு...
ஒருவேளை அவன் மனிதர்களுக்கு பயந்திருந்தால்..
என்னவாகி இருக்கும்?
ஆனால்;
♥️ விசுவாசம் இயேசுவின் மேல் வைத்தான். அவரின் வார்த்தைகளுக்கு கீழ்படிந்தான்! கைகளை நீட்டினான்! குணமாக்கப்பட்டான்!
சரி இன்றைய அற்புதம் முடிந்தது!


இதிலிருந்து ஆவிக்குரிய விளக்கங்கள் என்னென்ன?
சூம்பினக் கைகள் நமக்கு உணர்த்தும் பாடங்கள்!

❄️ ஏதேன் தோட்டத்தை அழகாக பராமரித்த ஆதாமின் கைகள் "ஏவாள் தந்த பழத்தை" தன் கைகளால் எடுத்து உண்டு; தவறு செய்ததால், பாவம் உலகத்தில் நுழைந்து; ஒட்டு மொத்த ஜனங்களின் கைகளையுமே செயலிழக்க வைத்து விட்டது!

❄️ஆவிக்குரிய விதத்தில் கடவுளுக்கு சேவைகள் செய்யும் தகுதிகளை இழந்து செயலற்ற (சூம்பின) நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது!


பரிகாரம்: எந்த (ஆதாம்) கைகள் தவறு செய்தததோ, அந்த கைகளின் விடுதலைக்காக, நம் ஆண்டவரின் மணிக்கட்டு சிலுவையில் அறையப்பட்டு இரத்தம் சிந்தியது!

கீழ்படியாமைக்கு,கீழ்படிதலின் அன்பு.

ஒட்டுமொத்த மனித குலத்தையும் சுத்தமாக்கியது; தன் கைகளில் அறையப்பட்ட ஆணியில் இருந்து வடிந்த இரத்தத்தால்...

ஜெப ஆலயத்தில் அந்த மனிதனால், தன் சொந்த பலத்தால் கைகளை நீட்ட முடியவில்லை.
இப்படிதான்;
நாமும் கடவுளின் கிருபை இல்லாமல், அவருக்கு சேவை செய்யவோ, ஆராதனை செய்யவோ அணுகவோ முடியாது.


ஏனெனில்;
❄️ஆதாமினால் வந்த சூம்பின கை நம் பலவீனத்தை சித்தரிக்கிறது.

அன்று:
இஸ்ரயேலருக்காக பிரதான ஆசாரியரின் கைகள் பலியின் இரத்தத்தை சுமந்து சென்று, அவர்களுக்கு கடவுளிடம் மன்னிப்பை பெற்றுத் தந்தது.

இன்று:
நம் மகா பிரதான ஆசாரியரான கிறிஸ்துவும் தம் கைகளில் சுமந்து செல்கிறார், தன் பரிசுத்தமான இரத்தத்தை நமக்கு பாவநிவாரணம் வழங்க வேண்டி பிதாவிடம்!

அன்று;

அந்த மனிதனைப் பார்த்து கைகளை நீட்டு என்றார்! அந்த அழைப்பு ஒருவனுக்கு மட்டுமல்ல;

ஒட்டுமொத்த ஆதாம் பிள்ளைகள் அனைவருக்குமே...

இன்று
முதலாவதாக சபை அதாவது தன் மணவாட்டிகளுக்காக...


கிறிஸ்துவின் கிருபையால் தான் புது சிருஷ்டி குற்றமின்றி தன் பரிசுத்த கரங்களை உயர்த்த முடியும். (1 தீமொத்தேயு 2:8)

பாவத்தால் சூம்பின கை, இப்போது, ஊழியம், ஆறுதல், ஆராதனைக்குரிய கைகளாக மாறுகிறது.

இப்போது; புது சிருஷ்டியே இந்த குணமாக்குதலுக்கு வந்துள்ளது.

பின்பு;
வரப் போகும் சமாதான இராஜ்ஜியத்தில், பாவத்தால் சூம்பி கிடக்கும் ஒட்டு மொத்த ஜனங்களின் கைகளும் குணமாக்கப்படும்!

இன்று; ஜெப ஆலயத்தில் நடந்த இந்த அற்புதம், அன்று உலகளாவிய அற்புதமாக மாறும்! (ஏசாயா 35: 3-6)

இத்துடன் என் எழுத்துக்களை நிறுத்திக் கொள்கிறேன்..


இந்த கைகளைக் குறித்து மேலும் அருமையான பாடங்கள் உங்களுக்காக காத்திருக்கின்றன...
பிரியமானவர்களே...

இரத்தினச் சுருக்கம்!
உண்மையான ஓய்வு மீட்பினாலே வருகிறது!

அதை உணர்த்தவே; ஓய்வுநாளை தேர்ந்தெடுத்து குணப்படுத்திய நம் மகா வைத்தியர் எவ்வளவு இரக்கம் உடையவர்!

பரிசுத்த ஒளியில் வாசம் செய்யும், எங்கள் பரிசுத்த பிதாவே...
இம்மட்டுமாய் உங்கள் குமாரனை தந்து, சூம்பி போன எங்கள் இருதயங்களையும், சூம்பி போன எங்கள் நம்பிக்கைகளையும்,
குணப்படுத்தி, திடப்படுத்தி, பலப்படுத்தியதற்க்காய்
உம்மை கிறிஸ்துவின் நாமத்தால் ஸ்தோத்தரிக்கிறோம்!

ஆமென்!



74. SABBATH SIGN 4 - The Healing at Bethesda (Luke Ch. 23, John 5:1-15)



THE SABBATH OF PEACE – PART 7
THE MIRACLE OF THE SABBATH – 4


TODAY WE STAND NEAR THE POOL OF BETHESDA TO LEARN THE SECRETS OF TODAY’S LESSON!


TODAY IS THE SABBATH DAY!

THIS IS THE FOURTH MIRACLE PERFORMED BY OUR LORD JESUS CHRIST!


WHAT IS IT?
CHRIST HEALED A MAN WHO HAD BEEN SICK AND WEAK FOR 38 YEARS, LYING HELPLESS ON HIS BED!


FIRST, THE PLACE WHERE THIS MAN WAS:
INSIDE THE WALLS OF JERUSALEM, NEAR THE SHEEP GATE, BY THE POOL OF BETHESDA SURROUNDED BY FIVE PORCHES!


THE SHEEP GATE:
THIS WAS AN ENTRANCE THROUGH WHICH SHEEP WERE BROUGHT INTO THE TEMPLE FOR SACRIFICE.

OUR CHRIST ALSO WALKED THROUGH THIS SAME GATE!

BECAUSE HE IS THE PERFECT LAMB OF GOD WHO TAKES AWAY THE SIN OF THE WORLD! (JOHN 1:29)

SO, THE MIRACLE THAT HAPPENED AT THE SHEEP GATE WAS NOT A COINCIDENCE!
IT SYMBOLIZES THE WORK OF REDEMPTION THAT BRINGS HEALING TO ALL CREATION!


THE POOL OF BETHESDA!

THE MEANING OF THE WORD “BETHESDA” IS “HOUSE OF MERCY.”

BUT THERE WAS A BELIEF CIRCULATING THERE...
THAT SOMETIMES, WHEN AN ANGEL STIRRED THE WATER, WHOEVER ENTERED FIRST WOULD BE HEALED.
BUT THERE IS NO STRONG PROOF FOR THIS!
IT WAS MORE OF A SUPERSTITION AMONG THE PEOPLE.

BUT WHAT ACTUALLY HAPPENED THERE?
WAS THAT MAN HEALED BY THE WATER?

NO!

WASN’T HE HEALED BY THE WORD OF OUR JESUS?

“TAKE UP YOUR BED AND WALK!”

WAS THE TRUE HEALING POWER IN THE WATER OR IN THE WORD OF GOD?

TRUE HEALING DOES NOT COME FROM STIRRED WATER;

IT COMES FROM THE LIVING WORDS OF GOD!


“FOR I HAVE COME DOWN FROM HEAVEN NOT TO DO MY OWN WILL, BUT THE WILL OF HIM WHO SENT ME.”
(JOHN 6:38)
“THE WORDS I SPEAK ARE NOT MY OWN, BUT THE FATHER’S WHO SENT ME! THE FATHER IS IN ME AND I AM IN HIM.”
(JOHN 10:38)
THIS IS THE HEARTBEAT OF OUR JESUS!


HOW ABOUT US TODAY?

ARE WE TRAPPED IN HUMAN WISDOM AND WORLDLY ILLUSIONS, THINKING THEY CAN HEAL US?
🫩🫩🫩

OR...

DO WE BELIEVE THAT ONLY THE LIVING WORDS OF THE ETERNAL GOD CAN HEAL US?


CHRIST SPOKE!
THE MAN FORGOT THE POOL!
HE BELIEVED! HE AROSE AND WALKED!


