FAITH COMES FROM HEARING. ROMANS 10:17



[29] எகிப்துக்கு போன இஸ்ரயேலர்களின் தொகை

👨👩👦👦 விசுவாச குடும்பத்தாரே 🙏

🪐🪐 இன்று ஒரு தகவல் அறிந்து கொள்வோம்🪐🪐 

 எகிப்துக்கு போன இஸ்ரயேலர்களின் தொகை

ஆதி 46:26 - யாக்கோபுடைய குமாரரின் மனைவிகளைத் தவிர, அவனுடைய கர்ப்பப்பிறப்பாயிருந்து அவன் மூலமாய் எகிப்திலே வந்தவர்கள் எல்லாரும் அறுபத்தாறுபேர் - 66

ஆதி 46:27 - யோசேப்புக்கு எகிப்திலே பிறந்த குமாரர் இரண்டுபேர்; ஆக எகிப்துக்குப் போன யாக்கோபின் குடும்பத்தார் எழுபதுபேர் -70

அப் 7:14 - பின்பு யோசேப்பு, தன்னுடைய தகப்பன் யாக்கோபும் தன்னுடைய இனத்தார் யாவருமாகிய, எழுபத்தைந்து -75 பேரை அழைக்க அனுப்பினான்.

70 பேர்:
   1. ரூபன்
2. ஆனோக்கு, 
   3. பல்லுூ, 
4. எஸ்ரோன், 
5. கர்மீ.
6. சிமியோன்
7. எமுவேல், 
8. யாமின், 
9. ஓகாத், 
10. யாகீன், 
11. சொகார்,  
12. சவுல் ( கானானிய ஸ்திரீயின் குமாரன் )
13. லேவி
14. கெர்சோன் 
15. கோகாத், 
16. மெராரி.
17. யூதா
18. ஏர்,(late)
19. ஓனான் (late)
20. சேலா, 
21. பாரேஸ் மற்றும் அவருடைய குமாரர்
22. எஸ்ரோன்
23. ஆமூல் .
24. சேரா 
25. இசக்கார்
26. தோலா, 
27. பூவா, 
28. யோபு
29. சிம்ரோன்.
30. செபுலோன்
31. செரேத் 
32. ஏலோன், 
33. யக்லேல்
34. சகோதரி தீனாள் 

சிமியோனின் குமாரர்களில், ஓகாத் மற்றும் சொகார் இருவரும் ஒரே நபர்கள். (Ohad and Zohar: 'd' and 'r' can be replaced)
1 நாளா 4:24 - சிமியோனின் குமாரர், நெமுவேல், யாமின், யாரீப், சேரா, சவுல் என்பவர்கள்.

எனவே, ஒருவரை நாம் நீக்கினால் இதுவரை உள்ள தொகை 33. 

34. காத்
35. சிப்பியோன்,
36. அகி, 
37. சூனி, 
38. எஸ்போன், 
39. ஏரி, 
40. அரோதி, 
41. அரேலி.
42. ஆசேருடைய
43. இம்னா, 
44. இஸ்வா, 
45. இஸ்வி 
46. பெரீயா மற்றும் அவருடைய குமாரார்
47. ஏபேர், 
48. மல்கியேல்
49. சகோதரி செராக்கு 
50. யோசேப்புக்கு  
51. மனாசேயும் 
52. எப்பிராயீமும்
53. பென்யமீன்
 54. பேலா, 
55. பெகேர், 
56. அஸ்பேல், 
57. கேரா, 
58. நாகமான், 
59. ஏகி, 
60. ரோஷ், 
61. முப்பிம், 
62. உப்பிம், 
63. ஆர்து 
64. தாண்
65. உசீம்
66. நப்தலியின்
67. யாத்சியேல்,
68. கூனி,
69. எத்சேர், 
70. சில்லேம் .

ஆதியாகமம் 46:8-25

66 பேர்:

18. ஏர்
19. ஓனான்  
51. மனாசே 
52. எப்பிராயீம்  

இவர்களில் இருவர் ஏற்கனவே மரித்தனர். இருவர் எகிப்தில் பிறந்தவர்கள். ஆகையால் இவர்கள் கணக்கில் வரவில்லை. 

70-4 = 66

75 பேர்
2 கோணங்கள் உள்ளன:

_கோணம் 1:_ 
ஆதியாகமம் 46:27 வசனத்தை நாம் Septuagint Bible ல் வாசிக்கும் போது, 75 என்று உள்ளதை காணமுடியும். ஸ்தேவான் இருந்த காலத்தில் பயன்படுத்தப்பட்டது இந்த Septuagint Bible. இதன் காரணமாகவே ஸ்தேவான் 75 என்ற எண்ணை குறிப்பிட்டுள்ளார்.

_கோணம் 2:_ 
யோசேப்பின் குமாரர்களான மனாசே, எப்பிராயீம் ஆகியோர்களின் குமாரர்கள் மற்றும் அவர்களின் குமாரர்களான 9 பேரை சேர்த்தால் 75 பேர்(66+9). (1 நாளா 7:14-21)

1. யோசேப்பு
2. மனாசே
3. மாகீர்
4. யாவீர்
5. எப்பிராயீம்
6. சுத்தெலாக்
7. பேரேத்
8. தாகாத்
9. எலாதா

📓 📓 📓 📓 📓 📓 📓

 கிறிஸ்துவுக்குள்

Comments

Post a Comment