பழைய ஏற்பாட்டில் நடந்தவை நமக்கு திருஷ்டாந்தமாகவும், எச்சரிப்பாகவும் எழுதப்பட்டுள்ளன. (1 கொரிந்தியர் 10:14)
இந்த பாடத்தில் நாம் 1 சாமுயேல் புத்தகத்தில் 1,2 மற்றும் 3ஆம் அதிகாரங்களில் உள்ள சம்பவங்களையும் அவற்றின் மூலமாக நாம் கற்று கொள்ள வேண்டிய பாடங்களை அறிய போகிறோம்.
1 சாமுயேல் 1,2, 3ஆம் அதிகாரங்களின் சுருக்கம்:
எல்கானவுக்கு 2 மனைவிகள். <li>1. அன்னாள்(பிள்ளை இல்லாமல் இருந்தாள்</li><li>2. பெனின்னா (புதல்வர் புதல்வியர் உண்டு)</li>
எல்கானா கடவுள் பக்தியுள்ளவராய் இருந்து, ஆண்டுதோறும் சீலோ என்னும் இடத்தில் ஆண்டவரை வழிபட்டு, பலியிட்டு வருவார். அங்கு குருவாக ஏலி இருந்தார். ஏலிக்கு இரண்டு மகன்கள் 1. ஒப்னி. 2. பினகாஸ்
ஒருநாள், அன்னாள் - குரு ஏலியின் கோவில் முற்றத்தில் ஆண்டவரிடம் மனம் கசந்து அழுது, ஒரு ஆண் பிள்ளை தருமாறும், அவ்வாறு ஆண் பிள்ளை தருவீரானால், அந்த பிள்ளையை அவன் வாழ்நாள் முழுவதும் ஆண்டவராகிய உமக்கு ஒப்புக் கொடுப்பேன், அவனது தலைமேல் சவர கத்தியே படாது" என்று வேண்டினாள்.
நம் பரமதந்தை, அன்னாளின் விண்ணப்பத்தை கேட்டு, ஒரு மகனை தந்தார்.
அன்னாள், நான் அவனை ஆண்டவரிடம் இருந்து கேட்டேன் என்று சொல்லி அவனுக்கு சாமுயேல் என்று பெயரிட்டார்.
சிறுவன் பால் மறந்ததும், அன்னாள், அவனை ஏலியிடம் அழைத்து சென்று ஆண்டவருக்கு அர்ப்பணித்தாள்.
ஆனால், ஏலியின் இரு மகன்கள், ஒப்னியும், பினாகாசும் கீழ்தரமானவர்களாக இருந்தார்கள். வாசிக்கவும் 1 சாமுயேல் 2:12-17, 22-25.
Comments
Post a Comment