THE FIVE PORCHES:

IN SCRIPTURE, THE NUMBER FIVE OFTEN REPRESENTS THE LAW!
THE FIVE BOOKS OF MOSES!
BUT,

DID THAT LAW HEAL ANYONE?
NO...

THE HEALING CAME THROUGH CHRIST, WHO CAME THROUGH THE LAW!

WHAT THE LAW COULD NOT DO, OUR CHRIST DID!

WHERE THERE WAS NO STRENGTH, GRACE ENTERED IN! THAT IS THE PRESENCE OF OUR CHRIST!


THIRTY-EIGHT YEARS! DOES THAT NUMBER MEAN SOMETHING?
IT’S FOR YOU TO THINK ABOUT, BELOVED!

AND ALSO,

WHAT DOES THE MAN’S BED (MAT) THAT HE CARRIED SYMBOLIZE?

AND,

WHAT DOES THE “AGED WINE” MENTIONED IN ISAIAH 25:6 SYMBOLIZE?

AND HOW WILL THIS MIRACLE BE FULFILLED IN THE MILLENNIAL KINGDOM OF CHRIST FOR ALL MANKIND?

ALL THESE ARE BEAUTIFULLY EXPLAINED FOR YOU IN THIS LESSON!


PRECIOUS SUMMARY!
THE WATERS OF THIS WORLD (UNCLEAN BEHAVIOURS; FALSE TEACHINGS) CAN NEVER BRING PERMANENT HEALING TO MAN!

FAITH WITHOUT CHRIST!
KNOWLEDGE WITHOUT TRUTH!
EFFORT WITHOUT GRACE!

NONE OF THESE CAN EVER HEAL US!


DEAR HEAVENLY FATHER!
MAKE US SHEEP THAT LISTEN TO THE VOICE OF YOUR SON!
HELP US TO ALWAYS ROLL UP OUR MATS AND WALK IN FAITH ON THE PATH OF CHRIST, GUIDED BY YOUR HOLY SPIRIT!
IN JESUS’ NAME WE PRAY, FATHER...
AMEN!



சமாதான ஓய்வு நாள் - பகுதி -7
ஓய்வு நாள் அற்புதம் - 4


இன்று நாம் பெதஸ்தா குளத்தின் அருகே நின்று இன்றைய பாடத்தின் ரகசியங்களை அறிந்துக் கொள்ள போகிறோம்!


இன்று ஓய்வு நாள்!

நம் இயேசு கிறிஸ்து நிகழ்த்திய நான்காவது அற்புதம் இது!


என்ன அது?
38 ஆண்டுகளாக நோய்வாய்பட்டு, பலமிழந்து படுத்த படுக்கையாக கிடந்த ஒருவரை கிறிஸ்து
குணமாக்கிய அற்புதம்!


முதலில் அந்த மனிதன் இருந்த இடம்:
எருசலேமின் சுவர்களுக்குள், செம்மறியாட்டு வாயிலுக்கு அருகில் ஐந்து மண்டபங்கள் சூழப்பட்ட பெதஸ்தா குளத்தின் அருகே!


செம்மறியாட்டு வாசல்
இது பலிக்காக ஆடுகளை ஆலயத்திற்க்குள் கொண்டு வரப்படும் ஒரு நுழைவாயில்!

நம் கிறிஸ்துவும் இந்த வாசல் வழியாக தான் நடந்து வந்தார்!

ஏனெனில்; அவரே நம் பாவத்தை போக்க பரிபூரண பலியாகிய தேவ ஆட்டுக்குட்டி! (யோவான் 1:29)

எனவே செம்மறியாட்டு வாயிலில் நடக்கும் அற்புதம் தற்செயலானது அல்ல!
இது அனைத்து படைப்புகளுக்கும் குணமளிக்கும் மீட்பின் வேலையைக் குறிக்கிறது!


பெதஸ்தா குளம்!

இதன் அர்த்தம் கருணையின் வீடு!

ஆனால் இங்கு ஒரு கதை உலவி வந்தது...
சில நேரங்களில் ஒரு தேவதை தண்ணீரை கலக்கும் போது, அதில் இறங்கியவர்கள் குணமடைவார்களாம்.
ஆனால் இதைப் பற்றி உறுதியான ஆதாரம் இல்லை!
இது அந்த மக்களின் ஒரு மூடநம்பிக்கைக்கு
ஒரு காரணமாக இருந்தது.

ஆனால் அங்கு நடந்தது என்ன?
அந்த நீரினாலா அந்த வியாதியஸ்தன் குணமாகினான்?

இல்லை!

நம் இயேசுவின் வார்த்தையால் அல்லவா குணமாகினான்!

"உன் படுக்கையை சுருட்டிக் கொண்டு எழுந்து நட!"

உண்மையான குணப்படுத்தும் சக்தி நீரிலா? கடவுளின் வார்த்தையிலா?

சுகம் என்பது கலக்கப்பட்ட தண்ணீரில் அல்ல;

கடவுளின் ஜீவனுள்ள வார்த்தைகளிலிருந்தே வருகிறது என்பதையே இது உணர்த்துகிறது!


ஏனெனில் என் பிதாவின் சித்தத்தின்படி செய்யவே நான் பூமிக்கு வந்தேன்.
(யோவான் 6:38)
என் வார்த்தைகள் என்னுடையவை அல்ல! அது பிதாவை உடையது! நான் அவரிலும்; அவர் என்னிலும் இருக்கிறார்
(யோவான் 10:38)
என்பதே நம் இயேசுவின் இருதயத்தின் குரல்!


இன்று நாம் எப்படி?

மனித ஞானம், உலக மாயையில் சிக்குண்டு அவைகள் நம்மை குணமாக்கும் என்று நம்பிக் கொண்டு இருக்கின்றோமா?
🫩🫩🫩

அல்லது

நித்திய ஜீவனுள்ள கடவுளின் வார்த்தைகள் மட்டுமே நம்மை குணமாக்கும் என்று விசுவாசிக்கின்றோமா?


கிறிஸ்து பேசினார்! அவன் குளத்தை மறந்தான்!
விசுவாசித்தான்! எழுந்து நடந்தான்!


ஐந்து மண்டபங்கள்

வேதத்தில் ஐந்து என்ற எண் பெரும்பாலும் நியாய பிரமாணங்களை குறிக்கிறது!
மோசேயின் ஐந்து புத்தகங்கள்!
ஆனால்,

அதனால் மனிதர்கள் குணமானார்களா? என்றால்
இல்லை...

அதன் வழியாக வந்த நம் கிறிஸ்துவாலே, குணம் கிடைத்தது!

நியாயப் பிரமாணத்தால் செய்ய முடியாததை நம் கிறிஸ்து செய்தார்!

பலம் இல்லாத இடத்தில் கிருபை வந்து விட்டது. அது தான் நம் கிறிஸ்துவின் பிரசன்னம்!


38 வருடங்கள்! எதையாவது உணர்த்துகிறதா?
அவைகள் உங்களின் பார்வைக்கு பிரியமானவர்களே!

அதுமட்டுமல்ல;

அந்த மனிதன் சுருட்டிக் கொண்டு நடந்த அவன் படுக்கை (பாய்) எதை அடையாளப்படுத்துகிறது?

மேலும்
ஏசாயா 25:6 ல் சொல்லப்பட்ட பழமையான திராட்சை ரசம் எதைக் குறிக்கிறது என்பதையும்;

இந்த அற்புதம் எப்படி கிறிஸ்துவின் ஆயிரம் வருட அரசாட்சியின் ஒரு காலக் கட்டத்தில் மனித குலத்திற்க்கு நிறைவேறப் போகிறது?

என்பதை பற்றியும் விரிவான விளக்கங்கள்
உங்களுக்காக இந்த பாடத்தில்!


இரத்தினச் சுருக்கம்!
உலகத்தின் நீர் (அசுத்த நடத்தைகள்; தவறான உபதேசங்கள்) ஒருபோதும்.. மனிதர்களுக்கு நிரந்தர குணப்படுத்துதலை கொண்டு வர முடியாது!

கிறிஸ்து இல்லாத விசுவாசம்!
சத்தியம் இல்லாத ஞானம்!
கிருபை இல்லாத முயற்சி!

நம்மை ஒரு போதும் குணமாக்குவதில்லை!


அன்புள்ள பிதாவே!
உம் குமாரனின் சத்தத்திற்க்கு செவி கொடுக்கும் ஆடுகளாய் எங்களை மாற்றும்!
எந்நேரமும் எங்கள் பாயை சுருட்டிக் கொண்டு, கிறிஸ்துவின் பாதையில் விசுவாசித்து நடக்க உங்கள் பரிசுத்த ஆவியை தந்து வழி நடத்தும்!
இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம்! பிதாவே...
ஆமென்!



75. SABBATH SIGN 5 - (Leviticus Ch. 23, Luke 13:10-17)



(The Sabbath of Peace - Part 8)
The Miracle of the Sabbath - 5
(Leviticus Chapter 23)


Today is the Sabbath!

There was only one reason why the ruler of the synagogue was angry with our Christ — because this miracle was done on the Sabbath!

What miracle?
For eighteen long years, a woman was bound by Satan, bent over, able to look only at the dust on the ground. Jesus laid His hands on her and said,

“Woman, you are loosed from your infirmity!”

and immediately, she stood upright!


But for the ruler of the synagogue, the law was all he could see — not the mercy hidden within healing!
If only he had seen it, would he have spoken like that?


He said, “You could have done all this on six days... why on the seventh (the Sabbath)?”

To that, our Christ gave a sharp, whip-like reply!

“Hypocrite! On the Sabbath, don’t you lead your ox or donkey to give it water?”

“If you can show such kindness to an animal, why can’t you show mercy to this daughter of Abraham?
Should she not be set free on this Sabbath day?”

Then shame covered every face around!
They realized, “We opposed the wrong person!”
(Luke 13:10–17)

This was the fifth miracle our Christ did on the Sabbath!


Shall we go into the deeper meaning, dear ones?

Here, the tone of Christ’s words expressed not only compassion but also authority.

Do you know why?

This woman’s healing was not just physical; it was a declaration of freedom!

Because like her, humanity is bent down — burdened by sin brought through Satan — unable to lift their eyes toward Heaven!


The Backbone
Spiritually in Scripture, it represents faith!

If a man’s backbone is strong, he can stand upright!
Likewise, if our faith in God is firm, we can stand upright before Him and please Him!
(Hebrews 11:6)


But when sin enters, faith bends!

That’s how the whole world became — bent by the weight of sin, guilt, fear, and worldly cares that came through Adam!

Unable to lift our eyes toward Heaven, we’ve become earthly-minded!
We lost the blessing of unity with God, and now live just to survive — with a crooked spiritual spine!


The Number Eighteen

In the Bible, it often symbolizes bondage or oppression!
Scripture References:
(Judges 3:14 / 10:8)

So, the woman’s eighteen years of suffering were not a coincidence — it was a prophetic sign!

Yes! In Christ’s Kingdom of Peace, every bent spiritual backbone of humanity will be made straight!
(Isaiah 61:1)

The voice of Christ will again be heard: “You are set free!”

Then the whole earth will be healed!

On that Sabbath day, this woman entered into her rest (peace) — and soon, the world’s great Sabbath (peace) will begin!

Just as that woman stood upright and glorified God looking toward Heaven, so in the future every voice, by faith, will lift up praise to our Father!

This is the message of today’s Sabbath miracle!


Summary:
Sin bends us toward the dust — toward earthly things!

But;

Christ lifts our eyes toward Heaven — toward spiritual things!

His touch restores the backbone of our lives and leads us back to the Father!


Prayer:

Source of Life,
Our Heavenly Father — Abba! Thank You for giving us Your beloved Son so that we may receive the Spirit of adoption and cry, “Abba, Father!”
Amen!



(சமாதானத்தின் ஓய்வு நாள் - பகுதி 8)
ஓய்வு நாள் அற்புதம் - 5
(லேவியர் 23 ம் அதிகாரம்)


இன்று ஓய்வு நாள்!

நம் கிறிஸ்துவின் மேல் ஜெப ஆலயத் தலைவருக்கு ஒரே கோபம்! ஏனெனில் இன்று நம் கிறிஸ்து செய்த அற்புதம் ஒரு ஓய்வு நாளில்!

என்ன அற்புதம்?
18 வருடங்களாக சாத்தான் பிடியில் கட்டப்பட்டு முதுகெலும்பு வளைந்த நிலையில், தரையில் உள்ள தூசியை மட்டுமே காண முடிந்த ஒரு பெண்ணின் மீது தன் கைகளை வைத்து,

"ஸ்திரீயே உன் பலவீனத்திலிருந்து விடுவிக்கப்பட்டாய்!"

என்று கூறி அவள் கூனை நிமிரச் செய்தார்!


ஆனால், அந்த ஜெப ஆலயத் தலைவனுக்கு சட்டதிட்டங்கள் தான் கண்களுக்கு தெரிந்ததே தவிர...
குணப்படுத்துதலில் மறைக்கப்பட்டுள்ள கருணை கண்களுக்கு இன்னும் தெரியவில்லை!
அப்படி தெரிந்திருந்தால், அவன் இப்படி பேசியிருப்பானா?


இதையெல்லாம், ஆறு நாட்களில் செய்யலாமே..
ஏன் ஏழாம் நாள் (ஓய்வு நாள்) என்று கோபப்பட்டான்!

அதற்கு நம் கிறிஸ்துவின் சவுக்கடி பதில்!

மாயக்காரனே! ஓய்வு நாளில் தாகமாய் இருக்கும் உங்கள் கழுதைக்கோ, எருதுக்கோ நீங்கள் யாரும் தண்ணீர் காட்ட மாட்டீர்களா?

மிருகத்தின் மேல் காட்டும் அன்பை, இந்த ஆபிரகாம் குமாரத்தி மேல் ஏன் உங்களால் காட்டமுடியவில்லை?

அவளை நான் இந்த ஓய்வுநாளில் விடுதலை செய்ய வேண்டாமா?
என்று கேட்டார்.

சுற்றி இருந்த அனைவரின் முகங்களிலும் வெட்கம்!
இவரையா விரோதித்தோம் என்று!
(லூக்கா 13:10-17)

இது தான் நம் கிறிஸ்து செய்த ஓய்வுநாளின் 5 வது அற்புதம்!


பனித விளக்கத்திற்க்குச் செல்வோமா? பிரியமானவர்களே!

இங்கு கிறிஸ்துவின் வார்த்தைகளின் தொனி - இரக்கத்தை மட்டும் அல்ல அதிகாரத்தையும் பிறப்பித்தது.

ஏன் தெரியுமா?

இந்த பெண் குணமாக்கப்பட்டது வெறும் உடல்ரீதியான குணப்படுத்துதல் மட்டுமல்ல;
இது சுதந்திரத்தின் பிரகடனம்!

ஏனெனில், அந்த பெண்ணைப் போலவே,

உலகத்தின் மேலும் சாத்தானால் உண்டான பாவம் பீடித்து அவர்களின் முதுகெலும்பும் வளைந்த நிலை!

பரலோகத்தை நோக்கி கண்களை ஏறெடுக்க முடியாத நிலை!


முதுகெலும்பு
வேதத்தில் ஆன்மீகரீதியாக விசுவாசத்தை குறிக்கும்!

முதுகெலும்பு நன்றாக இருந்தால் தான் ஒரு மனிதனால் நிமிர்ந்து நிற்க முடியும்!

அதுபோல கடவுள் மேல் விசுவாசம் பலமாக இருந்தால் தான் நாமும் கடவுள் முன் நிமிர்ந்து நின்று அவரை பிரியப்படுத்த முடியும்!
(எபிரேயர் 11:6)


ஆனால்; பாவம் நுழையும் போது விசுவாசம் வளைகிறது!

இப்படித்தான் ஒட்டு மொத்த உலகமும், ஆதாம் வழி வந்த பாவம், குற்ற உணர்வு, பயம், உலக கவலை இவற்றின் எடையால் முதுகெலும்பு வளைந்த நிலையில் உள்ளது!

கண்களை பரத்துக்கு மேலாக உயர்த்த முடியாமல், பூமிக்குரியவர்களாகி விட்டோம்!
கடவுளுடன் ஐக்கியம் என்ற வரத்தை இழந்து, ஏதோ உயிர் வாழ்வதற்க்காக வாழ்கின்றோம்.. கூன் போட்ட முதுகுடன்!


பதினெட்டு என்ற எண்

பைபிளில் பெரும்பாலும் கொத்தடிமைத்தனம் அல்லது ஒடுக்குதலை குறிக்கிறது!
ஆதார வசனங்கள்:
(நியாயாதிபதிகள் 3:14/10:8)

எனவே அந்தப் பெண்ணின் 18 வருட துன்பங்கள் தற்செயலானது அல்ல;
அது ஒரு தீர்க்கதரிசன அடையாளம்!

ஆம்!
நம் கிறிஸ்துவின் சமாதான இராஜ்ஜியத்தில் அனைத்து மனிதகுலத்தின் வளைந்த முதுகெலும்பு சரி செய்யப்படும்!
(ஏசாயா 61:1)

கிறிஸ்துவின் குரல் அப்போது மீண்டும் ஒலிக்கும்!
நீங்கள் விடுவிக்கப்பட்டீர்கள் என்று!

அப்போது முழு பூமியும் குணமாகும்!

இந்த ஒய்வு நாளில் இந்த பெண்ணின் ஓய்வு (சமாதானம்) தொடங்கியது!

உலகத்தின் ஓய்வு (சமாதானம்) நாள் விரைவில் தொடங்க இருக்கிறது!

இன்று இந்த பெண் கூன் நிமிர்ந்து வானத்தை நோக்கி கடவுளை புகழ்ந்து மகிமைபடுத்தியது போல...

எதிர்காலத்தில் ஒவ்வொரு குரலும், விசுவாசத்தினால் நம் பிதாவை நோக்கி புகழ்ந்து பாடும்.

இதையே இன்றைய ஓய்வு நாளின் அற்புதம் விளக்குகின்றது!


இரத்தினச் சுருக்கம்!
பாவம் நம்மை தூசியை (பூமிக்குரியவைகளை)நோக்கி வளைக்கின்றது!

ஆனால்;

கிறிஸ்து நம் கண்களை பரலோகத்தை (ஆவிக்குரியவைகளை)நோக்கி உயர்த்துகின்றார்!

அவரின் தொடுதல் நம் வாழ்க்கையின் முதுகெலும்பை மீட்டெடுத்து, பிதாவிடம் சென்று சேர வழிவகுக்கிறது!


ஜெபம்!

உயிரின் ஊற்றுமூலரே..
எங்கள் பரலோகத் தந்தையே, அப்பா! பிதாவே என்று கூப்பிடும் புத்திர சுவீகார ஆவியை நாங்கள் பெற உங்கள் அன்பு மகனை தந்ததற்க்காய் உமக்கு கோடானகோடி நன்றிகள்!
ஆமென்!



76. SABBATH SIGN 6 - Leviticus Ch. 23, Luke 14:1-6


Edema

(SABBATH DAY OF PEACE – PART 9)
SABBATH DAY MIRACLE – 6
(HEALING OF DROPSY!)


TODAY IS THE SABBATH!
On this Sabbath day, our Lord Jesus Christ was invited to dine at the house of a Pharisee.

WHAT COULD BE THE REASON?

Love? Or a trap?

Alright! Let us see what happened today… come dear ones…

When our Lord entered the house of that Pharisee, He saw a man suffering from DROPSY standing before Him!

Every face there looked at Christ — with curiosity and with deceit…
Waiting to find a fault…


Because Christ is inside a PHARISEE’S HOUSE!
Catching Him would be very easy!

The crowd that stood amazed at the previous 5 miracles was not going to let Him go today!
A “fault” is still a fault on the Sabbath!

This was their argument! Their stubborn mindset!

So what exactly happened today?


The man with dropsy was seen by the EYES OF COMPASSION…
They moved toward him…
They looked at him with mercy…

Then our Lord turned to the Pharisees and the law-teachers and asked a question…

IS IT LAWFUL TO HEAL ON THE SABBATH, OR NOT?

They had no answer…


Then Christ touched the man with dropsy, healed him completely, and sent him away!


Then He asked those who were watching a second question:
If any of you had a donkey or an ox that fell into a pit on the Sabbath day, would you not immediately pull it out?

No one opened their mouth! Because every question was rightful and true!


Once again their heads hung before Christ in shame.


This is the event that happened on today’s Sabbath!
(LUKE 14:1–6)


WHAT ARE WE TO LEARN FROM THIS?
FIRST, WHAT IS DROPSY?

Dropsy is a condition where the unclean water that should exit the body remains inside due to issues in the heart, liver, or kidneys, causing swelling of the hands, legs, and face.

Simply put, sweat and urine do not leave the body but remain trapped within!

  • Your legs become heavy.
  • Your hands struggle to function normally.
  • Even breathing becomes a burden.

A silent suffering that begins from within!

This is dropsy!


In the same way, the whole of humanity is suffering from “dropsy” today!

Through Adam, sin entered our hearts and made them swollen…
But not with love — with PRIDE!

Self-importance, arrogance, selfish ambition—these have swollen the human heart!

Pride, bitterness, guilt, anger — like unclean water that never exits — have been stored inside, poisoning an entire life!


The miracle Christ did today is a SHADOW of what He will do for the entire world in the future!

THE GLOBAL HEALING CHRIST WILL BRING!

  • The pride and arrogance of human hearts will be removed!
  • Corruption and lies will be cleansed!
  • The poison of bitterness and guilt will be drained away!
  • The burden of sin will be removed!
  • Love and truth will be strengthened.
    This is beautifully said in ISAIAH 35:3–6!

We need not fear anymore; because the greatest Physician is with us!


These are only small notes…

The beautiful and detailed explanations await you in the lesson!


PRECIOUS SUMMARY!

  • The LAW cannot remove what is inside man!
  • ONLY GRACE CAN!
  • That grace hung on the cross and fulfilled both our sin and the law!
  • By HIS STRIPES we are healed!
  • By HIS TOUCH we are made whole!
  • The Sabbath is not just a day of peace;
  • It is the future peace of the ENTIRE WORLD!
  • To teach these truths, the miracles were done on the Sabbath day!

TODAY;
Peace was not only given to the heart of the healed man…

But in the future, to the entire human race…
SHALOM!


Glory be to God. Amen.



(சமாதான ஓய்வு நாள் - பகுதி 9)
ஓய்வு நாள் அற்புதம் - 6
(நீர்க்கோவை குணமாக்கப்படுதல்!)


இன்று ஓய்வுநாள்!
ஒரு பரிசேயர் வீட்டில் உணவருந்த நம் இயேசு கிறிஸ்து இன்றைய ஓய்வு நாளில் அழைக்கப்பட்டிருந்தார்.

காரணம் என்னவாக இருக்கும்?

அன்பா? அல்லது சூழ்ச்சியா?

சரி! இன்று நடக்கிறதை பார்க்கலாம்... வாருங்கள் பிரியமானவர்களே....

நம் ஆண்டவர், அந்த பரிசேயரின் வீட்டில் நுழைந்த போது, அங்கு நீர்க்கோவை வியாதியால் பாதிக்கபட்ட ஒரு மனிதன் அவருக்கு முன்பாக இருப்பதைக் கண்டார்!

அனைவரின் முகங்களும், ஆர்வத்தோடும், வஞ்சகத்தோடும் நம் கிறிஸ்துவையே பார்த்துக் கொண்டிருந்தன...
குற்றம் கண்டுபிடிக்க..


ஏனெனில்; நம் கிறிஸ்து இருப்பதோ பரிசேயர் வீட்டில்!
பிடிப்பதோ வெகு சுலபம்!

ஏற்கனவே 5 அற்புதங்களில் வாயடைத்து நின்ற கூட்டம், இன்று நம் ஆண்டவரை விடுவதாய் இல்லை!
குற்றம் குற்றம் தான் ஓய்வு நாளில்!

இது தான் அவர்கள் மனதின் வாதம்! ஆம் பிடிவாதம்!

சரி, இன்று நடந்தது தான் என்ன?


நீர்கோவை மனிதனை; கருணையின் கண்கள் கனிவுடன் கண்டன..
அருகில் சென்றன...
இரக்கத்துடன் பார்த்தன...

பின்பு திரும்பி பரிசேயர்களிடமும், நியாயப்பிரமாண ஆசாரியர்களிடமும் ஒரு கேள்வி கேட்டார் நம் ஆண்டவர்...

ஓய்வு நாளில் குணப்படுத்துவது நியாயமா? இல்லையா?

அவர்களிடம் பதில் இல்லை...


பின்பு நம் கிறிஸ்து, நீர்க்கோவை மனிதனை தொட்டு, அவனை முழுமையாக குணப்படுத்தி அவனை அனுப்பி வைத்தார்!


பின்பு இச்சம்பவங்களை பார்த்துக் கொண்டிருந்தவர்களிடம் மீண்டும் ஒரு கேள்வி? கேட்டார்...
உங்களில் யாருக்காவது, நீங்கள் ஆசையாய் வளர்த்த கழுதையோ, காளையோ ஓய்வுநாளில் கிணற்றில் தவறி விழுந்தால் நீங்கள் தூக்கிவிட மாட்டீர்களா?

ஒருவரும் வாயை திறக்கவில்லை!ஏனெனில் ஒவ்வொன்றும் நியாயமான கேள்விகள்!


இன்றும் அவர்களின் தலை நம் கிறிஸ்துவின் முன் தொங்கப்போட்டுக் கொண்டன.


இது தான் இன்றைய ஓய்வு நாளில் நடந்த சம்பவம்!
(லூக்கா 14:1-6)


இதிலிருந்து நாம் உணர்ந்துக் கொள்ளப் போவது என்ன?
முதலில் நீர்க்கோவை வியாதி என்றால் என்ன?

நம் உடலில் இருந்து வெளியேற வேண்டிய அசுத்த நீர், உடலின் உள்ளே பாதிக்கப்பட்ட இதயம், கல்லீரல், சிறுநீரகங்கள் இவற்றின் காரணமாக வெளியேறாமல் உடலில் தங்கி கை கால்கள் மற்றும் முகம் வீங்கி விடும் ஒரு நிலை தான் நீர்க்கோவை!

சுருங்கச் சொன்னால், வியர்வையோ, சிறுநீரோ வெளியேறாமல், உடலிலேயே தங்கிவிடுதல்!

  • இதனால், இவர்களின்
  • கால்கள் கனமாகும்.
  • கைகள் சுலபமாக வேலை செய்ய முடியாமல் தடுமாறும்
  • சுவாசிப்பது கூட பாரமாகி விடும்.

உள்ளிருந்து தொடங்கும் அமைதியான துன்பம்!

இது தான் நீர்க்கோவை!


இப்படிதான், ஒட்டு மொத்த மனித குலமும் நீர்க்கோவையால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றது!

ஆதாமினால் உள்ளே நுழைந்த பாவத்தால் இதயம் பெரிதானது..
ஆனால் அது அன்பினால் அல்ல; பெருமையினால்!

சுயமுக்கியத்துவம், மேட்டிமை, சுயலட்சியம்
இவற்றால் இருதயம் வீங்கிவிட்டது!

பெருமை, கசப்பு, குற்ற உணர்வு, கோபம் இவை வெளியேற்றப்படாத அசுத்த நீரைப் போல, உள்ளத்தில் சேமிக்கப்பட்டு, வாழ்க்கையையே விஷமாக்கி விட்டது!


இன்று நம் இயேசு கிறிஸ்து செய்த அற்புதம், எதிர்க்காலத்தில் முழு உலகத்திற்க்கும் அவர் செய்யப்போகும் காரியங்களுக்கு நிழலாக இருக்கிறது!

நம் கிறிஸ்து செய்யப்போகும் உலகளாவிய சுகப்படுத்துதல்!

  • மனித இருதயத்தின் பெருமை ஆணவம் நீக்கப்படுதல்!
  • ஊழல், பொய் களையப்படும்
  • கசப்பு மற்றும் குற்ற உணர்வின் விஷம் வெளியேற்றப்படும்.
  • பாவத்தின் பாரம் நீக்கப்படும்.
  • அன்பும், உண்மையும் பலப்படுத்தப்படும்.
    இதை தான் ஏசாயா (35:3-6) ல் மிக அருமையாக சொல்லட்பட்டுள்ளது!

இனி நமக்கு கவலை வேண்டாம்; ஏனெனில் ஒரு தலை சிறந்த மருத்துவர் நம் கூடவே இருக்கிறார்!


இவைகள் சிறு குறிப்புகள் தான்...

அழகிய விரிவான விளக்கங்கள் பாடத்தின் உள்ளே உங்களுக்காக!


இரத்தினச் சுருக்கம்!

  • மனிதனுக்குள் இருப்பதை நியாயப்பிமாணம் விடுவிக்க முடியாது!
  • கிருபையால் மட்டுமே முடியும்!
  • அந்த கிருபை சிலுவையில் தொங்கி, நம் பாவத்தையும், நியாயப்பிரமாணத்தையும் நிறைவேற்றியது!
  • அவரின் தழும்புகளினால் நாம் குணமானோம்!
  • அவரின் தொடுதலினால் நாம் சுகமாக்கப்பட்டோம்!
  • ஓய்வு நாள் ஒருநாளுக்குரிய சமாதானம் மட்டும் அல்ல;
  • வருங்காலத்தில் ஒட்டு மொத்த உலகத்தின் சமாதானம்!
  • இந்த சிறப்புகளை உணர்த்தவே அற்புதங்கள் ஓய்வுநாளில், நம் ஆண்டவரால் செய்யப்பட்டது!

இன்று;
சமாதானம் குணமாக்கப்பட்ட மனிதரின் இருதயத்தில் மட்டுமல்ல;

எதிர்காலத்தில் ஒட்டுமொத்த மனிதக் குலத்திற்க்குமே...
ஷாலோம்!


கடவுளுக்கு மாட்சி உண்டாவதாக. ஆமேன்



77. SABBATH SIGN 7 "Healing of the Blind Man" - Leviticus Ch. 23, John 9:1-41



PEACEFUL SABBATH – PART 10
SABBATH MIRACLE – 7
GIVING SIGHT TO THE MAN BORN BLIND!


That day;
Our Lord, while walking through Jerusalem with His disciples, saw a man who was blind from birth.

The disciples asked Jesus! Teacher...
WHOSE SIN CAUSED THIS MAN TO BE BORN BLIND?
THIS MAN?
OR HIS PARENTS?

WHY DID THEY ASK SO?


THE WAY JESUS CHRIST HEALED THAT MAN BORN BLIND:

🌿First, He spat on the dust of the ground.
🌿Then He mixed the two and made clay.
🌿Then He took that clay and applied it on the blind man's eyes.
🌿Then He told him, GO AND WASH IN THE POOL OF SILOAM!


WHY DID OUR LORD DO THIS?
Did that man receive sight?

Yes!
He received sight in a miraculous way!
But it stirred up a huge debate there.
WHY?
Because;

IT WAS A SABBATH DAY!


IN THIS LESSON, WE ARE GOING TO STUDY THE LAST MIRACLE OF THE SABBATH!

This is classified into three groups!
They are:
1. The people of Israel!
2. The Church!
3. The people of the world!

Also, under four headings, the explanations of the lesson are beautifully given!
1. The blindness of Israel!
2. The meaning of clay, spittle, Siloam!
3. The blindness of the Church before salvation!
4. The blindness of the world before the Kingdom!

Under these, wonderful truths are explained.


THE LIGHT THAT OPENED A MAN’S EYES IN JERUSALEM!

How? It contains a powerful prophecy! That is the purpose of today’s lesson!

Surely the explanations of these truths will leave us amazed without doubt!

Our loving Father, who keeps revealing wonderful spiritual lessons to His beloved children — what are we going to give Him in return?

Other than becoming conformed to the likeness of His Son...


O LOVING FATHER!

We are clay in Your hands!
Form us into children pleasing to You!
Amen!



சமாதான ஓய்வுநாள் - பகுதி 10
ஓய்வுநாள் அற்புதம் -7
பிறவி குருடனுக்கு பார்வையளித்தல்!


அன்று;
நம் ஆண்டவர், ஜெருசலேம் வழியாக தம் சீஷர்களுடன் நடந்து கொண்டிருக்கும் போது பிறவிகுருடன் ஒருவரை
கண்டார்.

சீஷர்கள் இயேசுவிடம் கேட்டார்கள்! போதகரே...
இந்த மனிதன் குருடனாய் இருப்பதற்க்கு யார் செய்த பாவம் காரணம்?
இந்த மனிதனா?
அல்லது அவனின் பெற்றோர்களா?

ஏன் அவ்வாறு கேட்டார்கள்?


இயேசு கிறிஸ்து, அந்த பிறவிக்குருடனை குணப்படுத்தும் முறைகள்:

🌿முதலில் தரையில் உள்ள மண்ணில் தன் எச்சிலை துப்புகிறார்.
🌿பின்பு அவ்விரண்டையும் குழைத்து சேறு உண்டாக்குகிறார்.
🌿பின்பு அந்த சேற்றை எடுத்து அந்த குருடரின் கண்களில் பூசுகிறார்.
🌿பின்பு அவனிடம் போய் சீலோவாம் குளத்தில் கழுவு! என்று சொல்கிறார்.


ஏன் இப்படி செய்தார் நம் ஆண்டவர்?
அந்த மனிதனுக்கு பார்வை கிடைத்ததா?

ஆம்!
அற்புதமான வகையில் பார்வை கிடைத்தது!
ஆனால் அது பெரும் விவாதத்தையும் அங்கே தூண்டியது.
ஏன்?
ஏனென்றால்;

அன்று ஓய்வு நாள்!


இந்த பாடத்தில், நாம் பார்க்க இருப்பது ஓய்வுநாளின் கடைசி அற்புதம்!

இது மூன்று பிரிவினருக்கு வகைப் படுத்தப்படுகிறது!
அவை:
1. இஸ்ரயேல் ஜனங்கள்!
2. திருச்சபை!
3. உலக மக்கள்!

மேலும்; நான்கு தலைப்புகளின் கீழ் பாடத்தின் விளக்கங்கள் மிக அழகாக கொடுக்கப்பட்டுள்ளது!
1. இஸ்ரயேலரின் குருட்டுத்தன்மை!
2. சேறு, துப்புதல், சீலோவாம், இவற்றின் பொருள்!
3. இரட்சிப்புக்கு முன் திருச்சபையின் குருட்டுத்தன்மை!
4. இராஜ்ஜியத்திற்க்கு முன் உலகத்தின் குருட்டுத்தன்மை!

இவைகளின் கீழ் மிக அருமையாக சத்திய விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.


எருசலேமில் ஒரு மனிதனின் கண்களை திறந்த ஒளி!

எவ்வாறு? ஒரு வலிமையான தீர்க்கதரிசனத்தை உள்ளடக்கியுள்ளது! என்பதை விளக்குவதே இன்றைய பாடத்தின் நோக்கம்!

நிச்சயம் இவைகளின் விளக்கங்கள், நம்மை வியப்பில் ஆழ்த்தும் என்பதில் சந்தேகமே இல்லை!

அருமையான ஆவிக்குரிய பாடங்களை, தன்னை அன்புடன் நேசிக்கும் பிள்ளைகளுக்காக வெளியரங்கப்படுத்தி வரும், நம் அன்பு தகப்பனுக்கு நாம் எதைக் கொடுக்கப் போகிறோம்?

அவரின் குமாரனின் சாயலாக மாறுவதைத் தவிர...


அன்பின் பிதாவே!

உமது கரத்தில் களிமண் நாங்கள்!
உருவாக்குமே எங்களை உமக்கு பிடித்த பிள்ளைகளாக!
ஆமென்!



78. FESTIVAL 1: PASSOVER - Leviticus Ch. 23


FESTIVAL 1: PASSOVER
The Night of Deliverance!
(Leviticus Chapter 23)


After the Sabbath; the festivals begin!

The seven festivals...
Among them, the first one is Passover


Why is this Passover festival so special?

Because it is the Lord’s own festival


; for He Himself appointed it so that His holy remembrance should always remain in the minds of His people!


Why should the Israelites remember God on this day?

Because;
--> God judged Egypt!

--> He delivered His people from the slavery of Egypt!

--> He protected the firstborn of the Israelites!

--> He broke the power of Pharaoh!

--> Therefore they must observe Passover so they will always remember this!


Okay, isn't observing it once enough?
No! On the 14th day of Nisan (Abib) every year, they must remember and observe this Night of Deliverance!
Generation after generation they must keep it!
It is an everlasting command for them!
(Exodus 12:14)


Is Passover a teaching festival?
Yes! Exactly!
Because whenever the children of the Israelites see this festival and ask, “What is this?”;

"This is the Lord’s Passover"
they must say;

and they must repeatedly teach how the Almighty protected the firstborn of Israel when they came out of Egypt!
(Exodus 12:26–27)


How should Passover be observed?

1. A one-year-old male lamb without blemish! (It may be a goat or a sheep)
2. It must be selected on the 10th day and killed on the evening of the 14th day.
3. Its blood must be applied on the doorposts.
4. The meat must be roasted with fire and eaten with unleavened bread and bitter herbs.
5. Not one of its bones should be broken.
Because in the shadow; that Passover lamb
In reality represents our Lord Jesus Christ, the Lamb of God!
(1 Corinthians 5:7)


Okay, how do we calculate the days?

For us, one day
starts at 12 A.M. midnight and ends at 12 P.M. midnight, right?

But;
For the Israelites, a day begins at 6 P.M. in the evening and ends at 6 P.M. the next day.

That is, it begins at sunset and ends at sunset.
Therefore they have "two evening times!"


To understand it more clearly;
The Passover lamb
must be kept until the 14th day. Then it must be killed before sunset!

That means, before the evening—before sunset (6 P.M.)—that is, *between the evenings* (P.M. to P.M.), the lamb must be killed!

Therefore, on the 14th day, before sunset at around 3 P.M., the Passover lamb must be killed!
(That is, between 3 P.M. and 6 P.M.)


Then after 6 P.M. on the 14th day, that night the meat must be eaten.

Since it is night, the 15th day has begun!
We must remember this!

Therefore, the 14th day sacrifice and the 15th day meal are both referred to as *Passover* in the Bible depending on the context.
(Numbers 28:16–17)


The Feast of Unleavened Bread also begins on the same night as the Passover meal!

Why was the Passover observed so precisely?
Because;
Passover is not just a festival;
God’s plan of redemption is hidden within it.


Where does salvation come from?
Whose blood saves?
Who alone can deliver?
Since these core truths are embodied in Passover,
it is a very special festival!

The beautiful and profound meanings of this…
will be explained to us even more clearly in the coming days!


May God bless us all!

Amen!



பண்டிகை 1 : பஸ்கா
விடுதலையின் இரவு!
(லேவியர் 23ஆம் அதிகாரம்)


ஓய்வுநாளுக்கு பிறகு; பண்டிகைகள் ஆரம்பமாகிறது!

ஏழு பண்டிகைகள்..
இதில் முதன்மையானது பஸ்கா


இந்த பஸ்கா பண்டிகை ஏன் சிறப்பு வாய்ந்தது என்பதன் காரணங்கள்:

இது கடவுளின் சொந்த பண்டிகை


; ஏனெனில் அவரின் பரிசுத்த நினைவை மக்கள் என்றும் நினைவில் வைக்க வேண்டும் என்பதற்காக அவரே நியமித்த பண்டிகை இது!


எதற்காக கடவுளை, இந்த நாளில் இஸ்ரயேலர்கள் நினைவில் வைக்க வேண்டும்?

ஏனெனில்;
--> கடவுள் எகிப்தை நியாயந்தீர்த்தார்!

--> எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து தன் மக்களை மீட்டார்!

--> இஸ்ரயேலர்களின் முதற்பேறானவர்களை (தலைச்சன் பிள்ளை) காப்பாற்றினார்!

--> பார்வோனின் அதிகாரத்தை முறித்தார்!

--> அவர்கள் எப்போதும் இதை நினைக்கும் வண்ணமாக பஸ்கா வை அனுசரிக்க வேண்டும்!


சரி, ஒருமுறை மட்டும் அனுசரித்தால் போதும் அல்லவா?
இல்லை! ஒவ்வொரு வருடமும் நிசான் (ஆபிப்) 14 ம் நாள் இந்த விடுதலை இரவை நினைவில் கொண்டு அனுசரிக்க வேண்டும்!
தலைமுறை; தலைமுறையாக கடைபிடிக்க வேண்டும்!
இது அவர்களுக்கு நித்திய கட்டளை!
(யாத்திராகமம் 12:14)


பஸ்கா ஒரு கற்பிக்கும் பண்டிகையா?
ஆம்! அவ்வாறு தான்!
ஏனெனில், ஒவ்வொரு இஸ்ரயேலர்களும், தங்கள் பிள்ளைகள் இந்த பண்டிகையைப் பார்த்து இது என்ன? என்று கேட்கும் போதெல்லாம்;

"இது கர்த்தருடைய பஸ்கா"
என்றும்;

எகிப்திலிருந்து இஸ்ரயேலர்களின் தலைச்சன்பிள்ளைகள் சர்வவல்லவரால் எப்படி காப்பாற்றப்பட்டார்கள் என்பதை பற்றியும் மீண்டும் மீண்டும் கற்பித்துக் கொண்டே இருக்க வேண்டும்!
(யாத்திராகமம் 12:26;27)


பஸ்காவை எவ்வாறு கடைபிடிக்க வேண்டும்?

1. பழுதற்ற ஒரு வயதான ஆண் ஆட்டுக்குட்டி!(வெள்ளாடு அல்லது செம்மறியாடாக இருக்கலாம்)
2. 10ம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டு, 14 ம் தேதி மாலையில் அடிக்கப்பட வேண்டும்.
3. அதன் இரத்தத்தை நிலைக்கால்களில் பூச வேண்டும்.
4. அந்த மாம்சத்தை நெருப்பினால் சுட்டு, புளிப்பில்லாத அப்பம், கசப்பான கீரையுடன் புசிக்கவேண்டும்.
5. அந்த ஆட்டின் ஒரு எலும்பும் முறிக்கப்படக் கூடாது.
ஏனெனில் நிழலில்; அன்றைய பஸ்கா ஆடு
நிஜத்தில் தேவ ஆட்டுக்குட்டியாகிய நம் இயேசு கிறிஸ்துவை குறிக்கிறது!
(1 கொரிந்தியர் 5:7)


சரி நாட்களை எப்படி கணக்கிடுவது?

நமக்கு ஒரு நாள்
இரவு 12 A.M.மணியில் ஆரம்பித்து 12 P.M. முடிகிறது அல்லவா?

ஆனால்;
இஸ்ரயேலர்களுக்கு ஒரு நாள் மாலை ஆறு (6 P.M.) மணிக்கு ஆரம்பித்து மறுநாள் மாலை ஆறு மணிக்கு (6 P.M.) முடியும்.

அதாவது சூரிய அஸ்தமனத்தில் ஆரம்பித்து சூரிய அஸ்தமனத்தில் முடிகிறது.
அதனால் அவர்களுக்கு "இரண்டு மாலை நேரங்கள் வரும்!"


இதை இன்னும் தெளிவாக எப்படி புரிந்துக் கொள்ளலாம் என்றால்;
பஸ்கா ஆட்டுக்குட்டி
14 ம் தேதி வரை வைத்திருக்க வேண்டும். பின்பு சூரிய அஸ்தமனத்திற்க்கு முன் அடிக்கப்பட வேண்டும்!

அப்படியென்றால் மாலையில் சூரிய அஸ்தமனத்திற்க்கு முன் (6 P.M) அதாவது *மாலைகளுக்கு இடையில்*( P.M.to P.M.) ஆடு அடிக்கப்பட வேண்டும்!

ஆகையால்; 14 ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு சூரிய அஸ்தமனத்திற்க்கு முன் பஸ்கா ஆடு அடிக்கப்பட வேண்டும்!
(அதாவது, மாலை 3p.m. to 6p.m.)


பின்பு 14 ம் நாள் மாலை 6 மணிக்கு பின்பு, அன்று இராத்திரியில் அந்த மாம்சத்தை உண்ண வேண்டும்.

இராத்திரி என்று வருவதால் 15 ம் தேதி ஆரம்பமாகி விட்டது!
என்பதை நினைவில் கொள்ள வேண்டும்!

அதாவது 14 ம் தேதி பலி மற்றும் 15 ம் தேதி உணவு இரண்டும் பைபிளில் சூழலைப் பொறுத்து *பஸ்கா* என்று அழைக்கப்படுகின்றன.
(எண்ணாகமம் 28:16;17)


பஸ்கா உணவை உண்ணும் இதே நாளில் தான் புளிப்பில்லாத அப்ப பண்டிகையும் ஆரம்பமாகிறது!

ஏன் பஸ்கா பண்டிகை இவ்வளவு நுட்பமாக அனுசரிக்கப்பட்டது?
ஏனெனில்;
பஸ்கா வெறும் பண்டிகை மட்டும் அல்ல;
கடவுளின் மீட்புப் திட்டம் இதில் அடங்கியுள்ளது.


இரட்சிப்பு எங்கிருந்து வருகிறது?
யாருடைய இரத்தம் காப்பாற்றுகிறது?
யாரால் மட்டுமே விடுதலை அளிக்க முடிகிறது?
என்பதன் சராம்சங்களை உள்ளடக்கியுள்ளதால்
இந்த பஸ்கா மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும்!

இதன் பனித அழகான அர்த்தங்கள் இனி வரும் நாட்களில்..
இன்னும் சிறப்பாக நமக்கு விளக்கப்படும்!


கடவுள் நம் அனைவரையும் ஆசிர்வதிப்பாராக!

ஆமென்!



79. FESTIVAL 1: PASSOVER 2 - Leviticus Ch. 23


Passover Festival! (Part - 2)
The Night of Deliverance! (Leviticus Chapter 23)


Are festivals important for man?

Yes! They are important!

That is why God asked the Israelites to observe seven great festivals!


But these are not festivals like the world celebrates; those start in the morning and end in the evening!

These are;
Festivals appointed by the One who is Light Himself!

This Light,
through these festivals, leads us on a spiritual journey toward God!

These seven festivals given by God are a divine roadmap that helps transform us from slavery into the likeness of God!


If you think,
“These festivals are only for the Israelites… not for us?”

Certainly not;

These festivals apply to TWO groups of people!

1. The new creation in Christ!
2. Humanity resurrected during the Kingdom of Peace!

Right now, we are going to focus only on the journey of the new creation!


Passover:

In the shadow; the blood of the Passover lamb protected the Israelites’ firstborn from destruction!

In reality; the blood of Christ, our Passover Lamb, first redeems the firstborn church! (the firstfruits)


Through the Passover festival, God did not only portray the escape from Egypt; He also hid the mystery of how the entire human race will ultimately be healed!

To receive deliverance from sin, the shedding of blood is necessary!


On that day, on the 14th day, the spotless Passover lamb was killed.
Its blood became the shield of protection for the Israelites’ firstborn!

Today; the innocent blood of Christ was shed for us to redeem us for Himself!


All blindness, sickness, and sin inherited from Adam were placed upon Christ, the Lamb of God!

As Isaiah 53:5 says, “He was wounded for our transgressions… by His stripes we are healed!”


On the 14th day, Christ stood in the place where we should have stood…
as the atoning sacrifice for our sins!


Why the 14th day?

14 = a double portion of perfection!
How?
7 + 7 = 14
We know that in Scripture, the number seven signifies perfection.
When two sevens are added, the perfection becomes double!


The 15th day = deliverance from Egypt!

In Scripture, Egypt represents this sinful world!
Meaning, it represents the world system that keeps us away from God!

Pharaoh represents the devil, the god of this age!

The works done in Egypt represent the old sinful nature that enslaved us!

The overseers of Egypt = the fallen angels!


What lessons does this teach us?

What is the significance of the 14th day?

Which event is called “a night to be observed unto the Lord”?

The answers to all these are hidden in this lesson!


Summary:
The seven festivals are seven steps that lead us back to our Creator!

The first step = Passover!
Because;
Without the shedding of blood, there is no salvation!


Prayer:

Loving Father, we thank You for Your grace that helped us step onto the first step!
Grant us Your holy power so that we may continue to climb step by step and finally reach Your feet!

Amen!



பஸ்கா பண்டிகை! (பகுதி -2)
விடுதலையின் இரவு! (லேவியர் 23ஆம் அதிகாரம்)


பண்டிகைகள் மனிதனுக்கு முக்கியமா?

ஆம்! முக்கியம் தான்!

அதனால் தான் கடவுள் இஸ்ரயேலர்களுக்கு ஏழு சிறந்த பண்டிகைகளை அனுசரிக்க சொன்னார்!


ஆனால் இது; இந்த உலகம் கொண்டாடும் பண்டிகை அல்ல; அவை காலையில் தொடங்கி மாலையில் முடிந்துவிடும்!

இது;
ஒளியே வடிவானவர் நியமித்த பண்டிகைகள்!

இந்த ஒளி,
இந்த பண்டிகைகள் மூலம் நம்மை ஒரு ஆன்மீக பயணத்தில் கடவுளை நோக்கிச் செல்ல வழி வகுக்கிறது!

அடிமைத் தனத்திலிருந்து தேவ சாயலாக மாற்ற உதவும் தெய்வீக வரைபடமே கடவுள் தந்த இந்த 7 பண்டிகைகள்!


இது இஸ்ரயேலருக்கு மட்டும் தானே...
நமக்கில்லையே என்ற யோசனை வருமாயின்...

நிச்சயம் அப்படியல்ல;

இந்த பண்டிகைகள் இரண்டு சாராருக்கு பொருத்தப்படுகிறது!

1. கிறிஸ்துவுக்குள்ளான புது சிருஷ்டிகளுக்கு!
2. சமாதான இராஜ்ஜியத்தில் உயிர்தெழுப்பபட்ட மனிதகுலத்திற்கு!

நாம் இப்போது கவனம் செலுத்த போவது; புது சிருஷ்டிகளுக்கான பயணத்தில் மட்டுமே!


பஸ்கா:

நிழலில்; தலைச்சன் பிள்ளை சங்காரத்தில் இருந்து பஸ்கா ஆட்டுக்குட்டியின் இரத்தம் இஸ்ரயேலர்களை மீட்டெடுத்தது!

நிஜத்தில்; நம் பஸ்கா ஆட்டுக்குட்டியான கிறிஸ்துவின் இரத்தமும் முதலில் மீட்டெடுப்பது, முதற்பேறான சபையைத் தான்! (தலைச்சன்பிள்ளை)


பஸ்கா பண்டிகையின் மூலம் கடவுள், எகிப்திலிருந்து தப்பித்தலை மட்டும் அல்ல; இறுதியில் ஒட்டு மொத்த மனித இனமும் எவ்வாறு குணமாக்கப்படும் என்பதின் ரகசியத்தையும் புதைபொருளாக வைத்துள்ளார்!

பாவத்திலிருந்து விடுதலை பெற வேண்டுமானால் இரத்தம் சிந்துதல் அவசியமாகிறது!


அன்று 14ம் நாளில் குற்றமற்ற பஸ்கா ஆட்டுக்குட்டி, கொல்லப்பட்டது.
அதன் இரத்தம் பாதுகாப்பு கேடயமானது! இஸ்ரயேலர்களின் தலைச்சன் பிள்ளைகளுக்கு!

இன்று; நம் கிறிஸ்துவின் குற்றமற்ற இரத்தமும் நமக்காக சிந்தப்பட்டது நம்மை அவருக்காக மீட்டெடுக்க!


ஆதாமினால் பெறப்பட்ட அனைத்து குருட்டுத்தன்மை, நோய் மற்றும் பாவம் நம் கடவுளின் ஆட்டுக்குட்டியான கிறிஸ்துவின் மீது வைக்கப்பட்டது!

ஏசாயா 53:5 ல் சொல்வது போல் நம் மீறுதல்களுக்காக அவர் காயமடைந்தார்...
அவருடைய தழும்புகளால் நாம் குணமடைகிறோம்!


14 ம் நாளில் நாம் நின்றிருக்க வேண்டிய இடத்தில் நம் கிறிஸ்து நின்றுக் கொண்டிருக்கிறார்..
நம் பாவ நிவாரண பலியாக!


ஏன் 14 ம் நாள் தேர்வு?

14 ம் நாள்= இரட்டிப்பான பரிபூரண நாள்!
எப்படி?
7 + 7 =14
வேதத்தில் ஏழு என்ற எண் பரிபூரணத்தை குறிக்கும் என்பது நாம் அறிந்ததே!
இரண்டு ஏழு சேரும் போது, பரிபூரணம் இரட்டிப்பாகிறது அல்லவா!


15 ம் நாள் எகிப்திலிருந்து விடுதலை!

வேதத்தில் எகிப்து இந்த பாவம் சூழ்ந்த உலகத்தை குறிக்கிறது!
அதாவது கடவுளிடமிருந்து நம்மை தூரமாக வைத்திருக்கும் உலக அமைப்பை குறிக்கிறது!

பார்வோன் இந்த பிரஞ்சத்தின் கடவுளான பிசாசை குறிக்கிறது!

எகிப்தில் உள்ள வேலைகள்; நம்மை அடிமைப்படுத்திய பழைய இயல்பை குறிக்கிறது!

எகிப்தின் மேற்ப்பார்வையாளர்கள் = கெட்டுப் போன தேவதூதர்களை குறிக்கிறது!


இதிலிருந்து நமக்கு சொல்லப்படும் பாடங்கள் என்ன?

14 ம் நாளின் சிறப்புகள் என்ன?

கர்த்தருக்கு முக்கியமாக ஆசரிக்க வேண்டிய இரவு! என்று அழைக்கப்பட்டது எந்த சம்பவம்?

இதற்க்கெல்லாம் பதில்கள் இந்த பாடத்தில் மறைந்துள்ளது!


இரத்தினச் சுருக்கம்:
ஏழு பண்டிகைகள் நம்மை படைத்தவரிடம் அழைத்துச் செல்லும் ஏழுபடிகள்!

அதில் முதல் படி = பஸ்கா!
ஏனெனில்;
இரத்தம் சிந்துதல் இல்லாமல் இரட்சிப்பு இல்லை!


ஜெபம்!

அன்பான பிதாவே, முதல் படியில் நாங்கள் அடியெடுத்து வைக்க உதவிய உமது கிருபைகளுக்காய் நன்றி!
அடுத்தடுத்த படிகளில் நாங்கள் முன்னேறி சென்று; உங்கள் பாதத்தண்டையில் வந்து சேர உமது பரிசுத்த வல்லமையை தந்து எங்களை வழிநடத்துவீராக!

ஆமென்!



20. FESTIVAL 2: UNLEAVENED BREAD 1



The 2nd Festival = The Feast of Unleavened Bread! (Leviticus 23)

The Journey Toward Holiness!


Shall we understand this lesson through a question–answer format?

When was the Feast of Unleavened Bread celebrated?

◻️Immediately after the last evening when the Passover sacrifice was offered on the 14th day of the first month Nisan (Abib), that is, right from the beginning of the evening of the 15th day...


Need a little more clarity?
◻️On the 14th, during the last evening—3 p.m. to 6 p.m.—the Passover lamb was slain.

Immediately at 6 p.m. on the 15th day, the Feast of Unleavened Bread begins.


How can we confirm this?

◻️From Exodus 12:8 — where it is written that the roasted Passover lamb must be eaten that same night along with unleavened bread and bitter herbs. This helps us understand the timing clearly!


Alright.. How many days must this feast be observed?

◻️Seven days!
From the 14th day up to the 21st day!

That is:
14 to 15 = 1
15 to 16 = 2
and so on…
Seven days!


How must it be observed?

◻️With unleavened, pure, flat bread.


Is it only bread for all seven days?

◻️No.. along with that, special offerings must also be presented. (Reference: Numbers 28:19–24)


Unleavened bread! Is there any special reason for this?

◻️Certainly!
In the Bible, leaven is often used as a symbol of sin and the works of the flesh!
Reference Verse: (1 Corinthians 5:6)

Therefore:
Unleavened bread = A symbol of sincerity, purity, and sinlessness!


Why should this festival be celebrated?

◽To remember with gratitude how Yahweh wondrously delivered the Israelites from the bondage of Egypt, and to worship Him!


Some questions for your further study:

  • What is a “Miqra Qodesh” (Holy Convocation)?
  • What were the things the Israelites must do and must not do during all seven days?
  • How did the Israelites, who departed from Egypt, offer these sacrifices and keep the festivals even before the Tabernacle and Altar were built?
  • What does it mean when it is said, “Separation is essential for salvation”?

Not only these; many more explanations await you in this lesson!

Are you ready to dive deep into the lesson to find the answers, beloved ones?


Prayer:

Our loving Father!

We thank You countless times for the biblical truths You continue to reveal to us, so that we may always rejoice in Your love!
We pray in the name of our Savior Jesus!
Our Heavenly Father!
Amen!



2 ஆம் பண்டிகை = புளிப்பில்லாத அப்ப பண்டிகை! (லேவியர் 23)

பரிசுத்தத்தின் வழியில் பயணம்!


இந்த பாடத்தை,  கேள்வி பதிலின் அடிப்படையில் புரிந்துக் கொள்ளலாமா?

புளிப்பில்லாத அப்ப பண்டிகை எப்போது கொண்டாடப்பட்டது?

◻️முதலாம் மாதம் நிசான் (ஆபிப்) 14 ல் பஸ்கா பலி செலுத்தப்பட்ட இறுதி சாயங்காலத்திற்க்கு பிறகு உடனே, அதாவது 15 ம் நாள் முதல் சாயங்கால தொடக்கத்தில்...


இன்னும் சற்று புரிதல் வேண்டுமா?
◻️14 ம் தேதி இறுதி சாயங்காலம் அதாவது 3.p.m. to 6 p.m. பஸ்கா ஆடு அடிக்கப்பட்டது.

உடனே 15 ம் தேதி 6.p.m புளிப்பில்லாத அப்பப் பண்டிகையும் தொடங்கப்படுகிறது.


இதை எப்படி உறுதி செய்யலாம்?

◻️யாத்திராகமம் 12:8 ல் பலியிடப்பட்ட பஸ்கா ஆட்டுக்குட்டியை சுட்டு அதன் மாம்சத்தை அன்று இரவே புளிப்பில்லாத அப்பம் மற்றும் கசப்பான கீரையுடன் புசிக்க வேண்டும் என்ற பதிவுகளின் மூலம் தெரிந்துக் கொள்ளலாம்!


சரி.. எத்தனை நாள் இந்த பண்டிகையை அனுசரிக்க வேண்டும்?

◻️ஏழு நாட்கள்!
14 ம் நாள் தொடங்கி 21 ம் நாள் வரை!

அதாவது;
14 to 15 =1
15 to 16 = 2
இப்படியாக
7 நாட்கள்!


எப்படி அனுசரிக்க வேண்டும்?

◻️புளிப்பில்லாத தூய்மையான தட்டையாக


ஏழு நாளும் அப்பம் மட்டும் தானா?

◻️இல்லை.. அதனுடன் கூட விஷேசித்த காணிக்கைகளையும் சேர்க்க வேண்டும். (பதிவுகள்
எண்ணாகமம் 28:19-24)


புளிப்பில்லாத அப்பம்! இதற்கு விசேஷ காரணம் ஏதாவது உண்டா?

◻️நிச்சயமாக!
வேதாகமத்தில் புளிப்பு எப்போதும் பாவத்துடனும், மாம்ச கிரியைகளுடனும் ஒப்பிட்டு பேசப்படுகிறது!
ஆதார வசனம்: (1 கொரிந்தியர் 5:6)

எனவே;
புளிப்பில்லாத அப்பம் = நேர்மை, தூய்மை மற்றும் பாவமின்மைக்கு அடையாளமாக உள்ளது!


ஏன் இதனை கொண்டாட வேண்டும்?

◽எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து இஸ்ரயேலர்களை அற்புதமாக பிரித்தெடுத்ததை நினைவு கூறி யாவே வைத் நன்றியுடன் தொழுது கொள்ளவே!


உங்களின் தேடலுக்காக சில கேள்விகள்?

  • மிக்ரா கொஷேத் என்றால் என்ன?
  • ஏழு நாட்களும் இஸ்ரயேலர்கள் செய்ய வேண்டிய, செய்யக் கூடாதவைகள் என்னென்ன?
  • எகிப்திலிருந்து புறப்பட்டு வரும் இஸ்ரயேலர்கள் எப்படி இந்த பலிகளை செலுத்தி பண்டிகைகளைக் கொண்டாடினார்கள்?அப்போது தான் ஆசரிப்புக் கூடாரமும், பலிபீடமும் இல்லையே?
  • இரட்சிப்பிற்க்கு பிரித்தல் அவசியம்! என்று சொல்லப்பட்டதன் விளக்கம் என்ன?

இவை மட்டும் அல்ல; இன்னும் பல விளக்கங்களும் பாடத்தில் உங்களுக்காக!

இதற்கான பதில்களை கண்டுபிடிக்க பாடத்திற்க்குள் ஆழ்ந்து செல்லத் தயாரா? பிரியமானவர்களே!


ஜெபம்:

எங்கள் அன்பின் பிதாவே!

உமது அன்பில் என்றும் நாங்கள் மனமகிழ்ச்சியாக இருக்க நீங்கள் எங்களுக்கு வெளிப்படுத்தி வரும் வேத சத்தியத்திற்க்காய் உமக்கு கோடி நன்றிகள்!
எங்கள் இரட்சகராம் இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம்!
எங்கள் பரம தகப்பனே!
ஆமென்!





Comments